மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்
வாஷிங்டன்:பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரே லுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளா க போ ர் நடந்து வருகிறது . இப்போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றன. இதற்கிடையே, பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில், இஸ்ரேல் குடியேற்றங்களை அமைத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரவும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுக்கவும், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாவது: பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியை இஸ்ரேலுடன் இணைக்க நான் அனுமதிக்க மாட்டேன், அது நடக்க போவதில்லை. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இது. பிணைக் கைதிகளை திரும்பப் பெறுவது மற்றும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் விரைவில் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.