வாசகர்கள் கருத்துகள் ( 2 )
லஞ்ச ஒழிப்பு எந்த அரசாளும் முடியாதது
பணம் என்கின்ற மாயையில் மாட்டிக்கொள்ள ஒரே க்யூ. முதல்நாள் பட சினிமா டிக்கெட் மாதிரி கூட்டம். அட கடவுளே ! இவர்கள் திருந்தி மக்கட்கு நல்லது செய்வது எப்போது கடவுளே ?
இஸ்லாமாபாத்: ஊழல் புகாரில் தன் நாடு தேவையில்லாமல் அவதுாறுக்கு உள்ளாகி வருவதாகவும், ஆனால் இஸ்ரேலிடமிருந்து வெளிப்படையாகவே அமெரிக்கா லஞ்சம் பெற்று வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், தன் நாட்டு அதிகாரிகளுக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசு அதிகாரிகள் பெருமளவு பணத்தை, கருப்புப் பணமாக ஐரோப்பிய நாடான போர்ச்சுகலுக்கு மாற்றுவதாக அவர் கூறினார். இந்நிலையில், பாகிஸ்தானில் வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் அதிகரித்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் கவாஜா ஆசிப் விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: லஞ்சம் வாங்கியதற்காக நாங்கள் அவதுாறுக்கு உள்ளாகிறோம். எங்கள் நாட்டிலாவது லஞ்சம், ஊழல் மறைமுகமாக நடக்கிறது. ஆனால் அமெரிக்க அரசியல்வாதிகள் மேற்காசிய நாடான இஸ்ரேலிடமிருந்து வெளிப்படையாகவே லஞ்சம் பெறுகிறார்கள். அரசியல் நிதியுதவி என்ற போர்வையில் அமெரிக்கா அத்தகைய லஞ்ச நடைமுறைகளை நிறுவன மயமாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
லஞ்ச ஒழிப்பு எந்த அரசாளும் முடியாதது
பணம் என்கின்ற மாயையில் மாட்டிக்கொள்ள ஒரே க்யூ. முதல்நாள் பட சினிமா டிக்கெட் மாதிரி கூட்டம். அட கடவுளே ! இவர்கள் திருந்தி மக்கட்கு நல்லது செய்வது எப்போது கடவுளே ?