உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்ட விரோதமாக தங்கினாரா தொழிலதிபர் எலான் மஸ்க்?

சட்ட விரோதமாக தங்கினாரா தொழிலதிபர் எலான் மஸ்க்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சட்ட விரோத குடியேற்றத்துக்கு எதிரானவரும், அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் ஆதரவாளருமான தொழிலதிபர் எலான் மஸ்க், தன் தொழில் வாழ்க்கையின் துவக்கத்தில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக பணியாற்றியதாக, 'தி வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்துள்ளது.உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக, எலான் மஸ்க் உள்ளார்; 'ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ், டெஸ்லா' போன்ற பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான இவர், சட்ட விரோத குடியேற்றத்துக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்பின் ஆதரவாளராகவும் எலான் மஸ்க் உள்ளார். இந்நிலையில், பிரபல நாளிதழான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி:தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க், 1995ல், ஸ்டான்போர்ட் பல்கலையில் படிப்பை நிறுத்தி விட்டு, அமெரிக்காவின் 'ஜிப் 2' என்ற நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் வேலை செய்தார். இது அவரது முதல் வேலை. இந்த கால கட்டத்தில், முறையான அங்கீகாரம் இல்லாமல் எலான் மஸ்க் பணிபுரிந்துள்ளார். 1997ல், அமெரிக்காவில் பணி செய்வதற்கான அங்கீகாரத்தை அவர் பெற்றார். மாணவர் விசாவில் அவர் அமெரிக்காவில் இருந்தாலும் அது சட்ட விரோதமானது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.சட்ட விரோத குடியேற்றத்துக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் எலான் மஸ்க், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி வேலை செய்ததாக, தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anand
அக் 28, 2024 10:24

அதை விடுங்க பாஸ், டெல்லி கோமாளி உண்மையிலேயே இந்தியனா அல்லது சட்டவிரோதமாக தங்கி இந்திய மக்களின் வயிற்றில் அடித்து சுகபோகமாக வாழும் அந்நியனா?


Ganesun Iyer
அக் 28, 2024 10:47

கஜரிவாளதான சொல்றிங்க .... கிரிப்டோங்க இப்படிதான் வயித்தெரிச்சல் புடிச்சவங்கலாமே...


sankaranarayanan
அக் 28, 2024 10:03

ட்ராம்போட ஆதரவாளர் எப்படி அய்யா இருப்பார்? நூலைப்போல சேலை அப்படித்தான் இருக்கும் இன்னும் போக போக நிறைய திடுக்கிவிடும் விஷயம் வெளிவரும்


RAJ
அக் 28, 2024 07:10

இப்போ என்ன அதுக்கு??? திருடன் திருந்தக் கூடாதா???


rama adhavan
அக் 28, 2024 07:07

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை டிரம்ப்க்கும் அவரது கட்சிக்கும் எதிர். ஹாரிஸ் கட்சிக்கு ஆதரவு. எனவே இது போன்ற கதைகளை அமெரிக்கா தேர்தல் நேரத்தில் பரப்புகிறது. ஆனால் ஹாரிஸ் வெற்றி பெறுவது சந்தேகம் தான்.


R K Raman
அக் 28, 2024 08:31

அப்படி என்றால் அது நம் நாட்டிற்கு நல்லதே


ஜெய்ஹிந்த்புரம்
அக் 28, 2024 06:31

அது வெறும் தக்காளி சட்னி தான். ரத்தம் இல்லை.


lasica
அக் 28, 2024 06:09

Student visa allows visa holders to work on a job while studying or until the visa expires usually 2-3years after the graduation.


Kasimani Baskaran
அக் 28, 2024 05:13

பல லட்சம் பேர் இது போல அங்கு கள்ளக்குடியேறிகளாக இருந்து அதன் பின்னர் குடியுரிமை பெற்றவர்கள்.


சமீபத்திய செய்தி