உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் தொடங்கியது வெளியேற்றம்; ஆர்மீனியா எல்லையை நோக்கி நகரும் இந்தியர்கள்

ஈரானில் தொடங்கியது வெளியேற்றம்; ஆர்மீனியா எல்லையை நோக்கி நகரும் இந்தியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்; ஈரானில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.ஈரானின் அணுசக்தி திட்டத்தால் அச்சுறுத்தல் என்று கருதிய இஸ்ரேல், அந்நாட்டின் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3 என்ற பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை வேகப்படுத்தி இருக்கிறது.தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளதால் டெஹ்ரானில் இருந்து ஈரான் மக்கள் வெளியேற வேண்டும் என்று அந்நாடும், டெல் அவிவ்வில் இருந்து மக்களும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலும் அறிவித்துள்ளன. தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந் நிலையில், இஸ்ரேலில் இருந்து இந்திய குடிமகன்களை வெளியேற்றும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. ஆர்மீனியா வழியாக இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், ஈரானின் பல்வேறு இடங்களில் உள்ள 100க்கான இந்திய குடிமகன்களில் குறிப்பாக மாணவர்கள் ஆர்மீனியா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆர்மீனியாவுக்குள் நுழைந்த பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து பத்திரமாக இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது.இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறி இருப்பதாவது; டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், நிலைமைகளை கண்காணித்து வருகிறது. தூதரக வசதியுடன் மாணவர்கள் ஈரானுக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். இந்த நடவடிக்கைகள் மேலும் தொடரும். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.ஈரானில் தற்போதுள்ள சூழலில் கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட இந்திய மக்கள் வசிக்கின்றனர். அதே போல இஸ்ரேலில் 26,000 இந்தியர்கள் இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R Mohan
ஜூன் 17, 2025 21:28

உண்மை


Training Coordinator
ஜூன் 17, 2025 15:14

மாட்டு கோமியம் ஊற்றி வண்டி ஓட்டுவார்கள், ஏதாவது உளறாதே.


தஞ்சை மன்னர்
ஜூன் 17, 2025 11:23

இப்படி ஹாயா உட்கணர்த்து கருத்து போட முடியாது பரவாயில்லையா


Nethiadi
ஜூன் 17, 2025 09:02

ஒழிந்தால் நல்லது.


Chandrasekaran Balasubramaniam
ஜூன் 17, 2025 08:47

அதே போர்க்களம் காணும் நாடு. அங்க ஏன் இவனுக போகணும். இந்திய அரசாங்கம் ஏன் அவனுகளை அங்கே போக அனுமதிக்கிறது. பெரும்பாலும் உள்ள முஸ்லீம் நாடுகளில் ஏதாவது ஒரு வகையில் போர் இருந்துகொண்டே இருக்கிறது. எனவே இனிமேல் இங்குள்ள மக்களுக்கு அங்கு போக தடை விதிக்க வேண்டும். மேலும் சில நம் தேச விரோதிகள், மாணவர்கள் போல அங்கு சென்றுகூட சேர்ந்து தேச விரோத செயல்களில் ஈடுபடலாம்.


தஞ்சை மன்னர்
ஜூன் 17, 2025 11:25

என்ன இப்படி உளரிப்பூட்டிய இந்தியாவின் அந்நிய செலாவணியை 65 % இவங்கதான் பூர்த்தி செய்றாங்கோ இப்படி போய் ஏதாவது சொல்லி வைக்கதியா தேசத்துரோக வழக்கில் கைது செய்ய...


பெரிய ராசு
ஜூன் 17, 2025 12:40

அப்படியே அவனுகளை அனுப்பிரவேண்டும் ...நீயும் வேணுமுன்னா அவனுகளோட போயிடு ....


gnanassegarane nagarajane
ஜூன் 17, 2025 13:08

உண்மைதான்


Sudha
ஜூன் 17, 2025 08:29

பெட்ரோல் கிணறுகளை மட்டும் ஒழித்து விடுங்கப்பா உலகம் உருப்படும் பல நன்மைகள் உண்டாகும்


புதிய வீடியோ