உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மத்திய கிழக்கில் அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு: ஐநாவில் நிலைப்பாட்டை விளக்கிய இந்தியா!

மத்திய கிழக்கில் அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு: ஐநாவில் நிலைப்பாட்டை விளக்கிய இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை வரவேற்றதுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ராஜதந்திர முயற்சிகளை ஐநாவில் இந்தியா பாராட்டியது. பாலஸ்தீனப் பிரச்னை உட்பட மத்திய கிழக்கின் நிலைமை குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை இந்தியா வரவேற்கிறது. மத்திய கிழக்கில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும். இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததற்காக அமெரிக்காவிற்கும், குறிப்பாக அதிபர் டிரம்புக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த இலக்கை அடைவதில் எகிப்து மற்றும் கத்தாரின் பங்கையும் இந்தியா பாராட்டுகிறது. அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி அமைதியை நோக்கிய ராஜதந்திர உத்வேகத்தை உருவாக்கியுள்ளது.அக்டோபர் 2023ல் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து, பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா பயங்கரவாதத்தைக் கண்டித்துள்ளது. பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியுள்ளது. மேலும் காசாவிற்கு தடையற்ற மனிதாபிமான உதவியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 135 மெட்ரிக் டன் மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மக்களின் பாதுகாப்பு

ஏமன் குறித்து, மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து, பர்வதனேனி ஹரிஷ் கவலை தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ''மனிதாபிமான உதவி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அது அனைத்து பொதுமக்களையும் சென்றடைய வேண்டும். ஏமனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்'', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rathna
அக் 24, 2025 12:44

யூதர்களும் மர்ம நபர்களும் சேர்ந்து வாழ முடியாது. அவர்கள் மத கோட்பாடு அப்படி. அப்பாவி ஹிந்துக்களுடனே சேர்ந்து வாழ முடியாதவன், எப்படி அடிக்கு அடி, மரண அடி கொடுக்கும் யூதர்களிடம் சேர்ந்து வாழ முடியும். உலகம் அழியும் வரை, சாகும் வரை அடித்து கொண்டு சாவது தான் அவர்களின் அமைதி வழி


GMM
அக் 24, 2025 11:54

உலகில் பல நாடுகள் ஆக்கிரமித்த பிரிட்டிஷ், இயற்கை வளங்களை கொள்ளை அடித்து பல நூற்றாண்டு பிரச்சனை உருவாகி சென்று விட்டது. யூதர் மக்கள் தொகையில் குறைவு. பாலஸ்தீனம் பகுதி விட்டு வெளியே செல்லும் முன் அங்கு வாழ்ந்த யூதர் பொறுப்பில் விட்டு, இஸ்லாமிய மக்களை அவர்கள் இனத்துடன் சேர்த்து வைத்து இருந்தால், அந்த பகுதி பணக்கார வரிசையில் இருந்து இருக்கும். அது போல் பாகிஸ்தான் பிரிவினையை பிரிட்டிஷ் கூடம் ஆயுதம் கொண்டு தடுத்து இருந்தால், ஒன்றுபட்ட இந்தியா கடன் இல்லாமல் இருந்து இருக்கும். உலக அமைதி குறைவுக்கு இரு மதம் முக்கிய காரணம். உலகம் முழுவதும் மதம் மாற தடை விதிக்க வேண்டும். இந்திய, இஸ்ரேல் பகுதி அகண்ட பகுதியாக ஒரு நாடு கட்டுபாட்டில் இருக்க வேண்டும்.


Field Marshal
அக் 24, 2025 14:24

பாகிஸ்தான் பிரிந்ததால் தான் ராணுவ ஆட்சி இந்தியாவில் நடக்கவில்லை ..ஒருங்கிணைந்த இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷில் 52% ராணுவத்தினர் அமைதி விரும்பிகள் ..ஆட்சியில் அதிகாரம் செலுத்தியிருப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை