உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிரியாவில் இந்தியர்கள் 75 பேர் பத்திரமாக மீட்பு!

சிரியாவில் இந்தியர்கள் 75 பேர் பத்திரமாக மீட்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படை ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. வேலை உள்ளிட்ட காரணத்திற்காக தங்கியிருந்த இந்தியர்கள் 75 பேர் இந்தியத் தூதரகங்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.மேற்காசிய நாடான சிரியாவில், ஷியா பிரிவைச் சேர்ந்த பஷார் அல் ஆசாத் அதிபராக இருந்தார். இவருக்கும், பல கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே, கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. அபு முகமது அல் கோலானி தலைமையிலான ஹயாத் தாஹ்ரிர் அல் ஷாம் என்ற கிளர்ச்சி படை, சமீபத்தில், தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியது. இதையடுத்து நாட்டை விட்டு தனி விமானத்தில் தப்பிய பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். இதனால் அந்த நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வேலை உள்ளிட்ட காரணத்திற்காக சிரியாவில் தங்கியிருந்த இந்தியர்கள் 75 பேர் இந்தியத் தூதரகங்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். விரைவில், இவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். மீட்கப்பட்ட இந்தியர்கள் 75 பேரில், 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள். 'வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், அரசு முன்னுரிமை அளிக்கிறது. அமைதியின்மையை உன்னிப்பாக கண்காணிப்போம்' எனக் கூறிய, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சிரியாவில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது. அவசர உதவி எண் +963 993385973 அல்லது hoc.mea.gov.inஎன்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Saai Sundharamurthy AVK
டிச 11, 2024 12:02

இதுவரை திராவிட மாடல் ஸ்டிக்கரைக் காணோமே !!!


jayvee
டிச 11, 2024 11:09

ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவுடன் பாக்கிஸ்தான் வாழ்க என்று கூவும் இவர்களை அங்கேயே விட்டு விடலாம்


தமிழ்வேள்
டிச 11, 2024 08:50

நம்ம மடியல் அய்யா அனுப்பிய லிப்ஸ்டிக் பஸ் அனைவரையும் வெற்றிகரமாக மீட்டுள்ளது..காட்பாடி லிப்ஸ்டிக் பெருமிதம்


Wilson Nesamony
டிச 11, 2024 08:47

இந்திய மக்களை சிரியாவிலிருந்து பத்திரமாக அளைத்து வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி .


Varadarajan Nagarajan
டிச 11, 2024 08:25

இதுபோன்ற பதட்டமான சூழலில் உலகில் எந்த நாட்டிலும் இந்தியர்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்துவருகின்றது மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் பல அரசியல்வியாதிகளுக்கும் சரி தினமலரைத்தவிர பல ஊடகங்களும் இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன. ரஷ்யா - உக்ரேன் போர்மூண்டபோதும் சரி, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மூண்டபோதும் சரி, கொரோனா காலகட்டத்தில் பல நாடுகள் விமான சேவைகளை நிறுத்தியபோதும் சரி பல்லாயிரம் இந்தியர்களை ராணுவ விமானங்களை கொண்டும் பத்திரமாக இந்தியா மீட்டுள்ளது. நமது மோடி தலைமையிலான அரசும் திறமையான வெளியுறவுத்துறை அமைச்சர்களாலுமே இது சாத்தியப்பட்டது.


SUBBU,MADURAI
டிச 11, 2024 08:20

இந்த உலகத்தில் முஸ்லீம்களை பற்றியும், அவர்களின் அமைதி மார்க்கம் எப்படிப் பட்டது என்பதை பற்றியும் முழுமையாக தெரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்த மாதிரி செயல்படும் நாடுகள் இரண்டு மட்டுமே அவை சீனா, மற்றும் வடகொரியா!


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 09:34

இப்படி இந்த நாடுகள் நடந்துகொள்வதைப் பற்றி இந்திய குறிப்பாக கேரள, தமிழக லுங்கி பாய்ஸ் கதறுவதே இல்லை .... திராவிட மாடல் கதறுவதில்லை .... காங்கிரஸோ வேறெந்த எதிர்க் கட்சிகளோ முணுமுணுப்பது கூட இல்லை .... கவனித்திருப்பீர்கள் .....


mohan
டிச 11, 2024 12:18

சீனாவில் இருப்பது லட்சத்திற்கு மேற்பட்டோர், மரு படிப்பு முகாம்களில் உள்ளனர்... அதை பற்றி இவர்களுடைய நாடுகல் பேசலாம்...


SUBBU,MADURAI
டிச 11, 2024 07:59

சமீப காலமாக ஈரானில் நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும் போது விரைவில் அந்த நாட்டிலும் பெரிய புரட்சி வெடிக்கும் போல் தெரிகிறது.


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 09:47

இந்தியால புரட்சி வரும் ன்னு சொல்லி லுங்கிபாய்ஸ் க்கு கிளுகிளுப்பு கொடுக்க மாட்டீங்களே ??


Ramesh
டிச 11, 2024 07:54

எங்கள் தலைவர் தளபதியின் உத்தரவை ஏற்று நமது நாட்டினரை தமிழக காவல் துறையின் மேற்பார்வையில் இந்தியாவிற்கு கொண்டு வந்த மோடிக்கு பாராட்டுக்கள். வேறு ஏதாவது உதவி வேண்டுமானால் தளபதியை அணுகவும்.


புதிய வீடியோ