இணைந்து செயல்பட இந்தியா -பிரான்ஸ் முடிவு
பாரிஸ்: வர்த்தகம் மற்றும் சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்பட இந்தியாவும் , பிரான்சும் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசன நடத்தினார். இதில் உக்ரைன் போர் , வர்த்தகம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.இதன் பிறகு மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உக்ரைன் போர் குறித்த விவகாரத்தில், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவிற்கான வலுவான உத்தரவாதங்களுடன் நீடித்த அமைதியை நோக்கி நகர்வது குறித்த எங்களின் நிலைப்பாடுகளை பரிமாறிக் கொண்டோம். வர்த்தக பிரச்னைகளில் பொருளாதார பரிமாற்றங்களையும், மூலோபாய பங்களிப்பையும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டோம். சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டோம்.இதுவே, நமது இறையாண்மை மற்றும் சுதந்திரத்துக்கான திறவுகோல்.கடந்த பிப்ரவரியில் பாரீசில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டைத் தொடர்ந்து 2026 ல் பிப்ரவரியில் நடக்கும் அந்த உச்சி மாநாட்டினை வெற்றி பெற வைப்பதற்காக பணியாற்றி வருகிறோம். மிகவும் பயனுள்ள பன்முகத்தன்மைக்காக ஜி7 அமைப்பில் பிரான்ஸ் தலைமை மற்றும் பிரிக்ஸ் மாநாட்டின் இந்தியா தலைமை ஏற்க உள்ள நிலையில் இணைந்து செயலாற்ற ஒப்புக் கொண்டோம். இவ்வாறு அந்த அறிக்கையில் மேக்ரான் கூறியுள்ளார்.