உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி; அமெரிக்கா அபாண்டமான குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி; அமெரிக்கா அபாண்டமான குற்றச்சாட்டு

வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.ரஷ்யாவிடம் இருந்து ராணுவ உபகரணங்கள் மற்றும் அதிக எண்ணெய் பொருட்களை வாங்குவதால், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் கொள்முதலை இந்தியா குறைந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி ஏதுமில்லை, ரஷ்யாவிடம் இருந்து வழக்கம் போல எண்ணெய் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், 'ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் பொருட்களை வாங்குவதன் மூலம் இந்தியா, உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதியளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று டிரம்ப் தெளிவாக கூறியுள்ளார். இதில், அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை வாங்குவதில் இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது,' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

ஜெய்ஹிந்த்புரம்
ஆக 06, 2025 07:46

இது அபாண்டமான பழி தான். உண்மையில் ரஷிய எண்ணெய் லாபம் ஒரு குஜராத்தி பார்த்தார் என்றால், ராணுவ தளவாட ஏற்றுமதி 6,000 கோடிக்கு கல்யாணி நிறுவனத்துக்கு தரப்பட்டது. கொள்ளை லாபம் அடித்த அந்த நிறுவனம் ஒரு 500 கோடியை பாஜக கட்சிக்கு லஞ்ச நிதியாக கொடுத்த பிறகு இந்த கான்டராக்ட் கிடைத்தது. அந்த குண்டுகள் ஐரோப்பிய யூனியன் வழியாக உக்ரைன் சென்று ரஷியாவுக்கு எதிராக உபயோகம் செய்யப்பட்டது. இதனால் ரஷியா காண்டானது கொஞ்சம் பழைய செய்தி. டிரம்மில் மனதுக்கு அது போகவில்லை, போயிருந்தாலும் மூளையில் பதிவாகவில்லை, நம்ம சங்கிகள் மூளை போல.


Rajasekar Jayaraman
ஆக 04, 2025 22:07

இவர் பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்வது போல வா.


P. SRINIVASAN
ஆக 04, 2025 16:54

நாம் கட்ச எண்ணெய் வாங்குவதை ட்ரம்ப் அப்படி சொல்ல்கிறார். டிரம்புக்கு பைத்தியம் முற்றிபோச்சி


vivek
ஆக 04, 2025 17:24

ஏல சீனு...நல்ல நடிகண்டா நீயு


kalyanasundaram
ஆக 04, 2025 16:37

DUPLICATE PAPOO IN AMERICA TO TALK UNTER NONSENCE LIKE OUR ADOLASCENT IMMATURE PAPOO


Appan
ஆக 04, 2025 13:59

அப்போ அமெரிக்க பாகிஸ்தானுக்கு ஆதரவு தருவது என்ன ..?. அமெரிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் , ஆனால் அதை இந்திய செய்தால் தப்பு. உலகம் பெரிது. அமெரிக்க உலகுடன் ஒத்து போகணும்


SUBRAMANIAN P
ஆக 04, 2025 13:58

அமெரிக்காவிலிருந்து சோமாலியாவுக்கு நாடுகடத்தவேண்டும்.


Ganapathy
ஆக 04, 2025 12:33

ராகுலு கேட்டியா சேதி? நாளைக்கு இத வச்சு பார்லிமெண்டுல அலப்பறை பண்ணு


Ganapathy
ஆக 04, 2025 12:32

அடுத்த பார்லி. தொடரும் நடக்காது.


KRISHNAVEL
ஆக 04, 2025 12:29

பைத்தியம் முத்திப்போச்சு ,இங்க எப்புடி விடியலாரோ , அங்கு அமெரிக்காவிற்கு இந்த டொனால்ட்


Ramesh Sargam
ஆக 04, 2025 12:19

அவர் அதிபர் பதவி வகிக்கும் அமெரிக்காவுக்கே நல்லது.


சமீபத்திய செய்தி