உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா, சீனா உடன் கைகோர்க்கும் இந்தியா: காரணம் என்ன தெரியுமா?

ரஷ்யா, சீனா உடன் கைகோர்க்கும் இந்தியா: காரணம் என்ன தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா, சீனா உடன் இணைந்து இந்தியா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் அணு சக்தி கழகத்தை (ரோசாட்டம்) மேற்கோள் காட்டி இத்தகவல் வெளியாகி உள்ளது. நிலா குறித்த ஆராய்ச்சியில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக சந்திரயான் விண்கலத்தை, நிலவின் தென் பகுதியில் தரையிறக்கி இந்தியா சாதனை படைத்து உள்ளது. அதேபோல் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் நிலா குறித்த ஆராய்ச்சியில் மும்முரம் காட்டி வருகின்றன. அங்கு நிரந்தரமாக ஆய்வுக்கூடத்தை அமைக்க முயற்சி செய்கின்றன. இதற்காக சீனா உடன் ரஷ்யா கைகோர்த்து உள்ளது. இரு நாடுகளின் திட்டப்படி 2035 - முதல் 2045க்குள் படிப்படியாக இந்த ஆய்வு மையத்தை உருவாக்கிவிட இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.இந்த மையத்திற்கு மின்சாரம் வழங்க ஏதுவாக நிலவில் அணுமின் நிலையம் ஒன்றை உருவாக்க ரஷ்யா முயற்சி செய்து வருகிறது. 2040க்குள் இந்த அணுமின் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா, மிகவும் சிக்கலான இந்த திட்டத்தில் மனிதர்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது. ரஷ்யாவின் முயற்சியில் இணைய சீனா ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்தியாவும் இணைய விரும்புவதாக ரோசாட்டம் கூறியுள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் லிகாசேவ் கூறியதாவது: நிலவில் பல்வேறு சர்வதேச திட்டங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகிறோம். அந்த வகையில்,அணுமின் நிலையம் அமைப்பதில், சர்வதேச அமைப்புகளின் பங்களிப்புடன், இந்தியாவும், சீனாவும் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார். இந்த அணுமின் நிலையம் 2036ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக நிபுணர்கள் சிலர் கூறுகையில், தூதரக ரீதியில் இந்தியா கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்புவதற்காக சுபான்ஷூ சுக்லாவை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதுடன், தற்போது நிலா குறித்த திட்டத்திற்காக ரஷ்யா, சீனா உடன் இணைந்து செயலாற்றி வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
செப் 09, 2024 21:33

இப்பவே வேலை வாய்ப்பு ரெடி. ஆயிரம் வேலைகள் காத்திருக்கு. ப்ளஸ் டூ படிச்சிருந்தால் போதும். மாதம் 50,000 ரூபாய் சம்பளம். இந்தி படிச்சிருக்கணும்.


Balasubramanian
செப் 09, 2024 14:08

Russia has always been a superpower in military, intelligence, and space. Additionally, they have extensive experience and expertise in space exploration. Therefore, India should collaborate with Russia for its space research program.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 13:59

நமது தொழில்நுட்பம் சீனாவுக்கும் தெரிய வர வாய்ப்பு ....


தமிழ்வேள்
செப் 09, 2024 13:37

நிலவில் அணுமின் நிலையம் அமைத்தால் இந்தியாவுக்கு ஆபத்து -என்று பப்பு இப்போது வாயில் புனல் வைத்து கூவுவான் பாருங்கள் ...தேச எதிரி கும்பல் புள்ளி வச்ச இண்டி கூட்டணி


புதிய வீடியோ