உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியாவுக்கும் முக்கிய பங்கு; ஐரோப்பிய கவுன்சில் எதிர்பார்ப்பு

உக்ரைன் போரை நிறுத்துவதில் இந்தியாவுக்கும் முக்கிய பங்கு; ஐரோப்பிய கவுன்சில் எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா ஆகியோர் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் வரவேற்பதாக பிரதமரிடம் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், 'நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினோம். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை மிகவும் வரவேற்கிறோம்.ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதிலும், அமைதிக்கான பாதையை உருவாக்குவதிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் போர் உலக பாதுகாப்பை கெடுப்பதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கிறது. எனவே இது முழு உலகிற்கும் ஒரு அச்சுறுத்தலாகும்.2026ம் ஆண்டின் தொடக்கத்தில், அடுத்த ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உச்சி மாநாட்டில் ஒரு கூட்டு மூலோபாய நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த ஆண்டின் முடிவுக்குள் தடையில்லா வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடிக்க நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ' இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக நிறைவு செய்வது குறித்தும், ஐஎம்இஇசி கால்வாயை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் நமது கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினோம்.அதேபோல, ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
செப் 05, 2025 19:56

பேசாம ரஷியாவில் இருக்கிற எல்லா ஆயிலையும் சீக்கிரம் வாங்கிடணும்.அப்புறம் ரஷியாவிடமிருந்து ஆயில் வாங்கலைன்னு அமெரிக்கா டாரிஃபை குறைச்சிடும்.


sankaranarayanan
செப் 05, 2025 19:17

ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நன்றாக நடைபெற வேண்டுமானால் அமெரிக்க அதிபர் டிரம்மின் எகோபத்திய அராஜக முடிவை கைவிடவேண்டும்.தீர்ப்பின் தலையீடு முழுவதுமாக இருக்கவே கூடாது.இந்திய பிரதமர் மோடியால்தான் நல்ல முறையிலே தீர்த்து வைத்து நிம்மதியைக்காண முடியும்.இரு நாடுகளுக்கும் நல்லுறவு உண்டாகும்.மோடிதான் இதற்கு முக்கிய வித்தகர் ஆசிரியர்


Sekar
செப் 05, 2025 16:30

நாம் உலகிற்கு பெரிய அண்ணண் போல் நம்மை காட்டி கொள்ள வேண்டாம். அவர்கள் நாட்டின் பாதுகாப்பது கருதி ரஷ்யா தொடுத்துள்ள இந்த போரை நாம் சொன்னால் அவர்கள் கேட்டு கொண்டு இந்த போரை கைவிட்டு விடுவார்களா. நம்மை டம்மியாக்க முயலும் இந்த மேற்கத்திய கூட்டம். இவற்றை நாம் காதில் ஏற்றி கொள்ள வேண்டாம். அமெரிக்கா மற்றும் ரஷ்யா சீனா உறவை முக்கியமாக கருத காரணம் என்ன? சீனா எந்த நாட்டையும் சார்ந்திராத வண்ணம் மிகவும் அமைதியாக அனைத்து துறைகளிலும் குறிப்பிடதக்க வளர்ச்சியை பெற்றுள்ளார்கள். நம் பிரதமர் புடினுடன் தனியாக காரில் சென்றதை ,டிரம்ப் பிரதமருக்கு நாற்காலி நகரத்துவதை பற்றி பெருமை பேசி கொண்டிருக்கிறோம். வரும்காலங்களில் எதற்கும் எந்த நாடுகளையும் எதிர்பார்த்திராத வண்ணம் நாம் தொழில், நுட்பம், செயற்கை நுண்ணறிவு திறன், மருத்துவம், பொருளாதாரம், மார்க்கெட்டிங், வேளாண் மற்றும் கட்டுமானங்களில் மிக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட வழிவகை செய்ய வேண்டும். சாதாரண கல்லூரிகளில் படித்த மாணவர்களும் அவர்கள் ஆற்றல்களுக்கு ஏற்றாற்போல் அவர்களின் புதிய யோசனைகளை கண்டுபிடிப்புகளாக மாற்றும் வண்ணம் பல research & development கூடங்கள் அமைத்து கொடுத்து அரசு ஊக்குவிக்க வேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 05, 2025 13:47

உக்ரைனும் ரஷ்யாவும் பயந்து ஓடிடுவாங்க.


அசோகன்
செப் 05, 2025 13:04

இந்த மாதிரி உள்ள சின்ன சின்ன பிரச்சனையையெல்லாம் தீர்க்கதான் எங்க திராவிட மாடலை உலகெங்கும் கொண்டுவர சொல்றோம்... யாரு கேட்குறாங்க


Tamilan
செப் 05, 2025 13:01

அதற்க்கு இந்தியா எதனை டிரில்லியன் டாலர் இந்தியாவில் கொள்ளையடித்துவிட்டு வரவேண்டும் என்றும் மோடியிடம் ரகசியமாக அல்லது மறைமுகமாக கூறியிருப்பார்களே ?.


Saai Sundharamurthy AVK
செப் 05, 2025 12:55

ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இன்னொரு புறம் அமெரிக்காவின் அபிலாசைகளை நிறைவேற்றிட இந்தியாவில் சதி வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள்.


MUTHU
செப் 05, 2025 12:07

ஆம்மாமாம். ஐரோப்பிய நாடுகள் எல்லாம் விரல் சூப்பும் பிள்ளைகள். ரஷ்யாவும் உக்ரைனும் விளையாட்டு சண்டை போடுகின்றார்கள். இந்தியா அதட்டியவுடன் நிறுத்தி விடுவார்கள். இந்த ஐரோப்பியர்கள் எல்லாம் குள்ள நரி தந்திரம் படைத்தவர்கள். அமெரிக்கா உக்ரைனை மிரட்டி கனிம ஒப்பந்தம் போட்ட பொழுது அமெரிக்காவினை கண்டித்திருக்கவேண்டியதுதானே. அவர்களுக்கு பெட்ரோல் பொருட்கள் தங்களின் சொகுசு வாழ்க்கைக்கான ஒரு ஆதாரம். இந்தியாவிற்கோ பெட்ரோல் பொருட்கள் தங்களின் அடிப்படை வாழ்வாதாரம்.


ஆரூர் ரங்
செப் 05, 2025 11:54

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் ஜப்பான் துணைப் பிரதமர் உதவியை நாடலாம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை