உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குற்றவாளிகளை நாடு கடத்தும் பிரிட்டன் பட்டியலில் இந்தியா

குற்றவாளிகளை நாடு கடத்தும் பிரிட்டன் பட்டியலில் இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: அதிகரித்து வரும் குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன், அவர்களின் மேல்முறையீடுகள் விசாரிக்கப்படுவதற்கு முன், அவர்களுடை ய தாயகத்துக்கு நாடு கடத்தப்படும் பட்டியலில், இந்தியாவை பிரிட்டன் அரசு சேர்த்துள்ளது. புதிய வழிமுறை ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியுள்ள வெளிநாட்டினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேல்முறையீட்டு விசாரணைக்காக அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரிட்டனில் வசிப்ப வர்களின் குடியுரிமை பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டு குற்றவாளிகள், மேல்முறையீட்டு விசாரணையை அவர்களது சொந்த நா ட்டி லேயே மேற்கொள்ள பிரிட்டன் அரசு கடந்த 2023ல் புதிய வழிமுறையை மேற்கொண்டது. 'இப்போது வெளியேறுங்கள்; பின் மேல்முறையீடு செய்யுங்கள்' என்ற திட்டத்தின் கீழ், அப்போதைய கன்சர்வேடிவ் கட்சி உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரவர்மேன், வெளிநாட்டு குற்றவாளிகளை அனுப்பி வைப்பதற்கான நாடுகளின் பட்டியலை உருவாக்கினார். இந்த பட்டியலில், பின்லாந்து, நைஜீரியா, எஸ்டோனியா, அல்பேனியா, பெலிஸ், மொரீஷியஸ், தான்சானியா மற்றும் கொசோவோ ஆகிய எட்டு நாடுகள் இடம்பெற்றிருந்தன. 23 நாடுகள் அந்த பட்டியல் தற்போது, 23 நாடுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவும் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளது. அங்கோலா, ஆஸ்திரேலியா, போட்ஸ்வானா, புருனே, பல்கேரியா, கனடா, கயானா, இந்தோனேஷியா, கென்யா, லாட்வியா, லெபனான், மலேஷியா, உகாண்டா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nalla Paiyan
ஆக 13, 2025 07:07

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறது பிரிட்டன் ஏற்கனவே பிரிட்டனில் அமைதி மார்க்கத்தினர் பெரும்பான்மையாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர் பூர்வீக குடிகளான இங்கிலீஷ் மக்கள் மைனாரட்டிகளாகவும் நிறைய பிரச்சனைகளை செய்யும் எதிர்கொண்டு வருகின்றனர் ஆட்சியாளர்களின் முட்டாள்தனமான முடிவால் இது ஏற்பட்டது... ஐரோப்பிய தேசங்களில் பெரும்பான்மை அடைய வேண்டும் என்ற திட்டத்தில் அவர்கள் அகதிகள் என்ற பெயரில் பிரிட்டன், ஃப்ரான்ஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய தேசங்களில் திட்டமிட்டு குடியேற்றத்தை அமைத்துள்ளனர். அதன் விளைவுகள் இப்பொழுது அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது ஐரோப்பிய தேசங்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.


அப்பாவி
ஆக 12, 2025 16:34

நல்ல பட்டியல். பெருமை.


subramanian
ஆக 12, 2025 12:35

பாகிஸ்தான் அந்த பட்டியலில் இடம் பெற்றாலும் இங்கிலாந்து கலவர பூமியாக மாறும்


visu
ஆக 12, 2025 08:20

ஆனா பாகிஸ்தான் சேர்க்கப்படவில்லை என்ன வினோதம்


Easwar Moorthy
ஆக 12, 2025 08:09

விஜய் மல்லையா etc


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை