உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா ஆச்சரியம் அளிக்கிறது: அமெரிக்க பெண் சுற்றுலா பயணி வியப்பு: வீடியோ வைரல்

இந்தியா ஆச்சரியம் அளிக்கிறது: அமெரிக்க பெண் சுற்றுலா பயணி வியப்பு: வீடியோ வைரல்

இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், முழு மனநிறைவுடன் ரசித்து செல்வர். சிலர் வேண்டுமென்றே இந்தியா குறித்து நெகட்டிவ் கருத்துகளை பரப்புவதை வழக்கமாக வைத்திருப்பர். நேர்மறையை விட எதிர்மறையே அதிவேகமாக பரவும் என்பதுபோல, இந்தியா பற்றிய அந்த எதிர்மறை கருத்துகளே அதிகளவு பரவி, இந்தியா பற்றிய தவறான கண்ணோட்டத்தை உருவாக்கி விடுகின்றன. ஆனால், உண்மையில் இந்தியா வந்து அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் பெருமிதத்துடனேயே பதிவிட்டுள்ளனர்.அந்த வகையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்து திரும்பிய ஒரு பெண், 'டிக்டாக்' சமூக வலைதளத்தில் இந்தியா பற்றி பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதில் அவர் பேசியதாவது: நான் இந்தியா சென்று திரும்பியுள்ளேன். என் முதல் பயணமான இதுவே ஒரு வரலாற்றுப் பயணமாகவும் இருந்தது. அந்த பயணத்தின் போது நான் கவனித்த சில விஷயங்களைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். அமெரிக்கா பெண்ணான நான், ஒரு இந்திய பெண் நண்பருடன் தங்கியிருந்தேன். அவருடனே பெரும்பாலும் இருந்தேன். தென் இந்தியாவின் பெங்களூரு, கொச்சி நகரங்களுக்கு நாங்கள் சென்றோம்.

அனைத்தும் தவறு

இந்தியாவிற்கு செல்லும்முன், அங்கு நிலைமை எப்படியிருக்கும் என ஆராய்ந்தேன். பிகினி மற்றும் சிறிய அளவிலான உடைகளை உடுத்தாதே, பழங்கள், புதிய உணவுகளை சாப்பிடாதீர்கள், சுத்தமான தண்ணீர் இருக்காது, அந்த தண்ணீரை நீங்கள் குடிக்க கூட முடியாது என பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்தனர். இருந்தாலும் நம்பிக்கையுடன் சென்றேன்.பின்பே, நான் கேள்விப்பட்ட அனைத்தும் தவறு என்பதை புரிந்துகொண்டேன். அங்கு பல பெண்கள் ஸ்லீவ்லெஸ் டாப்களும், ஷார்ட்ஸ்களும் அணிந்திருந்தனர். உடை அவர்களுக்கு பெரிய விஷயமாக இல்லை. அதேபோல், உணவுகளும் நன்றாக சாப்பிட்டேன். எந்தவித வயிற்றுப்போக்கும் ஏற்படவில்லை, நன்றாகவே உணர்ந்தேன். தண்ணீரும் பருகும்படியே இருந்தது. பாட்டில் தண்ணீரும் அருமையாக இருந்தது.

சுத்தம்

உண்மையில், இது ஒரு அற்புதமான இடம். இந்தியாவின் மக்கள் அடர்த்தி என்பது நம்மை அதிர வைக்கும் அளவிற்கு உள்ளது. இப்போது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பரப்பளவில் அமெரிக்கா உடன் ஒப்பிடும்போது சிறிய நாடாக இருந்தாலும், இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாடு இவ்வளவு சுத்தமாக இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.நான் அமெரிக்காவின் ஒரிகனில் வசிக்கிறேன். என் நாயுடன் வாக்கிங் செல்கையில் இங்கு சாலையோரங்களில் குப்பை நிறைந்திருக்கும். மக்கள் காரிலிருந்தபடி குப்பையை வீசி செல்வர். அமெரிக்காவில் இந்தியா அளவிற்கு மக்கள் எண்ணிக்கை இருந்திருந்தால், நம்மால் குப்பையை கையாள முடியாது. எனவே, இந்தியா இவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதே பெரும் சாதனை தான்.

பாதுகாப்பு

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என சிலர் சொல்கின்றனர். ஆனால், நான் தென் இந்தியாவில் ஒரு பெண்ணுடன் தான் வசித்தேன். எனக்கு எந்த நேரத்திலும் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படவில்லை. நான் வயதானவளாக இருக்கிறேன். ஒருவேளை இளம்பெண்ணாக இருந்திருந்தால் வேறு மாதிரியான அனுபமாக மாறியிருக்கலாம். ஒரு வெள்ளைக்காரராக இருப்பதால் என்னை அனைவரும் ஒருமாதிரி பார்ப்பார்கள் என நினைத்தேன். ஆனால் நான் சென்ற இடங்களில் அதுபோன்ற பிரச்னை இல்லை.

நியூயார்க்கில் ஏமாற்றம்

இந்தியர்கள், வெளிநாட்டினரை ஏமாற்றுவார்கள் என்றெல்லாம் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் நான் சந்தித்த எல்லோரும் மிகவும் நாகரிகமாகவும், அன்பாகவும், நேர்மையாகவும் இருந்தார்கள். என்னை யாரும் ஏமாற்றவில்லை. உண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் நியூயார்க் சென்றபோது பலமுறை ஏமாற்றப்பட்டேன். உதாரணமாக, 10 டாலர் மதிப்பு கொண்ட ஒரு சிகரெட் எவ்வளவு எனக் கேட்டால், 20 டாலர் என சொல்வார்கள். இந்தியாவைவிட நியூயார்க்கில் தான் நான் அதிகம் ஏமாற்றப்பட்டேன்.இந்தியா போவது ஒரு “அதிசய உலகம்” போல் இருந்தது. நம்மிடம் சாதாரணமாக உள்ள அனைத்தும் அங்கு தலைகீழாகவே செயல்படுகிறது. அதைப் பற்றியும் ஒரு தனி வீடியோ போடலாம். நம்மிடம் (அமெரிக்காவில்) இருக்கும் நடைமுறை அங்கு வித்தியாசமாக இருக்கும். வாகனங்கள் எதிர்புறமும் வருகின்றன. இதுபோன்ற பல விஷயங்களை வித்தியாசமாக பார்த்தேன். இவ்வாறு அதில் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

vns
நவ 05, 2025 02:09

அப்புறம் எதுக்குங்க எல்லா த்ராவிஷங்களும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது ஒன்றிய அரசாங்கம் பணம் தரவில்லை என்று புலம்புகின்றன? பாவம் வன்மமும் பொறாமையும் தான் உங்களுக்கும் உங்களைப்போன்றோருக்கும் நல்ல துணைவர்களாக உள்ளனர்.


spr
அக் 23, 2025 18:19

இந்தப் பெண்மணியைப் பாராட்டுவோம் .எல்லா நாட்டிலும் வறுமை இருக்கிறது, குற்றம் புரிவோர் இருக்கிறார்கள் ,சாலைகளை பாழ்படுத்துவோர் இருக்கிறார்கள், ஆனால் வெளிநாடுகளில் தண்டனை கடுமை குற்றம் செய்பவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவோர் குறைவு. இந்தியாவிலும் அப்படியொரு நிலை வந்தால் குறைந்த பட்சம் சுற்றுப்புறத் தூய்மை காப்பாற்றப்படும்.இந்த நாட்டில் பிறந்து மக்களின் பிரதிநிதியாக இருந்தும் இந்த நாட்டைக் குறித்துத் தவறாகப் பேசி வரும் ராகுல் இவரிடம் பாடம் கற்கட்டும் .எதிர்க்க கட்சியாக அரசின் குற்றம் குறைகளை விமர்சிக்கலாம் தவறில்லை ஆனால் பிற நாட்டு மக்களின் முன் நம் சிறப்பை மட்டுமே பேச வேண்டும் "ஆயிரம் உண்டிங்கு குறைகள் அதை அந்நியரிடம் சொல்வது முறையா"


Ahmed Lebbai
அக் 23, 2025 08:16

இந்திய மக்கள் நல்லவர்கள். அண்பானவர்கள்.


karuththuraja
அக் 23, 2025 08:03

அமெரிக்க பெண் சவுத் இந்தியா பத்தி நல்ல பேசியதற்கு சந்தோசம், அதற்க்காக அமெரிக்காவை தப்பா பேசியிருக்க வேண்டியதில்லை.. அரசியல் டிரம்ப் தவிர்த்து பார்த்தால் எல்லாமே சிஸ்டமேடிக் தான்.. இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இந்தியன் அங்கு வேலை செய்து அதனால் ஒருவன் ஏழை ஆகிவிட்டேன் என்று யாராவது உண்டா.


Ramesh Sargam
அக் 22, 2025 23:43

பரப்பளவில் அமெரிக்கா உடன் ஒப்பிடும்போது சிறிய நாடாக இருந்தாலும், இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாடு இவ்வளவு சுத்தமாக இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது. அவர் கூறிய இந்த கருத்து மிகவும் சரிதான். இருந்தாலும்.... மக்கள் அவர்களாகவே அவர்கள் வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறார்களோ, அதேபோல வீட்டுக்கு வெளியில் உள்ள சுற்றுப்புறத்தையும் சுத்தமாக, குப்பைகள் இல்லாமல் வைத்திருக்க முயலவேண்டும். அரசு துப்புரவு பணியாளர்களும், ஏதோ கடனே என்று வீதிகளை சுத்தம் செய்யாமல், முழுமனதுடன் வீதிகளை சுத்தம் செய்யவேண்டும்.


Sridhar Ramdoss
அக் 22, 2025 21:11

நல்ல வேளை அவர் வட மாநிலங்களுக்கு செல்லவில்லை, சென்றிருந்தால் அவருடைய மொத்த எண்ணமும் மாறியிருக்கும்.


Ganesun Iyer
அக் 23, 2025 03:54

நல்லகாலம் திராவிட நாட்டுக்கு வரவில்லை .. டாஸ்மாக் வாசல்ல அவன் குடிச்சி விழுந்து கிடக்கிறதையும்.. வடக்கன்கள் டீக்கடை, ஓட்டல், பில்டிங் கட்டுமானம்னு எல்லா வேலையும் செஞ்சி பணத்தை ஊர்ல குடும்பத்துக்கு அனுப்பி குடுப்பத்தையும் காத்திருக்காமலாம்.


Arachi
அக் 22, 2025 21:10

இந்தியாவில் நாகரீகமான மாநிலங்கள் என்றால் எதை சொல்ல முடியும். பான்பராக் போட்டு சுவரில் கண்டபடி துப்பாத மாநிலம், இன்னும் வெட்ட வெளியில் சொம்பை துக்கிட்டுபோகாமல் இருக்கும் மாநிலம் எது. ரயிலில் ரிசர்வேஷன் பண்ணாமலே ரிசர்வேஷன் பெட்டியில் குந்திக்கிறானே அவனுக நாகரீகத்தை என்னவென்று சொல்வது. தமிழ் நாடு,கேரளா மற்றும் கர்நாடக இவை தனித்துவம் வாய்ந்த மாநிலங்களே.


Ganesun Iyer
அக் 23, 2025 04:00

ஆமா, தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு டாஸ்மாக்கையும் அக்கம் பக்கம் வீட்டு காம்பவுண்டு சுத்தி சரக்கு, தண்ணீ பாட்டிலும், பிளாஸ்டிக் கிளாஸ்ம்..செவுத்துல ஒன்னுக்கு அடிச்சி தனித்துவ திராவிட நாட்டையும் இருப்பதையும் பாத்திருக்கலாம்.


Rathna
அக் 22, 2025 20:40

கழிவறை, பொது இடங்களை சுத்தமாக வைப்பது வீட்டில் வளர்ப்பை பொறுத்தது. இதில் கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. பள்ளிகளில் இருந்து இது கல்வி திட்டமாக வைக்க வேண்டும். அப்போது தான் சமுதாயம் மாறும்.


கத்தரிக்காய் வியாபாரி
அக் 22, 2025 20:27

சேர சோழ பாண்டியர்கள் கட்டிக்காத்த நாகரிகம், உழைப்பு, நேர்மை இன்னும் கொஞ்சம் இருக்கிறது. திராவிதியா மாடல் அதை சூரையாடிக்கொண்டிருக்கிறது.


அருண், சென்னை
அக் 22, 2025 19:28

நல்ல வேலை தமிழ்நாட்டுக்குள்ள வரல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை