உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்; இஸ்ரேல் - ஈரானுக்கு இந்தியா வலியுறுத்தல்

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்; இஸ்ரேல் - ஈரானுக்கு இந்தியா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழலை தவிர்க்க, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. காசாவைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வந்த ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக அணுசக்தி நிலைகளை குறிவைத்து சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானம் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமாதான முயற்சிகளை மேற்கொண்டு, இருநாடுகளிடையே நிலவும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்கும் விதமாக, பேச்சுவார்த்தை உரையாடல் மற்றும் ராஜதந்திர வழிகளில் தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளும் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அணுஆயுத தளங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவதாக வெளியாகும் செய்திகள் கவலை அளிக்கிறது. நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஈரான் - இஸ்ரேல் நாடுகளுடன் இந்தியா நெருக்கமான நட்புறவை கொண்டுள்ளது. இருநாடுகளுக்கும் தேவையான அனைத்து விதமான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். இரு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள், உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

naranam
ஜூன் 14, 2025 16:54

தற்போது எதுவும் பேசாமல் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டில் இருப்பதே இந்தியாவுக்கு நல்லது.


கமலேஷ்
ஜூன் 13, 2025 18:47

ஆஹா... அவிங்களுக்கு வந்தா பேச்சுவார்த்தை.


Ramesh Sargam
ஜூன் 13, 2025 14:26

மத்தியஸ்தம் பண்ண டிரம்பை அனுப்பலாமா?


Sridhar
ஜூன் 13, 2025 14:07

அர்த்தம்கெட்ட அறிக்கையா இருக்கு? ஈரான் அணுகுண்டு தயாரிச்சே தீருவேன்னு அடம்பிடிக்குது, அப்படியே அவங்க தயாரிச்சிட்டுத்தாங்கன்னா, அப்புறம் இஸ்ரேல் பாடு திண்டாட்டம்தான். இந்த நிலையில பேச்சுவார்த்தையா? போட்டுத்தள்ளிட்டு போயிகிட்டே இருக்கணும். பார்க்கப்போனா இந்தியா இஸ்ரேலிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கு. சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை மிக மிக அவசியம். சாதூர்யம் சாணக்கியத்தனம்ங்கற போர்வையில் ஒன்னும் செய்யாம போர் நிறுத்தம் செய்வது பிரச்சனைகளை தீர்க்க வழிவகுக்காது. மாறாக எதிரிகளுக்கு தேவையான நேரத்தையும் அதிகமான வாய்ப்பையும் அளிக்கும்.


தியாகு
ஜூன் 13, 2025 15:03

உங்களுக்கு அறிவோ அறிவுண்ணே, இந்தியா இப்போது ஈரான் பக்கமும் இல்லாமல் இஸ்ரேல் பக்கமும் இல்லாமல் இருப்பதுதான் நம் நாட்டுக்கு நல்லது. கச்சா எண்ணெய்க்கு நாம் வளைகுடா நாடுகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். அதனால் இந்தியா சொல்லியிருப்பது சரியே. இல்லையென்றால் அனைத்து வளைகுடா நாடுகளையும் நாம் பகைத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.


Murugan Gurusamy
ஜூன் 13, 2025 13:12

ஈரான் முஸ்லிம்கள் ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் கொஞ்சம் புத்தி கூர்மை உள்ளவர்கள், யூதர்கள் வீரமும், விவேகம், அர்ப்பணிப்பு, விடாத முயற்சி, நிறைய இருக்கு.


ஆரூர் ரங்
ஜூன் 13, 2025 13:50

புத்திசாலி ஈரானிகள் எப்போதோ மதம்மாற மறுத்து பார்சீ இனமாக பாரதத்துக்கு புலம் பெயர்ந்து விட்டார்கள். வந்த இடத்திற்கும் பெருமையும் செல்வமும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மிச்சம் மீதி ஆட்கள்தான் அடிப்படைவாதம் பேசிக் கொண்டு அங்கேயே இருக்கிறார்கள் அல்லது பஹ்ரைன் நாட்டுத்தெருக்களில் பிச்சை எடுக்கிறார்கள்.


Murugan Gurusamy
ஜூன் 13, 2025 17:02

ஈரான் முஸ்லிம்கள் டி என் எ அடிப்படையில் ஆரிய இனத்தை சார்ந்தவை, உண்மை கசக்கும்


ஆரூர் ரங்
ஜூன் 13, 2025 12:48

மூர்க்கனிடம் பேசுவதும் அறிவிலியிடம் பேசுவதும் அர்த்தமற்றது. அவரவர்களுக்கு புரியும் மொழியில்தான் கூறவேண்டும்.


Haja Kuthubdeen
ஜூன் 13, 2025 14:25

தூக்கம் வராதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை