உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொருளாதாரத்தில் சீனாவை இந்தியா விஞ்சும்: கணித்து கூறிய சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்!

பொருளாதாரத்தில் சீனாவை இந்தியா விஞ்சும்: கணித்து கூறிய சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர்: சீன பொருளாதாரத்தை விரைவில் இந்தியா விஞ்சும் என்று சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ சியன் லுாங் கணித்துள்ளார்.சிங்கப்பூரில் சாத்தம் ஹவுஸில் லீ சியன் லுாங் பேசியதாவது:ஆசியாவில் பெரும் அதிகார மாற்றம் ஏற்படும். இந்தியா எழுச்சி பெறுகிறது, சீனா சுருங்குகிறது.இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட விரைவில் சீனாவின் பொருளாதாரத்தை விஞ்சக்கூடும். சீனாவின் மக்கள் தொகை சுருங்கியநிலையில், இந்தியா இளமையாகவும் வளர்ச்சி வேகத்துடன் நிறைந்து காணப்படுகிறது.ஆர்சிஇபி போன்ற பிராந்திய வர்த்தகக் குழுக்களில் இந்தியாவின் எதிர்கால பங்கேற்பு ஆசியாவில் பொருளாதார சக்தி சமநிலையை வியத்தகு முறையில் மாற்றும்.உலகளாவிய ஜாம்பவான்கள் விநியோகச் சங்கிலிகள், மறுசீரமைப்பு முதலீடு பீஜிங்கை விட்டு விலகும் நிலையில், புதுடில்லி, உலகளாவிய வளர்ச்சியின் அடுத்த பெரிய காந்தமாக உருவாகி வருகிறது.இவ்வாறு லீ சியன் லுாங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Madras Madra
அக் 30, 2025 11:00

அடுத்து வரும் பிரதமர் அதை நிகழ்த்தி காட்டுவார்


Madras Madra
அக் 30, 2025 10:59

இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்


karupanasamy
அக் 30, 2025 10:37

அது எப்புடிப்பா


Venugopal S
அக் 30, 2025 09:28

2024 ல் சீனாவின் பொருளாதார அளவு பத்தொன்பது டிரில்லியன் டாலர், இந்தியாவின் பொருளாதார அளவு நான்கு டிரில்லியன் டாலர். சீனப் பொருளாதாரம் இந்தியாவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம். சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு ஒன்றரை சதவீதம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு ஆறரை சதவீதம் என்று கணக்கிட்டாலும் கூட சீனாவை மிஞ்ச இந்தியாவுக்கு குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பது அடிப்படை பொருளாதார அறிவு உள்ளவர்களுக்கு தெரியும்!


Jai Krishnan
அக் 30, 2025 12:35

சீனாவின் கடனையும், இந்தியாவின் கடனையும் ஒப்பிடவும்... சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிடுவது மிகச்சரியாக இருக்கும்...


அப்பாவி
அக் 30, 2025 08:49

அங்கே தமிழ் அமைச்சர் ஈஸ்வரன் ஊழலுக்காக 12 மாதம்சிறை சென்று வீரனாக திரும்பியிருக்கிறார். நல்லவேளை சிங்கப்பூர் தமிழர் கையில் மாட்டவில்லை.


அப்பாவி
அக் 30, 2025 08:04

யார் மேலே வளர்ந்து வந்தாலும் அவிங்க புத்தியைக் காட்டுவாங்க. முன்னாடி அமெரிக்கா. தற்போது சீனா. அடுத்தது இந்தியா.


Sun
அக் 30, 2025 07:07

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற போது சாதாரண மீனவ கிராமம் போலத்தான் இருந்தது. குறுகிய காலத்திலேயே அந்நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர்கள் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர்களான லீ குவான் யூ மற்றும் லீ சியன் லூங் ஆவர். இருவருமே சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள் .முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் பல்வேறு தரவுகளை கணக்கீடு செய்தே எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் சீனாவை இந்தியா மிஞ்சும் எனக் கூறி இருப்பார். ஆனால் அதற்கு நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.


Iniya
அக் 30, 2025 04:15

1 USD = 7.10 Chinese Yaun. 1USD = 88.17 Rs. பொருளாதாரத்தில் சீனாவை எப்படி விஞ்சும் ?


Kasimani Baskaran
அக் 30, 2025 04:08

அடிப்படை விஷயங்களில் இந்தியா கவனம் செலுத்தவில்லை என்றால் இந்தியாவை சிதைக்க - குறிப்பாக மத சார்பற்ற, வெளிநாடு சார்புடைய இடதுசாரி சக்திகள் - காத்துக்கொண்டு இருக்கின்றன.


Ramesh Sargam
அக் 30, 2025 00:13

ஊழல் மட்டும் முற்றிலும் இந்தியாவில் ஒழிந்தால், இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமல்ல, மற்ற எல்லா துறைகளிலும் விஞ்சும்.


முக்கிய வீடியோ