உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசு அதிகாரியாக நடித்து ரூ.17 கோடி மோசடி; அமெரிக்கவாழ் இந்தியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

அரசு அதிகாரியாக நடித்து ரூ.17 கோடி மோசடி; அமெரிக்கவாழ் இந்தியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

நியூயார்க்: அமெரிக்காவில் அரசு அதிகாரியாக நடித்து முதியோர்களிடம் இருந்து ரூ.17 கோடி வரை மோசடி செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த பிரணவ் படேல்,33, என்ற இந்திய வம்சாவளி, கால் சென்டர்கள் மூலம் முதியோர்களை குறி வைத்து மிரட்டி, பணம் மற்றும் நகைகளை பறித்து வந்துள்ளார். கருவூலத்துறை அல்லது அரசின் பிற ஏஜன்சிகளைச் சேர்ந்த அதிகாரிகள் என்று முதியோர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, 'உங்கள் மீது குற்ற நடவடிக்கைக்காக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யாமல் இருக்க உங்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை எங்களிடம் விசாரணைக்கு கொடுக்க வேண்டும்,' என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த வகையில் ஒரு வீட்டில் நகை உள்ள பெட்டியை பெறுவதற்காக சென்ற அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பண மோசடி மற்றும் பணத்தை சட்டவிரோதமாக கைமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக பிரணவ் படேல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.இந்த நிலையில், பிரணவ் படேலுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anu Sekhar
ஜூன் 12, 2025 20:46

6 வருடம் போதாது . ஏமாத்தியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கற வரைக்கும் உள்ளே தள்ளுங்க. கல்லுடைக்க வையுங்க


Sarathi
ஜூன் 12, 2025 11:29

அமெரிக்கா போயும், இந்தியாவின் பெயரை கெடுக்கிறான்


Barakat Ali
ஜூன் 12, 2025 11:28

படேல்ன்னா குஜராத்தியாச்சே ????


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 12, 2025 21:09

அஃப் கோர்ஸ். அஃப் கோர்ஸ்ன்னா குளுக்கோஸ் இல்ல, ஆமாம்ன்னு அர்த்தம். மனசாட்சியில்லாமல் கையறு நிலையில் இருப்பவர்களிடமிருந்தும் கூட திருடுவதற்கு குஜ்ஜூஸ் தயங்குவதில்லை


அப்பாவி
ஜூன் 12, 2025 09:26

இந்தியர்கள் போற இடமெல்லாம் முத்திரை பதிக்கிறார்கள்.


sekar ng
ஜூன் 12, 2025 07:49

யார் சட்டவிரோதமானாலும் தண்டிக்க வேண்டும். அறியாலாய வாரிசு குடும்பத்திற்கு மட்டும் விலக்கு, அது எந்த நாடானாலும்


sekar ng
ஜூன் 12, 2025 07:47

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் இந்தியனுக்கு ஆபத்து மோடி மௌனமானார் என்பர்


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 12, 2025 21:04

இதுக்கு நிச்சயம் மோடி வாயைத் தொறக்கமாட்டார். அமெரிக்க புலனாய்வு துறைகளும், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் மத்தியரசிடம் பலமுறை சமர்ப்பித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டுக்களவாணிகளிடம் பதிலை எதிர்பார்க்க முடியாதல்லவா


சமீபத்திய செய்தி