வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எதிர்க்க பலரும் ஒன்றிணைந்துள்ளனர்
மூர்க்கப்பதர்கள் தங்களது எதிரிகளை ஒன்றிணைத்துள்ளனர் .....
லண்டன்: லண்டனில் பாக்., தூதரகம் முன், இந்திய - இஸ்ரேல் தேசிய கொடிகளை ஏந்தியவாறு, பாகிஸ்தானுக்கு எதிரான கண்டன போராட்டம் நடந்தது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, பல்வேறு நாடுகளில் உள்ள பாக்., துாதரகங்கள் முன் இந்தியர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிட்டன் லண்டனில் உள்ள பாக்., துாதரகத்தில், இந்தியா, இஸ்ரேல் கொடிகளை ஏந்தியவாறு, லண்டன் வாழ் இந்தியர் மற்றும் இஸ்ரேலியர் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனர். பஹல்காமில் சுற்றுலா பயணியர் 26 பேரை சுட்டுக்கொன்றதை கண்டித்ததுடன், பாக்., எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோல், பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர் இந்தியாவுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர்.
எதிர்க்க பலரும் ஒன்றிணைந்துள்ளனர்
மூர்க்கப்பதர்கள் தங்களது எதிரிகளை ஒன்றிணைத்துள்ளனர் .....