உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தீயில் சிக்கிய இந்திய சிறுவர்கள்; உயிர் காத்த தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசு கவுரவம்

தீயில் சிக்கிய இந்திய சிறுவர்கள்; உயிர் காத்த தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசு கவுரவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உட்பட குழந்தைகளை மீட்ட இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது.சிங்கப்பூரில் ஏப்ரல் 8ம் தேதி பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகளின் அலறல் சத்தங்களைக் கேட்டதும் இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் சிறிதும் தாமதிக்காமல், மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி குழந்தைகள் அனைவரையும் மீட்டனர். அப்போது நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கரும் தீ விபத்தில் சிக்கி கொண்டார். பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மார்க் சங்கர் காயம் அடைந்தார். அவருக்கு கைகள், கால்களில் காயம் ஏற்பட்டது. தற்போது குழந்தைகள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தீ விபத்தில் இருந்து ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உட்பட குழந்தைகளை மீட்ட இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. அவர்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

murugesan usi
ஏப் 14, 2025 08:56

யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழன்


Ams Alawdeen
ஏப் 13, 2025 21:32

மனித நேயம் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் எங்கிருந்தாலும் மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்


Ram Moorthy
ஏப் 12, 2025 22:24

பவன் கல்யாண், அல்லது அர்ஜூன், மகேஷ் பாபு, என்டிஆர் மலையாள கர்நாடக நிறைய இளம் நடிகர்கள் போன்ற நிறைய பேர் இங்கு தமிழகத்தில் பாதுகாப்பாக படித்து வளர்ந்தவர்கள் இங்கு கிடைக்காத பாதுகாப்பு கல்வி திறமை வேறு எந்த நாட்டிலும் கிடைக்கப் போவதில்லை.


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 14, 2025 04:45

சிங்கப்பூரில் இந்தி கற்க வேண்டிய அவசியம் இல்லை.


Subramanian
ஏப் 12, 2025 17:08

குழந்தைகளை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி. பாராட்டுகள்


N Annamalai
ஏப் 12, 2025 10:18

தமிழர்கள் என்று சொல்ல என்ன தயக்கம் .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 12, 2025 12:46

இந்தியன் இந்தியாவில் இருக்கும் வரைதான் தமிழன், மலையாளி, மார்வாடி, குஜராத்தி, பெங்காலி எல்லாம் ..... ஒரு வெளிநாட்டில் அனைவரையும் இந்தியர் என்றுதான் கருதுவார்கள் ..... உங்களுக்குப் பொது அறிவு, அகன்ற பார்வை தேவை ....


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 14, 2025 04:47

சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்கள் அனைவரையும் தமிழர்களாக மட்டுமே கருதும் சிங்கப்பூர் அரசு.


Keshavan.J
ஏப் 12, 2025 10:15

Inderjit Singh, Subramanian Saranraj, Nagarajan Anbarasan and Sivasami Vijayaraj received the Friends of ACE coins from the Manpower Ministrys Assurance, Care and எங்கேஜ்மெண்ட், இவர்கள்தான் அந்த குழந்தைகளை காப்பாற்றிய ஹீரோக்கள். ஒரு பஞ்சாபி மூன்று தமிழர்கள்


Rangarajan Cv
ஏப் 12, 2025 12:17

Tks sir sharing the names. Very proud of them. Congrats


Rangarajan Cv
ஏப் 12, 2025 09:38

It would been very nice if their names are also revealed. While news paper shows eagerness in revealing Pavan kalyan’s son’s name, why not those people who saved them?


swamy
ஏப் 12, 2025 09:24

Well done Singapore


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை