உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2030க்குள் இந்திய பொருளாதாரம் இரட்டிப்பாகும்: ஜெய்சங்கர்

2030க்குள் இந்திய பொருளாதாரம் இரட்டிப்பாகும்: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மனாமா: பக்ரைனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நடந்த மனாமா விவாத மன்றத்தில் பேசுகையில், ''தற்போது 300 லட்சம் கோடி ரூபாயாக உள்ள இந்திய பொருளாதாரம், 2030க்குள் 600 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும்,'' என நம்பிக்கை தெரிவித்தார்.வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கு ஆசிய நாடுகளான கத்தார் மற்றும் பக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

விவாதம்

கத்தார் பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் பக்ரைன் சென்ற அவரை, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று காலை, முதல் நிகழ்ச்சியாக மனாமாவில் உள்ள ஸ்ரீநாத் ஜி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், '200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநாத் ஜி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன், இந்த நாள் துவங்கியது. 'இந்தியா - பக்ரைன் இடையேயான நீண்ட கால நல்லுறவுக்கு இந்த கோவில் ஒரு சிறந்த அடையாளம்' என, குறிப்பிட்டுள்ளார். பின், மனாமாவில் நடந்த 20வது மனாமா விவாத மன்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். 'பிராந்திய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் மத்திய கிழக்கின் தலைமை' என்ற தலைப்பில் இந்தாண்டுக்கான விவாதம் நடந்தது.

இதில், அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

இந்தியா இன்று 300 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரமாக உள்ளது; 2030க்குள் இது இரட்டிப்பாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் வர்த்தகமும் இரட்டிப்பாகும்.செங்கடல் பகுதியின் பாதுகாப்பு, பிராந்திய ஒத்துழைப்புக்கு முக்கியத்துவமாக திகழ்கிறது. இங்கு நாங்கள் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறோம். இது, ஆசிய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதலால் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் கப்பலுக்கான கட்டணம், காப்பீடு கட்டணம் உயர்கிறது.

பன்முக உறவு

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஏடன் வளைகுடா, சோமாலியா, வடக்கு அரேபிய கடல் பகுதியில் இந்தியா கடற்படையை நிறுத்தியது. 250 கப்பல்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளோம். 120 கப்பல் ஊழியர்களை மீட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.இன்று நடக்க உள்ள இந்தியா - பக்ரைன் துாதரக கூட்டத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பக்ரைன் வெளியுறவு அமைச்சர் அப்துல் லத்தீப் தலைமை தாங்குகின்றனர். இந்த கூட்டத்தில், இரு நாடுகளுக்கிடையே உள்ள பன்முக உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பேச்சு நடத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

raju
டிச 17, 2024 12:37

கண்டிப்பா அடானியோட பொருளாதாரம் இரட்டிப்பாகும்.


என்றும் இந்தியன்
டிச 09, 2024 17:08

2030க்குள் இந்திய பொருளாதாரம் இரட்டிப்பாகும்: ஜெய்சங்கர்???சிறிய மாற்றம் 2030க்குள் இந்திய ஊழலார்களின் சோனியா ஸ்டாலின்........ பொருளாதாரம் இரட்டிப்பாகும்


ஆரூர் ரங்
டிச 09, 2024 14:49

சரி. சென்ற மாதமே நமது நாட்டில் அன்னிய நேரடி முதலீடு ஒரு டிரில்லியன் டாலர்களாக அதிகரித்து சாதனை படைத்துள்ளது. முந்திய ஆட்சியில் இதை கனவிலும் நினைத்துப் பார்க்கவே முடியாது .


நிக்கோல்தாம்சன்
டிச 09, 2024 14:14

நீங்க என்னத்தான் உருண்டு பிரண்டாலும் காட்டி கூட்டி கொடுக்கும் ஒரு குரூப் இந்தியாவில் உள்ளது , அது உங்களை விடவே விடாது


SANKAR
டிச 09, 2024 09:54

enakku vayasu 20. ithu 2044 ku rettippaagum


நிக்கோல்தாம்சன்
டிச 11, 2024 05:11

அதுவரை தமிழக கார்பொரேட் குடும்பத்தின் உற்சாக பானத்தை அருந்தும் தொண்டராகவே இருந்துவிடுங்க பிறப்பே


Barakat Ali
டிச 09, 2024 09:38

ஜெய்ஷங்கர் சார் .... இது உங்க டயலாக் இல்லீங்களே ???? நிம்மிம்மா மார்கழி மாத பஜனைக்காக சென்னைக்கு அட்வான்ஸாவே புறப்பட்டு வர்றாங்களா ????


hari
டிச 09, 2024 10:02

பாய். நீங்க ஒரிஜினல் பாயா இல்ல பாகி பாயா?


Jay
டிச 09, 2024 09:33

மாநில அரசுகள் தொடர்ந்து இலவசத் திட்டங்களை அள்ளி வீசுவதால் பணம்வீக்கம் அதிகம் ஆகிறது. பண மதிப்பு குறைந்தால் அங்கு பெட்ரோல் டீசல் விலை மிக வேகமாக அதிகரிக்கும். 200 ரூபாய் யூபிஸ்கள் போடும் கமெண்ட்களை விட்டுவிட்டு நம்மை நாம் 2030 திட்ட வளர்ச்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் நாம் மிகவும் பின் தங்க நேரிடும்.


Indian
டிச 09, 2024 09:04

ஆம் டாலருக்கு நிகர் ருபாய் 100 ஆகும், பால் விலை 30% அரிசி 15% கோதுமை 15% பெட்ரோல் 15% உயரும், வரி 20% உயரும். நாம எப்பவும் போல நேரு னு உருட்டலாம்


Hari
டிச 09, 2024 08:14

எதுவுமே தெரியாம 4 அறிவிலி கொத்தடிமைகள் உலருது


N.Purushothaman
டிச 09, 2024 07:44

திரட்டு திராவிடனுங்க கதறுவானுங்களே ....பாரத தேசம் வளர்ந்தால் இவனுங்களுக்கு பிடிக்காதே ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை