உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியருக்கு ரூ.240 கோடி பரிசு

இந்தியருக்கு ரூ.240 கோடி பரிசு

அபுதாபி:: கேரளாவைச் சேர்ந்த 29 வயது இளைஞர்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனில்குமார் பொல்லா, 29, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பொழுதுபோக்கிற்காக லாட்டரி வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த அனில்குமாருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் 'பிக் டிக்கெட்' லாட்டரியில், தானாகவே எண்களின் கலவையை உருவாக்கும் 'ஈஸி பிக்' விருப்பத்தைப் பயன்படுத்தி, வெற்றி டிக்கெட்டை தேர்ந்தெடுத்துள்ளார். அப்போது தனது தாயின் பிறந்த மாதமான நவம்பரை குறிக்கும் வகையில், 11ம் எண் இறுதியாக இருக்கும்படி வைத்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற 23வது அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றிக்கான ஏழு எண்களையும் சரியாக பொருத்தி, ஐக்கிய அரபு எமிரேட்சின் மிகப்பெரிய லாட்டரி பரிசான 100 மில்லியன் திர்ஹாம், அதாவது 240 கோடி ரூபாயை வென்றுள்ளார். மொத்தம் 88 லட்சம் பேர் இந்த லாட்டரியில் பங்கேற்றதில், அவர் வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை