உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க சுகாதார துறையின் முக்கிய பதவியில் இந்தியர்

அமெரிக்க சுகாதார துறையின் முக்கிய பதவியில் இந்தியர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்று, அங்கு உள்ள ஸ்டான்போர்ட் பல்கலையின் சுகாதார கொள்கை துறையின் பேராசிரியராக உள்ள டாக்டர் ஜெய் பட்டாச்சார்யா, 56, என்பவர், அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், டிரம்ப் வெற்றி பெற்றார். இவர், 2025 ஜனவரி 20ல் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் துவங்கி தற்போது நடந்து வருகின்றன. முக்கிய துறைகளுக்கான நபர்களை டிரம்ப் தேர்வு செய்து வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0h1q4u6c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில் அமெரிக்க சுகாதார துறையின் முக்கிய அமைப்பான, தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளியான ஜெய் பட்டாச்சார்யாவை டிரம்பின் நிர்வாக மாற்ற குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.கோல்கட்டாவில் பிறந்த ஜெய் பட்டாச்சார்யா, அமெரிக்கா சென்று அங்குள்ள ஸ்டான்போர்ட் பல்கலையில், மருத்துவத்தில் முதுநிலை பட்டமும், பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.தற்போது, ஸ்டான்போர்ட் பல்கலையின் சுகாதார கொள்கை துறையின் பேராசிரியராகவும், ஏழைகளின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு குறித்த தொடர் ஆய்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம், மருத்துவ ஆராய்ச்சிக்காக 4.2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை வைத்துள்ள மிகப்பெரிய அரசு நிறுவனமாக உள்ளது.இந்நிறுவனம் சுகாதாரம் மற்றும் மக்கள் சேவைகள் துறையின் கீழ் வருகிறது. அத்துறையின் தலைவர் ராபர்ட் கென்னடி ஜூனியரை, ஜெய் பட்டாச்சார்யா சமீபத்தில் சந்தித்து, தேசிய சுகாதார நிறுவனம் எந்த வகையான புதுமையான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து விவாதித்தார். அவரது ஆலோசனைகள் ராபர்ட் கென்னடியை கவர்ந்ததாக செய்தி வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

வைகுண்டேஸ்வரன்
நவ 25, 2024 09:41

ஆமா, இனிமேல் அமெரிக்காவில் இந்தியருக்கு இனி மெடிக்கல் fees, மருந்துகள் எல்லாம் 50% தள்ளுபடி.


Barakat Ali
நவ 25, 2024 09:37

பட்டாச்சார்யா என்றால் முற்பட்ட வகுப்பினராமே ? டிரம்ப் ஆரியர்களைதான் தேர்ந்தெடுப்பாரோ ?


Bye Pass
நவ 27, 2024 12:57

பானர்ஜி தான் பட்டாச்சார்யா ..காஷ்மீரில் முகமது ஷாபி பண்டிட் IAS அதிகாரி


அப்பாவி
நவ 25, 2024 07:20

ஆஹா.. இந்தியாவுல மக்கள் முன்னேறிடுவாங்க. தொழில் வளர்ச்சி பிச்சிக்கிட்டு போகப் போகுது. ஒயிட் ஹவுசில் நமக்கு ஆளுங்க இருக்காய்ங்க.


Srinivasan K
நவ 25, 2024 07:45

india develops on its own. only opposition spewing venom. maharashtra adi romba


Sakthi,sivagangai
நவ 25, 2024 09:04

ஏன்யா அப்புசாமி பொழுது விடிஞ்சாலே ஏன் இப்படி வன்மத்தை கக்குற அப்படி என்ன இந்த தேசத்தின் மீது வெறுப்பு? ஒருவேளை உன் வீட்ல உனக்கு சோறு கீறு போடாம வெரட்டி விட்டுட்டாங்களா அந்த கோபத்தைதான் நீ இங்க காமிக்கிறியா அதையாவது சொல்லித் தொலைய்யா...


Bye Pass
நவ 25, 2024 06:55

டாஸ்மாக் தானே நமக்கு முக்கியம்


babu
நவ 25, 2024 06:21

இப்படியே எங்க ஆளு...எங்க ஆளு ன்னு பெரும பீதிட்டு இருங்க, நம்ம நாட்டுக்கு சல்லி பிரயோஜனம் இல்ல


Senthoora
நவ 25, 2024 06:46

மறுபக்கம் நம்ம தொழில் அதிபருக்கு பிடிவாரண்டு. அதையும் கோண்டாடலாமே.


Srinivasan K
நவ 25, 2024 07:47

there is nothing wrong in appreciating talent. when some people rejoiced at useless kamala s nomination


Mani . V
நவ 25, 2024 05:47

வெளிநாட்டில் பெரிய பதவிக்கு வந்து விட்டால் அவர் எந்த நாட்டினரை, மதத்தினரை, ஜாதியினரை திருமணம் செய்து இருந்தாலும், "அவர் எங்க ஆளு" அப்படின்னு சொல்லுவோம், கொண்டாடுவோம். அதையே உள்ளூரில் செய்தால் மட்டும் ஆணவக் கொ... செய்து விடுவோம்.


Srinivasan k
நவ 25, 2024 07:44

there is nothing wrong in appreciating talent what is your bother


Barakat Ali
நவ 25, 2024 08:58

Srinivasan, nothing wrong in his words. You should appreciate him.


Mani . V
நவ 25, 2024 05:47

வெளிநாட்டில் பெரிய பதவிக்கு வந்து விட்டால் அவர் எந்த நாட்டினரை, மதத்தினரை, ஜாதியினரை திருமணம் செய்து இருந்தாலும், "அவர் எங்க ஆளு" அப்படின்னு சொல்லுவோம், கொண்டாடுவோம். அதையே உள்ளூரில் செய்தால் மட்டும் ஆணவக் கொ... செய்து விடுவோம்.