உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் ரூ.4,200 கோடி கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழிலதிபர் தலைமறைவு

அமெரிக்காவில் ரூ.4,200 கோடி கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழிலதிபர் தலைமறைவு

வாஷிங்டன் : அமெரிக்காவில், தொலைதொடர்பு நிறுவனம் நடத்தி வந்த இந்திய வம்சாவளியான பங்கிம் பிரஹம்பட், போலியான ஆவணங்கள் தயாரித்து 4,200 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதாக செய்தி வெளியாகி உள்ளது.குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பங்கிம் பிரஹம்பட். அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர் . இவர் நியூயார்க்கில், 'பிராட்பாண்ட் டெலிகாம்' மற்றும் 'பிரிட்ஜ்வாய்ஸ்' ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தார். 2023ல் தொலைதொடர்பு துறையில் திறன் மிக்க, 100 மனிதர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில், இவர் தன் நிறுவனத்தின் பெயரில், 2020 முதல் கடன் வாங்க துவங்கினார். இதற்கான வருவாய் ஆதாரங்கள், வாடிக்கையார் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அமெரிக்க தனியார் நிதி நிறுவனமான, 'பிளாக்ராக்'கிடம் சமர்பித்தார். அதன் அடிப்படையில் பங்கிமின் நிறுவனம், 2021 வரை 3,400 கோடி ரூபாய் கடன் பெற்றது. அந்த கடன் தொகை, 2024ல், 4,200 கோடி ரூபாயாக உயர்ந்தது.கடந்த ஜூலையில், 'பிளாக்ராக்' நிறுவனம் அவரது கணக்குகளை ஆய்வு செய்த போது, கடன் பெறுவதற்காக போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும், கடனுக்கான அடமான சொத்துக்களை மொரீஷியஸ் மற்றும் இந்தியாவில் உள்ள கணக்குகளுக்கு மாற்றியது தெரிந்தது.இது குறித்து, 'பிளாக்ராக்' நிறுவனம் ஆகஸ்டில் பங்கிம் மீது வழக்கு பதிந்தது. அதே மாதம் அவர் தன் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், அவர் மீதான வழக்கு குறித்து விசாரிக்க அதிகாரிகள் பங்கிமின் நியூயார்க் வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது. விலையுயர்ந்த கார்கள் தூசி படிந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளன. அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கருதுகின்றனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
நவ 02, 2025 09:34

கைலாசத்துக்கு தப்பி ஓடிட்டாராம்...


Barakat Ali
நவ 02, 2025 08:59

டிரம்பு ஏன் விரட்டமாட்டாரு ????


Kasimani Baskaran
நவ 02, 2025 07:53

வாங்கிய கடனை பிளாக்ராக்கில் முதலீடு செய்து இருந்தாலே இரட்டிப்பாகி இருக்கும். மொரிசியஸ் மற்றும் சீய்ச்சல்ஸ் - இவை கட்டுப்பாடு இல்லா நாடுகள் - சிதம்பரம் போன்றோர் காலையில் நிறுவனம் ஆரபித்து, நிமிடத்தில் பல்லாயிரம் கோடி பணச்சலவை செய்து சிறிது, பணத்தை வேறு நாட்டுக்கு அனுப்பியவுடன் சிறிது நேரத்தில் நிறுவனத்தை மூடிவிடவும் அனுமதிக்கிறார்கள்.


Ramesh Sargam
நவ 02, 2025 05:45

அடப்பாவமே இந்திய தொழிலதிபர்கள் இந்தியாவில் இந்திய வங்கிகளை, மற்றும் தனியார் வங்கிகளை ஏமாற்றியது போதாதென்று இப்பொழுது வெளிநாடுகளிலும் ஏமாற்ற கிளம்பிவிட்டனர். இந்தியாவில் இதுவரையில் வங்கிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, ஜட்டின் மேத்தா, ஐசிசி வங்கியின் முக்கிய பெண் தலைவர் மற்றும் ஹைதெராபாத் நகரின் முக்கிய ஆங்கில பத்திரிகையின் உரிமையாளர்கள் ரெட்டி சகோதரர்கள் மற்றும் பலர். இவர்களெல்லாம் இன்றுவரை சட்டத்தால் தண்டனை பெற்றதாக செய்தி இல்லை. இந்திய காவல்துறையினர் மற்றும் நீதிமன்றம் ஒரு சில சிறு திருடர்களை பிடித்து தண்டித்து, அதை தலைப்பு செய்தியாக வெளியிடும். பெரிய பெரிய விஜய் மல்லையா போன்ற சுறாமீன் வங்கிக்கொள்ளையர்களை இவர்களால் தண்டிக்கவே முடியாது. ஏன் அவர்களை தண்டிக்க முடியவில்லை? கேட்டால் சட்டம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன் எல்லோரும் சமன் என்று லாஜிக் பேசுவார்கள். வெட்கம். வேதனை.


Bala
நவ 02, 2025 00:27

Gujarat nale ஊழல் தான்


vivek
நவ 02, 2025 05:16

இதோ ஒரு கொத்தடிமை குஜராத் பத்தி பேசுது


Ramesh Sargam
நவ 01, 2025 23:57

இந்திய தொழிலதிபர்கள் இந்தியாவில் இந்திய வங்கிகளை, மற்றும் தனியார் வங்கிகளை ஏமாற்றியது போதாதென்று இப்பொழுது வெளிநாடுகளிலும் ஏமாற்ற கிளம்பிவிட்டனர். இந்தியாவில் இதுவரையில் வங்கிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, ஜட்டின் மேத்தா, ஐசிசி வங்கியின் முக்கிய பெண் தலைவர் மற்றும் ஹைதெராபாத் நகரின் முக்கிய ஆங்கில பத்திரிகையின் உரிமையாளர்கள் ரெட்டி சகோதரர்கள் மற்றும் பலர். இவர்களெல்லாம் இன்றுவரை சட்டத்தால் தண்டனை பெற்றதாக செய்தி இல்லை. இந்திய காவல்துறையினர் மற்றும் நீதிமன்றம் ஒரு சில சிறு திருடர்களை பிடித்து தண்டித்து, அதை தலைப்பு செய்தியாக வெளியிடும். பெரிய பெரிய விஜய் மல்லையா போன்ற சுறாமீன் வங்கிக்கொள்ளையர்களை இவர்களால் தண்டிக்கவே முடியாது. ஏன் அவர்களை தண்டிக்க முடியவில்லை? கேட்டால் சட்டம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன் எல்லோரும் சமன் என்று லாஜிக் பேசுவார்கள். வெட்கம். வேதனை.


அப்பாவி
நவ 01, 2025 23:00

இங்கே ஆட்டையப் போட்ட பணம்தான் மொரிஷியஸ் தீவுக்கு சென்று அந்நிய முதலீடாக இந்தியாவுக்கு திரும்பி வருது. தொப்புள் கொடி உறவு கீது.


Balasri Bavithra
நவ 01, 2025 22:10

காங்கிரஸ் உடன் தொடர்ப்பு இருக்கும் .மௌரிஸியேஸ் இல் முதலீடு நம்ம காங்கிரஸ் அதிகம் .


Raghavan
நவ 01, 2025 21:38

இங்கஉள்ளவனுவுக மோசடி செய்துவிட்டு அங்க போய் ஒளியறாணுக அங்bg மோசடி செய்துவிட்டு இங்கே வந்து ஒளியறாங்க. பரஸ்பரமா கைதிகளை மாற்றிக்கொள்ளுவதுபோல் இவனுவுகளையும் மாற்றிக்கொள்ளவேண்டும்போல் தெரிகிறது.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 01, 2025 21:34

குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பங்கிம் பிரஹம்பட். - ஹா ஹா ஹா .. வேற யாரு?


ஆரூர் ரங்
நவ 01, 2025 21:58

ஆம் காந்தி பிறந்த மண். ஆனால் இணையத்தில் RAJ RAJARATNAMஎன தேடிப் பாருங்க. சில தமிழர்களின் அருமை பெருமை புரியும்.


vivek
நவ 02, 2025 05:15

திருட்டு ரயிலில்.வந்தவர் யாரோ பொய்ஹிந்து... ஹி ஹி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை