உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - புருனே வர்த்தக உறவு மேம்படும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

இந்தியா - புருனே வர்த்தக உறவு மேம்படும்: பிரதமர் மோடி நம்பிக்கை!

பந்தர் செரி பெகவான்: புருனே நாட்டு பயணத்தை முடித்துவிட்டு, தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். 'இந்தியா மற்றும் புருனே நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு வரும் காலங்களில் இன்னும் மேம்படும்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.தென் கிழக்காசிய நாடான புருனேவில் மன்னராட்சி முறை உள்ளது. அந்நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர், அந்நாட்டு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xn0io0ya&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பேச்சுவார்த்தை

புருனே சுல்தான் ஹசனல் போல்கியாவின் இல்லம், உலகின் மிகப்பெரிய அரண்மனை என்ற பெருமையை பெற்றுள்ளது. 20 லட்சம் சதுரடி பரப்பளவில் உள்ள இந்த அரண்மனையில், 1,700 அறைகள் என, அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த சொகுசு அரண்மனையில், அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியாவுடன் இந்தியா - புருனே இடையேயான இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருநாட்டு உறவுகள்

பின்னர் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், 'சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் பேச்சுக்கள் பரந்த அளவில் இருந்தன. நமது நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளையும் உள்ளடக்கியது. வர்த்தக உறவை மேலும் விரிவுபடுத்த போகிறோம்' என குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தை முடித்து, சிங்கப்பூருக்கு, அவர் புறப்பட்டுச் சென்றார்.

வரவேற்பு

சிங்கப்பூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்றனர். அவருடன் கைகுலுக்கியும், செல்பி எடுத்தும், ஆட்டோகிராப் வாங்கியும் இந்திய வம்சாவளியினர் மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 18:21

புருனே மன்னர் தொலைகாட்சி தொகுப்பாளரை மணந்தாராமே ????


Easwar Kamal
செப் 04, 2024 16:51

anathae எல்லாம் சரிந்தாங்கோ நான் கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீடு என் மாநிலம் மற்றும் பிஜேபி ஆளுகின்ற மாநிலத்தானுக்குத்தான் என்ற நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். தன வந்துட்டு போன அடுத்த 10 நாட்களில் தன நண்பர் கூட்டம் பின்னாடியே வந்து தங்கள் வியாபாரத்தை விரிவு படுத்திக்கொள்வதனால் இந்தியாவுக்கு எந்த பயனும் கிடையாது. ஒரு கண்ணில் சுண்ணாம்பு மற்றொரு கண்ணில் வெண்ணை பிறகு பார்வை எப்படி கிடைக்கும். புரிந்து நடந்தால் நல்லது.


பச்சையப்பன் கோபால் புரம்
செப் 04, 2024 13:14

ஆமாமா புருனேவுடன் ஒரு கோடியே நுறாயிரம் கோடிகள் வியாபாரமாம்!! நம்பிட்டோம். இதோ எங்கள் தங்கத்தள்ளபதி பல நூறாயிரம் கேடி வியாபாரத்துடன் பறந்தோடி வருவாராக்கும். மரத்த தமிழ் மண்ணில் பாலாறும் தேனாறும் ஓடும் காலம் நொறுங்கிக் கொண்டிருக்கிறது.


Sivagiri
செப் 04, 2024 12:24

மோடி பேசிய பொழுது , அடிக்கடி யுவர் மெஜெஸ்டி - யுவர் மெஜெஸ்ட்டி - என்று குறிப்பிட்டது - விரும்பத்தக்கது அல்ல - பத்தாயிரக்கணக்கான ஆண்டுகள் சரித்திரம் கொண்ட , 140 கோடி மக்களை கொண்ட, ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் தலைவர் - - குட்டியூண்டு தீவின் மன்னரை போயி , யுவர் மெஜஸ்டி என்று அழைத்தது , ஏற்றுக்கொள்ள முடியாது , , , டியர் பிரெண்ட் - என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்ளலாம் . . .


முக்கிய வீடியோ