உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் வம்சாவளி இந்தியர் மம்தானி

நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் வம்சாவளி இந்தியர் மம்தானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நியூயார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி, குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நடந்த மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x3875rh2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த மம்தானி இன்று அந்நகரில் கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் மேயராகப் பதவியேற்றார். அவர் குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்று கொண்டார்.

பாக்கியம்

பதவி ஏற்று கொண்ட, பிறகு மம்தானி பேசுகையில், நியூயார்க் நகரின் மேயராகப் பதவியேற்பது வாழ்நாள் மரியாதையாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. ​​பழைய சுரங்கப்பாதை நிலையம் நமது நகரத்தின் உயிர்ச்சக்தி, சுகாதாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.பெற்றோர்மம்தானி, உகாண்டா நாட்டின் கம்பாலா நகரில் பிறந்தவர். இவர், 5 வயது சிறுவனாக இருந்தபோது, அவரது பெற்றோர், வம்சாவளி இந்தியர்களான சினிமா இயக்குனர் மீரா நாயர், மஹ்மூத் மம்தானி ஆகியோர், அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பிரேம்ஜி
ஜன 02, 2026 07:36

வெத்துப் பெருமை பேசும் நம் வழக்கம் மாறாது! சல்லிப் பிரயோசனம் இல்லாத செய்தி!


ஆரூர் ரங்
ஜன 02, 2026 07:25

9/11 இரட்டை கோபுர தாக்குதலை இவ்வளவு விரைவில் மறந்து விட்டார்களே. அறிவிலிகளுக்கு மீண்டும் ஒரு பெரிய பாடம் தேவைப்படுகிறதா?.


சண்முகம்
ஜன 02, 2026 06:45

இவர் இந்திய வம்சாவளி இல்லை. இடி அமீனின் உகாண்டா வம்சாவளி.


montelukast sodium
ஜன 01, 2026 23:49

இந்நிழ்வானது நிறவெறியற்ற இன்றைய தலைமுறையினரின் வெற்றியைப் பறைசாற்றுகிறது. வாழ்த்துக்கள்..


Priyan Vadanad
ஜன 01, 2026 23:14

நேர்மையான மற்றும் ஏழை மக்களை அன்பிற்கும் முஸ்லீம். மதப்புத்தகளில் கைவைத்து பொய்யுறுதி எடுத்து பதவியில் அமர்பவர் அல்ல இவர். m


Priyan Vadanad
ஜன 01, 2026 23:10

இங்குள்ளோர் தங்கள் மதப் புத்தகங்கள் மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்து பதவியில் அமரவில்லையா? n


திருப்பரங்குன்றம் முருகன், ஆஸ்திரியா
ஜன 01, 2026 20:42

தயவு செய்து இந்திய வம்சாவளி என்று போடாதீர்கள். அவன் முதலில் ஒரு அமெரிக்க பிரஜை. அமெரிக்கர்கள் நலனுக்கு வேலை செய்பவன். அவன் இந்திய வம்சாவளி என்றால் அதை அவன் தான் சொல்ல வேண்டும். அதில் இந்தியாவுக்கு ஒன்றும் பெருமையோ உபயோகமோ இல்லை. அவனும் இந்தியாவை பெருமை படுத்தும் வகையில் ஒன்றும் பேசுவது இல்லை. இந்தியாவில் இப்படியான செய்திகள் தலைப்பிட்டு போடுவது ஒரு வகை மனநோய் - தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் செய்வது. இந்தியாவில் பிறந்து இந்தியாவை நேசிக்கும் இந்திய சாதனையாளர்களை பற்றி இப்படி செய்தி போடுங்கள். மற்ற இந்த மாதிரி செய்திகளை சின்ன கட்டத்தில் கடைசி பக்கத்தில் போடுங்கள்


திகழ்ஓவியன்
ஜன 01, 2026 18:28

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த ஜோரான் மம்தானி, இன்று குர்ஆன் சாட்சியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு சரித்திரத்தில் இன்னொரு புதிய பக்கத்தை சேர்த்துள்ளார். இதில் வம்சாவளி இந்தியர் என்று பெருமை


தியாகு
ஜன 01, 2026 22:09

இன்னும் பத்து வருடங்கள் கழித்து பார், அவர் சுயரூபத்தை காட்டும்போது அமெரிக்காவில் இருந்து துரத்தியடிக்கப்படுவார்.


திகழ்ஓவியன்
ஜன 01, 2026 18:20

இவனை பெருமை பேசும் நீங்கள் அவன் குரான் மீது சத்தியம் செய்து பதவி ஏற்றான் அது தெரியுமா இங்கு அது தான் பேச்சே


Anand
ஜன 01, 2026 17:37

இவன் இந்திய வம்சாவளி என தம்பட்டம் வேண்டாம், காரணம் இந்தியாவிற்கு எதிராக விஷத்தை கக்கிக்கொண்டிருப்பவன், இவனுக்கும் அசிம் முனீர், ஹபீத் சயீத், அசார் முகம்மது போன்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.


Sivakumar
ஜன 01, 2026 21:35

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.


புதிய வீடியோ