உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி ப்ரீத்தம் சிங்? யார் இவர் தெரியுமா?

சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி ப்ரீத்தம் சிங்? யார் இவர் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீத்தம் சிங் பொறுப்பேற்று உள்ளார்.சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், மொத்தம் உள்ள 97 இடங்களில், ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, 10 தொகுதிகளில் வென்றது. தொழிலாளர் கட்சியை வழி நடத்தும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீத்தம் சிங் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.யார் இந்த ப்ரீத்தம் சிங்?* சிங்கப்பூரில் பிறந்த பிரிதம் சிங், பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்தவர். * ஆகஸ்ட் 2ம் தேதி 1976ம் ஆண்டு பிறந்த ப்ரீத்தம் சிங், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பட்டம் பெற்றுள்ளார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். * இவர் சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சியை வழிநடத்துகிறார்.* அரசியல் களத்தில் நுழைவதற்கு முன்பு, இவர் ஒரு வழக்கறிஞராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றினார்.* ப்ரீத்தம் சிங்கின் தலைமையின் கீழ், தொழிலாளர் கட்சி 2020ல் நடந்த பொதுத் தேர்தலில், 10 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி இருக்கையை பிடித்தது.* இவரது தலைமையிலான தொழிலாளர் கட்சி இந்த ஆண்டு தேர்தலிலும் 10 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது.* இவர் 2020ம் ஆண்டு முதல் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
மே 06, 2025 04:02

எதிர்க்கட்சிக்கு பொதுவாகவே நிதி ஆதாரங்கள் குறைவு - ஆகவே ப்ரீத்தம் சிங் தனது சம்பளத்தின் பெரும்பகுதியை கட்சிக்கே கொடுத்து விடுகிறார்.


naranam
மே 05, 2025 23:27

சும்மா எதற்கெடுத்தாலும் என்ன இந்திய வம்சாவளி..அவர் தனது உழைப்பால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்..இது அவருடைய வெற்றி..இந்தியாவிலோ இத்தாலிய வம்சாவளியினர் எதிர் கட்சித் தலைவராக உள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாமே!


kalyan
மே 05, 2025 22:21

சிங்கப்பூர் வாழும் பஞ்சாபிகள் நேதாஜி காலத்திலேயே அங்கு சென்று ஆங்கிலேயர்களுக்காக ஜப்பானியர்களை எதிர்த்து போர் புரிந்தவர்கள் .சிங்கப்பூர் மக்களால் விரும்பப்படுபவர்கள் . இரண்டாம் உலக போர் முடிந்ததும் அங்கேயே தங்கி மலேஷியா சிங்கப்பூர் மக்களுடன் இரண்டறக்கலந்து கடுமையான உழைப்பும் சிங்கப்பூரின் கட்டுக்கோப்பான வாழ்க்கையும் வாழ பழகியவர்கள் . அவர்களுக்கும் கனடா சென்று நாட்டிற்கு எதிராக சதி செய்யும் சீக்கியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை


Iniyan
மே 05, 2025 22:19

உலகில் இடது சாரி சிந்தை கொண்ட தொழிலாளர் கட்சிகளை என்றும் நம்ப கூடாது.


Sivakumar
மே 05, 2025 22:16

வெளிநாட்டுல இந்திய வம்சாவளியினர் ஆட்சிஅதிகாரத்திற்கு வந்தால் கொண்டாடுவோம். ஆனா இங்கே ஒரு நாத்திகன் ஒரு இந்து பொண்ணை கல்யாணம் பண்ணி அவள் கோவில் பூஜைகளில் பங்கேற்றாலும் கிண்டல் கேலி பண்ணுவோம். இத்தாலி காரி இந்தியனை கல்யாணம் பண்ணி, இந்தியன் நாட்டுக்காக உயிரையே விட்டாலும், அவளையும் அவள் பிள்ளைகளையும் இத்தாலி இத்தாலி னு சொல்லி கேவலப்படுத்துவோம். ஏன்னா எங்க மத துவேஷம் அவளோ அசிங்கியமானது.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
மே 06, 2025 12:08

அட தக்காளி!


மீனவ நண்பன்
மே 05, 2025 21:47

சிங்கப்பூர்ல தமிழர்கள் தானே சவுண்ட் விடுவாங்க ..பஞ்சாபிகள் கனடா அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தானே அதிகம்


முக்கிய வீடியோ