உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவை கட்டாயப்படுத்த தீவிர பொருளாதார நெருக்கடி: இந்தியா மீது வரி விதிப்பு குறித்து ஜே.டி.வான்ஸ் கருத்து

ரஷ்யாவை கட்டாயப்படுத்த தீவிர பொருளாதார நெருக்கடி: இந்தியா மீது வரி விதிப்பு குறித்து ஜே.டி.வான்ஸ் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், அதிபர் டிரம்ப் தீவிர பொருளாதார நெருக்கடி தரும் வழிமுறைகளை பயன்படுத்தியுள்ளார்'' என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்து உள்ளார்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், வரி மற்றும் அபராத வரி விதித்துள்ளார். இது உலகளவில் எந்த நாட்டிலும் இல்லாத அதிகபட்ச வரி விதிப்பாகும். இதற்கு அமெரிக்க தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கருத்துகளையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து, துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது இரண்டாம் கட்ட வரி விதிப்பை மேற்கொண்டார். இது தீவிர பொருளாதார நெருக்கடி ஆகும். ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தக வருவாயை குறைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை ஆகும். உக்ரைனில் தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால், ரஷ்யாவை உலக பொருளாதாரத்தில் மீண்டும் புத்துயிர் பெற செய்ய முடியும் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்த முயன்றார். கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். கடந்த சில வாரங்களில், இரு தரப்பிலிருந்தும் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஜே.டி.வான்ஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

MUTHU
ஆக 26, 2025 09:23

இங்க அடிச்சா இங்க தானையா வலிக்கும். அங்க எப்படி வலிக்கும்.


anonymous
ஆக 25, 2025 21:34

அதுக்கு அமெரிக்கா பாதி விலையில் எண்ணையை இந்தியாவுக்கு விற்றால் இந்தியா ஏன் ரஷ்யாவிடம் எண்ணையை வாங்கப்போகிறது? அமெரிக்காவின் சர்கஸ் கூடாரத்தில் புதுப்புது பப்பூன்கள். வான்ஸும் ஒருவன்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 25, 2025 13:45

சொல்றது யாரு >>>> ஆந்திராகார பெண்ணை கல்யாணம் செஞ்சவரா >>>>


Vasan
ஆக 25, 2025 13:40

US should supply crude oil to India at the same rate in which India buys from Russia. With that, India can stop purchase of crude from Russia.


முதல் தமிழன்
ஆக 25, 2025 13:04

இவனை கூப்பிட்டு விருந்து வெச்சி குழந்தையை கொஞ்சி விலை உயர்ந்த பரிசெல்லாம் கொடுத்ததுக்கு இவன் திமிர் பேச்சு. சொல்லுவாங்களே நாயை குளிப்பாட்டின்னு.... அப்படி இருக்கு இவன் கதை .


Naranam
ஆக 25, 2025 12:23

இவர் டிரம்ப் சொல்வதைத் தவிர வேறு ஏதும் சொல்லமாட்டார்.. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை! ரஷ்யாவும் வளைந்து கொடுப்பது போல் தெரியவில்லை.. ஜெலன்ஸ்கியும் தோற்பது போல் தெரியவில்லை.. இப்படியே போனால் ரஷ்யாவுக்குத் தான் இது அவமானம். உக்ரைனிடம் இத்தனை நாட்கள் போரிட்டும் ஒரு தெளிவான வெற்றியைப் பெற முடியவில்லை.எனவே சீக்கிரம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது ரஷ்யாவுக்கும் நல்லது தான்.


Balaji
ஆக 25, 2025 11:12

அமெரிக்காவின் நோக்கம் தெளிவாக தெரிந்துவிட்டது. அவர்களின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வேளாண் பொருட்களை இந்தியாவில் சந்தை படுத்தவேண்டும். அதற்கு மோடி அரசாங்கம் செவி சாய்க்கவில்லை அதற்காகத்தான் இந்த வரி எல்லாம். ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்துவது உங்கள் நோக்கம் இல்லை. இந்தியா மட்டும் தான் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறார்களா? அப்படி என்றால் வேறு பல நாடுகளுக்கும் அதிக வரி போட்டிருக்கவேண்டும்.


SUBBU,MADURAI
ஆக 25, 2025 11:56

Very valid comment....


Pandi Muni
ஆக 25, 2025 10:26

நமது ரூபாய் இனி உலகாளும்.


Pandianpillai Pandi
ஆக 25, 2025 10:16

அமெரிக்கா தனித்து விடப்படும். உண்மையில் போரை நிறுத்தும் அக்கறை இருந்தால் உக்ரைனுக்கு உதவுதை நிறுத்த வேண்டும். போர் முடிவுக்கு வந்து விடும். உக்ரைனுக்கு உண்மையாகவும் இல்லை. எதிரிக்கு வீரனாகவும் இல்லாத அமெரிக்காவின் கீழ் புத்தி உலக நாடுகள் புரிந்துகொள்ளும். எத்தனையோ நெருக்கடிகளை பார்த்த நாடு இந்தியா. இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்பது நியாயமாகுமா? உண்மையில் இந்தியாவின் ராணுவ பலத்தை கண்டு அமெரிக்க அஞ்சுகிறது. பாகிஸ்தானுடன் நடந்த போருக்கு பின் தான் இத்தனை மாற்றம்.


SUBBU,MADURAI
ஆக 25, 2025 09:28

இன்னும் சில வருடங்களில் அமெரிக்காதான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்க போகிறது. டொனால்டு ட்ரம்பின் விசா கொள்கை மாற்றங்களுக்குப் பிறகு அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 46% சதவீதம் குறைந்துள்ளது. சீனா 26% சதவீதம் சரிந்துள்ளது. ஆசியா உலகின் மிகப்பெரிய கல்விச் சந்தையாக இருப்பதால், கோடைகால மாணவர் சேர்க்கை உச்சத்தில் இருக்கும் போது அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இப்போது பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இது அமெரிக்காவின் கொள்கை மாற்றமா அல்லது சுய நாசவேலையா?


புதிய வீடியோ