உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் கார் மோதிய விபத்து; பட்டம் பெறச் சென்ற இந்திய மாணவி பரிதாப பலி

அமெரிக்காவில் கார் மோதிய விபத்து; பட்டம் பெறச் சென்ற இந்திய மாணவி பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். பட்டம் பெறுவதற்கு முன்னர் அவர் உயிரிழந்தது, சக மாணவர்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீப்தி(24). ஆந்திராவில் நரசராவ் பேட்டை பொறியியல் கல்லூரியில் பிடெக் பட்டம் பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டமேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். இதற்காக பெற்றோர் சொந்த நிலத்தை விற்று பணம் ஏற்பாடு செய்தனர். வடக்கு டெக்சாஸ் பல்கலையில் பட்ட மேற்படிப்பு படித்தார். படிப்பு முடிந்த நிலையில் அடுத்த மாதம் பட்டம் பெற இருந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி டெண்டான் பகுதியில் ஸ்நீக்தா என்ற தோழியுடன் தீப்தி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் இருவர் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தீப்தி உயிரிழந்தார். ஸ்நீக்தா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலை, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வரும் திங்கட்கிழமை அன்று, தீப்தி உடல் குண்டூர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீப்தியின் மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஏப் 19, 2025 12:44

கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு இந்த இழப்பை தாங்க முடியாமல் அடுத்த செய்தி படிக்கலாம் என்றால், இந்த கார் விபத்து செய்தி. இந்திய இளம் மாணவர்கள் ஏன் இப்படி அவர்களின் இளம் வயதிலேயே மரணத்தை தழுவுகிறார்களோ.. வேதனை தாங்கமுடிவதில்லையே.


R.P.Anand
ஏப் 19, 2025 12:19

இங்குள்ள அரசியல் வாதிகள் சரியாக இருந்தால் அவர்கள் படிப்பதற்கு அலய வேண்டாம்.


Matt P
ஏப் 19, 2025 11:49

சாலையை கடக்கும் போதும் சாலை ஓரமாக போகும் போதும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் கவனமாக செல்வது நல்லது. ஓட்டுனர்களை நம்பியே நடப்பது நல்லதல்ல. சாலை விதிகளை மீறி தவறு செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள். ஆழ்ந்த இரங்கல் .


M S RAGHUNATHAN
ஏப் 19, 2025 11:10

மிக வருந்தத்தக்க செய்தி. ஆனால் செய்தியில் இவரும் தோழியும் "நடந்து" சென்று இருக்கும்போது விபத்து ஏற்பட்டது என்று இருக்கிறது. அவர்கள் சாலையில் விதி மீறி நடந்து சென்று கொண்டிருந்தார்களா அல்லது மோதிய வாகனம் கட்டுப் பாட்டை மீறி இவர்கள் மேல் மோதியதா என்று தெரியவில்லை.


Subramanian
ஏப் 19, 2025 07:32

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Easwar Kamal
ஏப் 19, 2025 00:29

ஆந்திராகார பய புள்ளைங்க சாகுறதுக்குனு சொத்து பத்து வித்து அமெரிக்கா வருதுங்க. பெற்றவர்கள்தான் பாவம். அப்படி வந்து ரொம்ப அடாவடிதனம் ஆன் மட்டும் அல்ல பெண்களும் தன செய்கின்றார்கள் பின்னர் இப்படி நிலைமை ஏற்படுகிறது. எனக்கு தெரிந்து பல ஆந்திர பெண்கள் படிக்க வந்து பணம் வேண்டும் என்பதால் இரவில் பார்களில் வேலை மற்றும் திரை அரங்கில் உள்ள kalivarigal சுத்தம் செயய்வதை பார்த்து உள்ளேன் indhae இந்தியாவில் செய்வார்களா ?


Soundarapandian T
ஏப் 19, 2025 08:01

அறிவு ஜீவி


Matt P
ஏப் 19, 2025 11:45

கழிவறைகளை தானே சுத்தம் செய்கிறார்கள். சுத்தம் சோறு போடும் என்பார்கள். சமுதாயம் ஏற்று கொள்ளாத தவறுகளை செய்வது தான் தவறு. அரசியலில் அவனவன் அசுத்தம் செய்து கொண்டு சொகுசாக வாழ்கிறஆன். வெளிநாடு வந்தாலும் உழைத்து வாழட்டுமே.


Natarajan Ramanathan
ஏப் 19, 2025 14:31

தங்கம் கடத்தாமல் கழிவறையை சுத்தம் செய்து பணம் சம்பாதிப்பது தவறில்லை .


Saai Sundharamurthy AVK
ஏப் 18, 2025 23:33

மிகவும் வருத்தமாக உள்ளது பகவானே !


பிரேம்ஜி
ஏப் 18, 2025 21:43

இளம் வயதில் கொடுமையான சாவு! இறைவா! இதெல்லாம் மிகவும் கொடுமை! ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை