உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்திய மாணவி பலி: போலீஸ் அதிகாரியை விடுவித்து உத்தரவு

அமெரிக்காவில் இந்திய மாணவி பலி: போலீஸ் அதிகாரியை விடுவித்து உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனின் சியாட்டிலில் நடந்த விபத்தில், 26 வயது இந்திய மாணவி கொல்லப்பட்ட வழக்கில், வாகனத்தை ஓட்டிச்சென்ற போலீஸ்அதிகாரியை விடுவித்து, உள்ளூர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

கேமரா

ஆந்திராவைச் சேர்ந்த ஜான்வி கண்டுலா,அமெரிக்காவின் சியாட்டிலில் படித்து வந்தார். கடந்தாண்டு ஜன., 23ம் தேதி சாலையை கடக்கமுயன்றபோது, வேகமாக வந்த போலீஸ் வாகனம் மோதியதில், அவர், 100 மீட்டர் துாரத்துக்கு துாக்கி எறியப்பட்டார். இந்த விபத்தில் அவர் உயிர்இழந்தார்.ஒரு வழக்கு தொடர்பாக விரைந்த அந்தப் போலீஸ் வாகனம், 120 கி.மீ., வேகத்தில் சென்றது. அந்த வாகனத்தை, போலீஸ் அதிகாரி கெவின் டேவ் ஓட்டிச் சென்றுள்ளார்.அந்த நேரத்தில்அங்கு ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி டேனியல் ஆடரர், மொபைல்போனில் கெவின் டேவிடம் பேசினார். அப்போது, '26 வயது பெண் தான்; பெரிய மதிப்பெல்லாம் இல்லை' என்று அவர் சிரித்தபடி கூறியுள்ளார். இது அவருடைய உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானது.

நடவடிக்கை

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானது. இளம்பெண்ணை மோதிக் கொன்றதுடன், அதைக் கிண்டல் செய்யும் வகையில் பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்த சம்பவம் உள்நாட்டில் மட்டுமல்லாமல், பல நாடுகளிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லாததால், போலீஸ் அதிகாரி கெவின் டெவ் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்று உத்தரவில் கூறியுள்ளது.மற்றொரு அதிகாரி டேனியல் ஆடரர், கிண்டல் செய்யும் வகையில் பேசியதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து போலீஸ் துறையை, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கதிரழகன், SSLC
பிப் 24, 2024 17:20

போலீஸ்காரனுக்கு அந்த கத்தி வருமா? பொறுத்திருந்து பாக்கலாம்.


Balaji
பிப் 24, 2024 17:13

இங்க பாருடா அமெரிக்கா ளையும் நம்ம திராவிட ஆட்சி தான் போல.


Arasu
பிப் 23, 2024 15:01

எதுக்கு அமெரிக்கா அமெரிக்கான் பிதுறிங்க...


Saravan Ravichandran
பிப் 23, 2024 21:34

டாலர்ஸ் காக தான். வேற எதுக்கு? இந்தியா வே அமெரிக்கா வ நம்பி தான் இருக்கு. globalisation வந்ததில் இருந்து எல்லாரும் அமெரிக்கா வ நம்பி தான் இருக்காங்க.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ