உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய மாணவி பலி: போலீஸ் அதிகாரி டிஸ்மிஸ்

இந்திய மாணவி பலி: போலீஸ் அதிகாரி டிஸ்மிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி வேகமாக ஓட்டிய கார் மோதியதில், இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அந்த போலீஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார்.அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் என்ற நகரில், 2023 ஜன., 23ல், கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டிச் சென்ற ரோந்து வாகனம் மோதி, ஆந்திராவைச் சேர்ந்த ஜாஹ்னவி கந்துலா, 23, என்ற மாணவி உயிரிழந்தார்.விதிகளை மீறி, 119 கி.மீ., வேகத்தில் ரோந்து காரை அவர் இயக்கியது தெரிய வந்தது. மாணவி ஜாஹ்னவி கந்துலா மீது கார் மோதிய போது, போலீஸ் அதிகாரி கெவின் டேவ் நக்கலாக சிரித்துக்கொண்டே கிண்டலடித்தது, ரோந்து காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவானது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில், இந்த விவகாரத்தில் கடமை தவறியதாகவும், காவல் துறையின் கொள்கைகளை மீறியதாகவும் கூறி, பணியில் இருந்து கெவின் டேவை நீக்கி சியாட்டில் போலீஸ் நேற்று உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Barakat Ali
ஜன 08, 2025 10:05

பொறுப்பற்ற செயலுக்கு தண்டனை எதுவும் கிடையாதா? டிஸ்மிஸ் நடவடிக்கை கூட தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு .....


Ramesh Sundram
ஜன 08, 2025 09:49

செத்தவர் அமைதி மார்கத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்நேரம் திராவிட பெருச்சாளிகள் ஊளையிட்டு ஒப்பாரி வைத்து இருக்கும்


R Ravikumar
ஜன 08, 2025 09:20

பணிநீக்கம் மட்டும் தான? கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க மாட்டார்களா? மேல் முறையிடு செய்ய வேண்டும்


அப்பாவி
ஜன 08, 2025 08:50

இங்கேன்னா அவரை ஆயுதப் படைக்கு மாத்தி வேற பசையான இடத்தில் போஸ்ட்டிங் போட்டு ஆட்டையப் போடச் சொல்லுவாங்க.


Yes your honor
ஜன 08, 2025 08:16

ஓ அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கை மதிக்கும் காவல் துறை உள்ளதா. எங்கள் ஊரில் வந்து பாருங்கள் போலிஸ் வாகனம் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடைஞ்சலாகத் தான் நிற்கும், ஏனெனில் அது போலிஸ் வண்டி. எந்தக் கடைக்கு சென்றாலும் காசு கொடுக்க மாட்டார்கள், கேட்டால் கஞ்சா கேஸ் போட்டுவிடுவதாக பகிரங்கமாக மிரட்டுவார்கள், ஏனெனில் அவர் போலீஸ். ரோட்டில் விபத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும், ஆனால் மொத்த டிராபிக் போலிஸும் எங்காவது கும்பலாக ஒளிந்து நின்றுகொண்டு டூ வீலரில் வரும் அப்பாவிகளிடம் வீர தீரமாக வசூல் செய்துகொண்டிருக்கும். கும்பலாக ஏன் இருப்பார்கள் என்றால் பங்குபிரிப்பதில் ஏமாந்துவிடக் கூடாது அல்லவா? அமெரிக்க போலிஸ்செல்லாம் பிழைக்க தெரியாமல் கடமையைச் செய்துகொண்டுள்ளார்கள், நம்ம ஊர் போலிஸ்தான் கெத்து.


Kalyanaraman
ஜன 08, 2025 07:32

அங்கு மக்களுக்காக சட்டம் இங்கு அதிகாரமும் பணமும் இருப்பவனுக்கு ஒரு சட்டம் அது இல்லாதவனுக்கு ஒரு சட்டம்.


Kasimani Baskaran
ஜன 08, 2025 06:17

அங்கு காவலர்களில் பலர் அதிகார போதையில் இருப்பவர்கள். சில இடங்களில் அவசியம் ஏற்படும் பொழுது சோதனைக்காக காரை நிறுத்துவார்கள். ஸ்டீரிங்க்கில் இருந்து கையை எடுக்கக்கூடாது - அவர்கள் சொல்வதை அப்படியே கேட்கவேண்டும். கெத்தாக கதவைத்திறந்தாலோ அல்லது கீழே குனித்தாலோ அல்லது வெளியே வர முயன்றாலோ உடனே சுட்டு விடுவார்கள். பல நேரங்களில் வெள்ளையர் அல்லாதோர்களை நன்றாக நடத்தமாட்டார்கள். சில அதிகாரிகள் வெள்ளையர் அல்லாதோரை நன்றாக நடத்தமாட்டார்கள். அதே சமயம் புகார் கொடுத்தால் நடவடிக்கை உண்டு.


Ramesh Sundram
ஜன 08, 2025 09:51

இது முற்றிலும் உண்மை கருப்பு இனத்தவராக இருந்தால் treatment இன்னும் மோசமாக இருக்கும் வெள்ளைக்கார காவல்துறை


D.Ambujavalli
ஜன 08, 2025 06:05

அந்த அதிகாரி இந்திய மாணவியின் உயிரைக் கிள்ளுக்கீரையாக எண்ணி கிண்டலடித்திருக்கிறார் ஒருவேளை வேண்டுமென்றேகூட காரை மோதி இருக்கலாம்


D.Ambujavalli
ஜன 08, 2025 06:05

வேண்டுமென்றேகூட காரை மோதி இருக்கலாம்


D.Ambujavalli
ஜன 08, 2025 06:05

அந்த அதிகாரி இந்திய மாணவியின் உயிரைக் கிள்ளுக்கீரையாக எண்ணி கிண்டலடித்திருக்கிறார். ஒருவேளை வேண்டுமென்றேகூட காரை மோதி இருக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை