உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் இந்திய மாணவி பரிதாப பலி

அமெரிக்காவில் இந்திய மாணவி பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்:ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கணேஷ் - ரமாதேவி ஆகியோரின் மகள் நாக ஸ்ரீ வந்தனா பரிமளா. இவர், கடந்த 2022ம் ஆண்டு உயர் படிப்பிற்காக அமெரிக்காவில் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில் உள்ள பல்கலையில் படிக்க சென்றார்.பரிமளா, அடுத்த ஆண்டு தன் படிப்பை நிறைவு செய்தபின் அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்ற திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில், பரிமளா நேற்று முன்தினம், தன் நண்பர்களுடன் காரில் அருகில் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வேகமாக சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், பரிமளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற பவன் மற்றும் நிகித் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் மீட்புக்குழுவினர் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

MANI C
டிச 22, 2024 06:55

அது வேறு எதுவும் இல்லை... குடி பழக்கம் /போதை பொருள் பயன் படுத்தியது தான் காரணமாக இருக்க முடியும். என்ன பண்றது? அங்கே லைஃப் ஸ்டைல் அப்படி.


chandra sekar
டிச 16, 2024 17:22

அது என்னமோ தெரியலை உயர் கல்வி கற்க அமெரிக்கா ஆஸ்திரேலியா பிரிட்டன் போகிறார்கள்.ஏன் இங்கே உயர் படிப்பு படிக்க முடியாதா.பணம் இருந்தால் பந்தாவும் கூட வந்து விடும்


vijay
டிச 16, 2024 14:06

அது என்னங்க, அமெரிக்கவில் மற்றவரால் கொல்லப்படுபவர்களும், விபத்தில் இறப்பவர்கர்களும் பெரும்பாலும் ஆந்திராவை சேர்ந்தவர்களாகவே உள்ளார்கள்?. ஒன்றிரண்டு முறை இப்படி செய்தி வந்தபின்னர், நான் அப்படி ஒரு செய்தியை பார்த்தால், ஆந்திராவாக இருக்குமோ என்றுதான் கீழே ஸ்க்ரோல் செய்து படிப்பேன். நினைத்தது போலவே ஆந்திராவை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இறக்கிறார்கள். அது ஏன்?. என்னைப்போலவே எண்ணமுள்ளவர்கள் சொல்லுங்களேன்.


வல்லவன்
டிச 16, 2024 15:35

ஆந்திராவில் உள்ள படித்த மக்கள் 95% பேருக்கு ஒரே குறிக்கோள் எப்படியாவது அமெரிக்கா போயிரனும். இதனால் ஆண்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரதட்சணையாக கிடைக்கும் அமெரிக்காவில் உள்ள பெண்களுக்கு பல கோடிகள் வரதட்சனை மிச்சம். fake resume, illegal working, money laundering என அனைத்து கேப்மாரி மொள்ளமாரிதனம் செய்வது இந்த ஆந்திர கொள்டிகள்தான். it துறையில் இவனுக அளப்பற bill gates range ku இருக்கும். 1 dollar க்கூட கணக்குப்போட்டு செலவு செய்வானுங்க. ஓசில பினாயில் கிடைத்தால் கூட விடமாட்டானுங்க. அமெரிக்கல நம்ம பேர கெடுத்ததே இந்த ஆந்திர கொள்டிகள்தான்.


Barakat Ali
டிச 16, 2024 13:40

போதையின் பாதையில் போகாதீங்க போகாதீங்க ன்னு துமலு நாட்டின் முதல்வர் சொன்னதைக் கேட்டாத்தானே ????


Jey a
டிச 16, 2024 07:11

இது தான் இந்தியர்கள் வண்டி ஒட்ட தெரியாதவர்கள், சும்மா தாங்க அமெரிகாவில் இருகோம் என்ரு நன்பர்கள பிரமூட்ட காண்டு தனமா ஒடி விபத்துக்கு ஆழாவது பின் அதுதாபம், இதுதான், டுபாயில் நீங்க வண்டி ஒட்டனுநமா லைசன் எடுக்க பல லசம் கட்டிதான் எடுக்கனும், அமெரிகாவிலும் இந்த திட்டம் எடுகானும் இது இந்தியாவில் இருந்து போகும் பலர் எதிர்கலத்தில் இபாடி விபத்தில் சாகாமல் இருகானும், 35 வருசமா இருகோம் ,, அதான்


rama adhavan
டிச 16, 2024 06:23

அமெரிக்காவில் நெடுஞ்சாலைகளில் கார் 75 மைல் 120 கி மி வேகத்தில் போகும். குறைவான வேகத்தில் போனால் பின்னால் வரும் வண்டி மோதி விடும். வேகம் அதிகம் ஆதலால் விபத்து என்றால் ஏர் பேக் வெளி வந்தாலும் உயிர் பிழைப்பது கடினம்.


Jey a
டிச 16, 2024 07:05

இதுல தெரியுது நி வண்டி ஒடினது இல்லை என்பது, வண்டி முனால் மெதுவா பொனால் பினால் வருபவர்கள் பிரெக் பொட்டு வேகத்தை குரைத்து விடுவார்கள் ,,


Kasimani Baskaran
டிச 16, 2024 04:21

கனவுகளுடன் அமெரிக்கா செல்பவர்கள் கவனமாக இருக்கவேண்டிய விஷயத்தில் கவனமாக இருப்பதில்லை போல தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை