வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஸ்டம்புக்கு வரும் பந்துகளை வேண்டுமென்றே ஆஸ்திரேலிய வீரர்கள் தடுத்து ஆடியது அதிர்ச்சி அளிக்கிறது .
பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸில் வென்ற இந்திய அணி, 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் 67 ரன்னுக்கு 7 விக்கெட்களை இழந்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று (நவ.,22) பெர்த்தில் உள்ள புதிய ஆப்டஸ் மைதானத்தில் துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, அஸ்வின், ஜடேஜா, சர்பராஸ் கான், சுப்மன் கில் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0wqqursm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜெய்ஷ்வால், லோகேஷ் ராகுல் முதல் இன்னிங்சை துவக்கினர். ஜெய்ஷ்வால் 'டக்' அவுட் ஆகி வெளியேற, இந்திய அணியின் பேட்டிங் வரிசை தொடர்ந்து சரிந்தது. ஒவ்வொரு வீரரும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ராகுல் (26), ரிஷப் பன்ட் (37), துருவ் ஜூரல் (11), நிதிஷ் ரெட்டி (41) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 49.4 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்னுக்கு சுருண்டது. ஆஸி., தரப்பில் ஹேஸல்வுட் 4 விக்., ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் தலா 2 விக்., வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்களும் சீட்டுக்கட்டுபோல சரிந்தன. பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ராணா என மும்முனை தாக்குதலில் ஆஸி, பேட்டிங் சீர்குலைந்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 67 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது. அலெக்ஸ் கேரி (19), மிட்செல் ஸ்டார்க் (6) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில், பும்ரா 4 விக்., சிராஜ் 2 விக்., ராணா 1 விக்., வீழ்த்தினர்.
ஸ்டம்புக்கு வரும் பந்துகளை வேண்டுமென்றே ஆஸ்திரேலிய வீரர்கள் தடுத்து ஆடியது அதிர்ச்சி அளிக்கிறது .