உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

இந்திய பல் மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டல்லாஸ்: இந்தியாவை சேர்ந்த பல் மருத்துவர் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்திரசேகர் போலே, 27, என்பவர் பல் அறுவை சிகிச்சை மருத்துவ படிப்பை முடித்திருந்தார். மேல் படிப்புக்காக அவர் கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். 6 மாதங்களுக்கு முன்பே முதுநிலைப் படிப்பை முடித்த சந்திரசேகர், வேலைக்காக அங்கேயே வசித்து வந்துள்ளார். மேலும், அங்குள்ள கேஸ் ஸ்டேஷனில் பகுதிநேர வேலையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு கேஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த சந்திரசேகரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, சந்திரசேகர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் வசித்து வரும் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nathan
அக் 05, 2025 04:57

பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நிதியுதவி அளித்து உதவுகிறது அமெரிக்கா. அதன் குடிமக்களும் தீவிரவாதிகளை போல் மாறி விட்டனர். இந்தியர்கள் அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றனர் ஆனால் அந்த நாடு அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதில்லை.


jkrish
அக் 05, 2025 02:27

கூட இருக்கும் மற்றவர்கள் செய்வதை நாமும் செய்வது என்ற முடிவில் போனால் அதற்கு பொறுப்பு யார்? பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்று விட்டால் வெற்றியோடு தான் வர வேண்டும் என்று நினைக்கும் மனநிலையில் உள்ள பெற்றோர்.


N Annamalai
அக் 04, 2025 23:55

சோகம் .மனம் கனத்து உள்ளது .ஆழ்ந்த இரங்கல்கள் .


Rajinikanth
அக் 04, 2025 20:02

பல் மருத்துவம் படித்து விட்டு பெட்ரோல் பங்கில் ஏன் வேலை செய்தார்? மாணவர்கள் இது போல படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளில் ஈடுபடுவது அங்கு சட்டத்திற்கு புறம்பானது. டெக்ஸாஸில் வெளிநாட்டவருக்கு சாதகமான சூழலும் இல்லை.


சமீபத்திய செய்தி