உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் சிறந்த நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள்

உலகின் சிறந்த நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்தியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: டைம் இதழ், உலகின் மிகச்சிறந்த 100 நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, விப்ரோ முன்னாள் சேர்மன் ஆசிம் பிரேம்ஜி, ஜெரேதா இணை நிறுவனர் நிகில் காமத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'டைம்' இதழ் பல்வேறு தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில், முக்கியமாக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியிடுகிறது.இந்நிலையில் உலகின் சிறந்த 100 நன்கொடையாளர்கள் குறித்த பட்டியலை அந்த இதழ் வெளியிட்டு உள்ளது.

முகேஷ் அம்பானி

அதில் இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது நீடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இது தொடர்பாக அந்த இதழில் கூறப்பட்டு உள்ளதாவது: முகேஷ் அம்பானி, ரிலையன்சின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு அந்த நிறுவனத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.அவரது மனைவி நீடா அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக இருந்து, இந்தியர்களின் நலனுக்காக ஏராளமான தொண்டுகளை செய்து வருகிறார்.கல்வி உதவி, பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவையான உதவிகளை வழங்குதல், கிராமப்புற மேம்பாடு, வேளாண்மை உதவி, நீர்நிலைகளை பாதுகாத்தல், மருத்துவமனை கட்டுவதற்கான உதவி என ஏராளமான செயல்களை செய்து வருகிறார்.2024ம் ஆண்டில் முகேஷ் அம்பானி மற்றும் நீடா ஆகியோர் ரூ.407 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆசிம் பிரேம்ஜி

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆசிம் பிரேம்ஜி, இந்தியாவின் சிறந்த நன்கொடையாளர்களில் ஒருவராக உள்ளார். இந்தியாவின் கல்வி முறையை மேம்படுத்துவதற்கு தனது சொத்தை செலவு செய்து வருகிறார்.25 ஆண்டுகளுக்கு முன்பே, நன்கொடையாக கோடிக்கணக்கில் தனது நிறுவனத்தின் கோடிக்கணக்கான பங்குகளை வழங்கினார். மேலும் 2023- 2024ம் நிதியாண்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் கவனம் செலுத்தும் 940 நிறுவனங்களுக்கு இதுவரை 9 ஆயிரம் கோடி அளவுக்கு நன்கொடை வழங்கி உள்ளார். 80 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.

நிகில் காமத்

இந்த பட்டியலில் இடம்பெற்ற மற்றொரு இந்தியர் நிகில் காமத். 36 வயதில் நன்கொடை துவங்கினார். சுற்றுச்சூழல் மற்றும் கல்வித்திட்டங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறார். ' யங் இந்தியா நன்கொடையாளர்கள் உறுதிமொழி( YIPP) என்ற சொந்த அமைப்பை துவக்கினார். 300 பள்ளிகள சிறந்த கணினிகள், தொழில் ஆலோசன மற்றும் பிற சேவைகளுடன் மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு நிதியளித்து உள்ளன. இவர் மற்றும் அவரது சகோதரர் நிதில் இணைந்து ரெயின்மேட்டர் அறக்கட்டளைக்கு 100 மில்லியன் டாலர் அதிகமாகநிதி ஒதுக்கி உள்ளனர். இது கால நிலை மாற்றத்திற்கான தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது.இந்த பட்டியலில்டேவிட் பெக்கம்மைக்கேல் ப்ளூம்பெர்க்ஓபரா வின்ப்ரேமெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ்வாரன் பபெட்ஆசிம் பிரேம்ஜிராபரட் ஸ்மித்ஜேக் மா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
மே 21, 2025 15:18

இதுல எங்க மன்னர் குடும்பத்துலர்ந்து யாரு பெரும் வரலையே ?


Mani . V
மே 21, 2025 04:04

மக்களுடைய பணத்தை பலப் பல லட்சம் கோடி கடனாகப் பெற்று பின்னர் வேண்டியவர்கள் மூலம் கடனை தள்ளுபடி செய்து விட்டு அதிலிருந்து சில ஆயிரங்களை மக்களுக்கு நன்கொடை கொடுப்பதை எப்படி பெருமையாகச் சொல்ல முடியும்? உழைத்து சம்பாதித்து கொடுத்தால் உயர்வாகப் பேசலாம். ஆட்டையைப் போட்டு அதிலிருந்து சில துளிகளை செய்வது ஒரு விதத்தில் கேவலம்.


ஆரூர் ரங்
மே 21, 2025 11:45

200 க்கு இவ்வளவு கூவ வேண்டாம். இதில் குறிப்பிடப்பட்டவர்களில் யாருக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது? எந்த வங்கி என்ற விவரங்களை கூற முடியுமா? ஒருவருக்கும் தள்ளுபடி தரப்படவில்லை. நீர் யாருக்கும் தானம் செய்யாவிட்டாலும் கொடையாளிகளை குறைகூற வேண்டாமே.


D.Ambujavalli
மே 21, 2025 03:28

தானம் செய்தமாதிரி உலகத்துக்கு காட்டியாயிற்று திராவிட மாடலின் பிதாமகர் ஆயிற்றே விளம்பரம் கிடைத்துவிட்டது அது போதாதா ?இன்பநிதியின் கொள்ளு / எள்ளுப்பேரன் காலத்திலாவது அவர் ‘உயில்’ நிறைவேற்றப்படுமா ? கலைஞர் எதிலுமே குறுக்குவழி யோசனையில் மகா வித்தகராக்கும் அப்படியே தான் மறைந்த நாலாம் நாளே மருத்துவமனைக்கு தூக்கிக் கொடுக்கும் அசட்டுத்தனத்தை செய்வாரா ?


மீனவ நண்பன்
மே 21, 2025 02:56

கவுதம் அதானி பெயர் விட்டு போயிருக்கே …டுமீளர்கள் பெயரும் இல்லையே


karthikeyan
மே 21, 2025 01:08

அப்படியே அம்பானியின் கடன் தள்ளுபடிகளையும் பதிவிடவும், சொம்பு


SUBBU,MADURAI
மே 20, 2025 22:09

தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த கோபாலபுர வீட்டை தனக்கு பிறகு ஏழைகளுக்குத்தான் என்று உயில் எழுதி வைத்த கட்டுமர கருணாநிதிக்கு கடைசி இடம் கூட கிடைக்க வில்லையா ஐயகோ இது என்ன அநியாயம், அக்கிரமம்? ஏலே கட்டுமரம் எழுதியிருக்கும் அந்த உயிலை இன்னொரு தரம் நன்றாகப் படி அதற்குப் பிறகு ஒப்பாரி வை. சரி படிக்கிறேன் என் வீட்டில் குடியிருக்கும் என்னுடைய வாரிசுகளுக்கு பிறகு என்னுடைய இந்த கோபாலபுர வீட்டை ஏழை மக்களுக்கு ஆஸ்பத்திரியாக ஆக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளேன் கருணாநிதியின் வாரிசுகள் இன்னும் ஏழேழு தலைமுறைக்கு குறையாமல் வாழ்வார்கள் அவர்களுக்கு பின் கட்டுமரத்தின் இந்த வீடு ஏழைகளுக்கு சொந்தமாகும் என்ன உயிலை படிச்சியா எப்படி எங்க தானைத் தலைவன் கட்டுமர கருணாநிதியின் சாமர்த்தியம்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை