உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இலங்கையில் காற்றாலை அமைக்கும் முடிவை கைவிட்டார் அதானி

இலங்கையில் காற்றாலை அமைக்கும் முடிவை கைவிட்டார் அதானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டத்தில் இருந்து மரியாதையுடன் விலகி கொள்வதாக, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.காற்றாலை அமைக்க இலங்கை அரசு மற்றும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியது. இதன் படி, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் நகரம் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. அதேபோல், இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பில் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான முனையத் திட்டத்தைக் கட்டுவதிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. சில குற்றச்சாட்டுகள் அடிப்படையில், அதானி குழுமத்தின் திட்டங்களை இலங்கை மறுபரிசீலனை செய்ய துவங்கியது. இதற்கிடையே கடந்த மாதம் மின் திட்டச்செலவை குறைக்க, அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று புதிதாக அமைந்த அரசு அறிவித்தது.அடுத்தடுத்து சர்ச்சைகள் எழும் நிலையில், இலங்கையில் காற்றாலை அமைக்கும் முடிவை கைவிடுவதாக அதானி நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இது குறித்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் இரண்டு காற்றாலை அமைக்கும் திட்டம் மற்றும் வினியோக திட்டத்தில் இருந்து மரியாதையுடன் விலகி கொள்கிறோம். இருப்பினும் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் விரும்பினால் இணைந்து பணியாற்ற உறுதி அளிக்கிறோம்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Jay
பிப் 14, 2025 14:13

பெரிய நிறுவனங்களின் வெற்றிகரமான வெளிநாட்டு ப்ராஜெக்ட் களுக்கு அந்தந்த நாடுகளின் அது தீவிர துணை இருக்கும். உதாரணத்திற்கு பெப்சி, கோலா கம்பெனிகள் பெரும் வெற்றி பெறுவதற்கு அமெரிக்க அதன் காரணம். இந்த நிறுவனங்களின் பொருட்கள் மீது எந்த விதமான எதிர்மறை செய்திகளும் வராமல் அமெரிக்கா பார்த்துக் கொள்ளும். தற்போது எலான் மஸ்கின் கார் கம்பெனி மற்றும் இன்டர்நெட் கம்பெனி வளர்வதற்கு நிச்சயம் ட்ரம்பு உதவி புரிவார். பிரான்ஸ் நிறுவனங்களின் விமானங்களும் தண்ணீர் சேவை கொடுக்கும் நிறுவனங்களும் இங்கு கொலாச்ச இருக்கின்றன. அதேபோன்று சீன கம்பெனிகள் உலகம் முழுவதும் தங்கள் பொருட்களை வைக்கவும் புது கம்பெனிகளை உருவாக்கவும் சீனா இரும்பு கரத்துடன் எதிர்ப்புகளை அடித்து நொறுக்கும். ஆனால் இந்திய கம்பெனிகள் தான் பாவம். இந்திய கம்பெனிகள் வெளிநாடுகளில் வெற்றி பெறுவதை இங்குள்ள உள்ளூர் அரசியல் கட்சிகளும் அவர்களின் மூட ஆதரவாளர்களும் எதிர்ப்பார்கள். இதே சன் டிவி ஸ்ரீலங்காவில் அவர்களுடைய சேனலை ஆரம்பிப்பார்கள் என்றால் இந்த மூடர்கள் அதற்கு மட்டும் ஆதரவு தெரிவிப்பார்கள். ஒரு டப்பாவில் இருந்து எந்த நண்டுகளும் வெளியில் வராததற்கு அந்தந்த நண்டுகளே பார்த்துக் கொள்ளும் அதைத்தான் இங்கு உள்ள மூடநண்டுகளும் செய்கின்றன.


kulandai kannan
பிப் 13, 2025 19:32

நஷ்டம் அதானிக்கல்ல.


S.Balakrishnan
பிப் 13, 2025 17:12

Well said Mr.Adani. Self respect is more important than business. This also a slap to Srilankan new rulers and hence our Bharat stands high.


Velan Iyengaar
பிப் 13, 2025 16:27

அசிங்கப்படுவதை இப்படி கூட எழுதலாமா ?? அடப்பாவிகளா துரத்தி அடிக்கப்படுகிறார் .... அதுவே உண்மை ..... நம்ம விஸ்வகுரு பவிசு இம்புட்டுதான் ....


guna
பிப் 13, 2025 17:21

இதுக்கு எதுக்கு நீ சிட்னி போகனும்....உள்ளூரில் கலெக்சன் ஆகுமே....


N Sasikumar Yadhav
பிப் 13, 2025 17:35

கோபாலபுர கொத்தடிமையான உங்களுக்கு உடம்பெல்லாம் மூளை உங்களுக்கு மட்டும் எட்டு அறிவு


Kumar Kumzi
பிப் 13, 2025 19:24

சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய திருட்டு திராவிஷ கொத்தடிமை கூமுட்ட இலங்கையின் நிலைமை தெரியாம கருத்து எழுத வந்துட்டா ..


தத்வமசி
பிப் 13, 2025 16:11

குற்றச்சாட்டு என்று கூறாதீர்கள். சீனாவின் அழுத்தம் மற்றும் உடனிருந்தே கொல்லும் வியாதி ஐந்தாம் படை வேலை நடந்துள்ளது என்று கூறுங்கள். பல சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் கம்பெனிகளுக்கு சவால் விடும் அளவிலே பல கட்டுமான வேலைகளை கைப்பற்றும் அதானி குழுமத்திற்கு எதிரி இந்தியாவில் தான் அதிகம். வெட்கப்பட வேண்டிய விஷயம். அதானி... அதானி... என்று பாராளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் ஜபம் செய்கின்றன. எல்லா மாநிலங்களிலும் டிவி நிறுவனங்கள், ஐபில் என்று வெளியில் தெரியாமல் மக்களின் வருமானத்தை உறியும் நிறுவனங்கள் கண்ணுக்குத் தெரியாது இவர்களுக்கு.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 13, 2025 17:34

உண்மையை உரக்க சொன்னீர்கள் தத்வமசி....சில புண்ணாக்குகளுக்கு அத்வானிக்கு புது புராஜக்ட் கிடைத்தால் அதற்கு மோடிஜி தான் வழி ஏற்படுத்தி கொடுத்தார் என்பதும்.....அதானியே ஒரு புராஜக்டிலிருந்து வெளியேறினால் பிரதமரின் கையாலாகதத்தனம் என்று ஒப்பாரி வைப்பதை பார்த்தால்....மோடி என்ற பெயரை கேட்டாளே ஜுரம் வந்து அரை பைத்தியம் ஆகிவிடுகின்றனர்....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை