உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிறந்த இயக்குநருக்கான விருதை இந்தியாவின் அனுபர்ணா வென்றார்: வெனிஸ் திரைப்பட விழாவில்

சிறந்த இயக்குநருக்கான விருதை இந்தியாவின் அனுபர்ணா வென்றார்: வெனிஸ் திரைப்பட விழாவில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வெனிஸ்: இத்தாலியில் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதை வென்று, இந்தியாவைச் சேர்ந்த பெண் இயக்குநர் அனுபர்ணா ராய் சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில், 82வது வெனிஸ் திரைப்பட விழா சமீபத்தில் நடந்தது. இதில், 'ஓரிசோன்டி' என்ற சிறப்பு பிரிவில், தன் முதல் திரைப்படமான, சாங்ஸ் ஆப் பர்காட்டன் ட்ரீஸ் படத்திற்காக, சிறந்த இயக்குநருக்கான விருதை, நம் நாட்டைச் சேர்ந்த பெண் இயக்குநர் அனுபர்ணா ராய் வென்றார். இந் த பிரிவில் விருது வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பிழைப்புக்காக வேறிடத்தில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு வேலை தேடி வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை அனுபவங்களை, சாங்ஸ் ஆப் பர்காட்டன் ட்ரீஸ் படம் பேசுகிறது. இதில், நடிகையர் நாஸ் ஷேக், சுமி பாகேல் நடித்துள்ளனர். முதல் படத்திலேயே விருது வென்று, பலரையும் இயக்குநர் அனுபர்ணா ராய் ஆச்சரியப்படுத்தி உள்ளார். முன்னதாக, வெனிஸ் திரைப்பட விழாவில், மேற்காசிய நாடான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பான தி வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜப் என்ற படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள், 22 நிமிடங்கள் எழுந்து நின்று கை தட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தப் படம், சிறந்த படத்துக்கான விருதில் இரண்டாவது இடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை