உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐரோப்பிய நாடுகளை விஞ்சிய இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு ; ஜெர்மனி நாட்டவர் வெளியிட்ட வீடியோ வைரல்

ஐரோப்பிய நாடுகளை விஞ்சிய இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு ; ஜெர்மனி நாட்டவர் வெளியிட்ட வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் வசதிகள், டில்லி மெட்ரோவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இருக்கும் இதுபோன்ற வசதிகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், கன்டன்ட் கிரியேட்டர்களும் உலகிற்கு வெளிப்படுத்தாதது ஆச்சரியமளிக்கிறது என்று ஜெர்மனியைச் சேர்ந்த சமூகவலைதள பிரபலம் தெரிவித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த சமூகவலைதள பிரபலம் அலெக்ஸ் வெல்டர் என்பவர் தலைநகர் டில்லிக்கு வருகை தந்தார். அங்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அவர், அதன் அனுபவம் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில், மேற்கு ஐரோப்பா நாடுகளை விட இந்தியாவில் மெட்ரோ கட்டமைப்பு சிறப்பாக இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது; இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவின் பொது போக்குவரத்தில் உடைந்த மற்றும் பழைய பேருந்துகள், இரைச்சலுடன் கூடிய ஆட்டோக்கள் மற்றும் ரிக்ஷாக்கள் தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்தியாவின் ஆக்ரா மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பான மெட்ரோ கட்டமைப்புகள் இருப்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. டில்லியில் பிளாட்பார்ம் திரை கதவுகள், செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதிகள், பெண்கள் மற்றும் வயதானவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இருக்கைகள் உள்ளன. தெற்கு டில்லியில் தங்கியிருந்த போது, பெரும்பாலான சமயங்களில் மெட்ரோவில் இருக்கைகள் கிடைத்தன. தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் வசதிகள், டில்லி மெட்ராவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. நேர்மையாக சொல்லப்போனால், இந்தியாவில் இத்தனை அம்சங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, எனக் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் இருக்கும் இதுபோன்ற வசதிகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், கன்டன்ட் கிரியேட்டர்களும் உலகிற்கு வெளிப்படுத்தாதது ஆச்சரியமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த வீடியோவுக்கு ஏராளமானோர் லைக்குகளையும், கமென்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தாமரை மலர்கிறது
மார் 31, 2025 19:02

இந்தியா பணக்கார நாடாக மாறிவருகிறது . மோடியின் ஆட்சியில் பொருளாதார முன்னேற்றம் விண்ணை பிளக்கிறது. மேலைநாடுகள் மூக்கின்மேல் விரலைவைத்து பிரமித்து பார்க்கின்றன.


Barakat Ali
மார் 31, 2025 18:08

ஈவேரா மட்டும் இல்லைன்னா இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமாயிருக்குமா ????


hariharan
மார் 31, 2025 17:11

தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் முழுத்திறமையையும் வெளிக்கொணரும் பொறுப்பான அதிகாரிகள், மெட்ரோ ஸ்ரீதரன் போன்றோர், லஞ்சமில்லாத நிர்வாகம், அரசின் முழு ஒத்துழைப்பு இவைகள் இருந்தால் நமது நாட்டின் வளர்ச்சி எங்கோ சென்றுவிடும். நல்லவேளை இந்தியாவில் மெட்ரோ நிலையங்கள் கண்ட கண்ட தொழிற்சங்கங்களின் பிடியில் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்களுடைய தேர்தல், போராட்டம் போன்ற சுவரொட்டிகளால் அசிங்கப்படுத்தியிருப்பர். கொச்சி மெட்ரோவிலும் அதுபோன்ற அசிங்கங்கள் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.


Bhakt
மார் 31, 2025 14:18

திராவிட மாடல் விடியல் தான் காரணம்.


A1Suresh
மார் 31, 2025 14:15

பூ இதென்ன 2047ல் இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் மெட்ரோ, ஆர் ஆர் சி எஸ், புல்லெட் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கும். வாழ்க மோடிஜி ஆனாலும் தமிழர்கள் திருந்த மாட்டார்கள்


Ramesh Sargam
மார் 31, 2025 12:25

நன்றி அந்த ஜெர்மனி நாட்டவருக்கு. ஆனால் அவர் குறிப்பிட்ட உடைந்த அரசு பேருந்துகளை தமிழகத்தில் பார்க்கலாம். நல்ல வேலை அவர் தமிழகம் செல்லவில்லை. போயிருந்தால், அவருடைய கணிப்பு வேறு மாதிரி இருந்திருக்கும்.


Padmasridharan
மார் 31, 2025 11:02

"டில்லி மெட்ராவில்" செயல்படுத்தப்பட்டுள்ளன." இதை கவனிக்கவும் மெட்ரோ அய்யா


Jay
மார் 31, 2025 10:34

மெட்ரோ டிரெயின்கள் வடிவமைப்பு செயல்படுத்துதல் உலகம் முழுவதும் ஒரே மாதிரி தான் உள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் மெட்ரோ ட்ரெயின் களுக்கு கோச்சுகள், டிரைவ்கள் சப்ளை செய்வது சில கம்பெனிகள் தான். உலகம் முழுவதும் மெட்ரோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் இது போன்ற பொது சேவைகளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து பார்ப்பதற்கு வித்தியாசம் வரும். மெட்ரோ டிரெயின்கள் மற்றும் மெட்ரோ ஸ்டேஷனுக்கு அழுக்கு படுத்துவது குப்பை போடுவது எச்சில் துப்புவது என நடந்து கொண்டால் அப்பொழுது தான் கேவலப்படும். பள்ளிகளில் பொது இடங்களை எப்படி பயன்படுத்துவது என்று நல்லபடியான பாடங்கள் சொல்லிக் கொடுத்தால் இது போன்ற மெட்ரோ ஸ்டேஷன்கள் நல்லபடியாக இருக்கும்.


சசிக்குமார் திருப்பூர்
மார் 31, 2025 10:07

எது நம்மூர் டிவிகளா. அமெரிக்க மத சார்பு கணிப்புகளில் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு இல்லை என்பதை மட்டும் கதரும் டிவிகள். 2005 டூ 15 காலகட்டத்தில் சங்கியாக மாறும் வெளிநாட்டினர் எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2.5 லட்சம். ஆனால் 2016 டூ 2025 காலத்தில் 8 முதல் 11 லட்சம் கணக்கில் வருடத்திற்கு மாறுவதாக கூறியதை சொல்லாதது ஏன். இதைக்கூட அமெரிக்க டீவிகளை பார்த்தால் மட்டுமே தெரியும்


M Ramachandran
மார் 31, 2025 09:20

இப்போது இருப்பது உலகளவில் முன்னேற்றத்திற்கு கொண்டு போலாம் அரசு. லஞ்ச லாவணையத்தில் சிக்கிய அரசு அல்ல. ஊழல் என்ற வார்த்தைக்கு முற்று டு புள்ளி வைக்க நினைகும் அரசு. நம் துரதிஸ்ரஷ்டம் கெஜ்ரிவால் ஸ்டாலின் போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள்


முக்கிய வீடியோ