உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் வேறு எங்கும் தயாரித்தால் 25% வரி; அதிபர் டிரம்ப் புது அறிவிப்பு

அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் வேறு எங்கும் தயாரித்தால் 25% வரி; அதிபர் டிரம்ப் புது அறிவிப்பு

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தயாரித்தால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும்'என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தக போர் நிலவியது. இதனால், சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க , அந்த போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l4skcatt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமுள்ளதாக அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக் கூறியிருந்தார். தற்போது இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் வகையில் அதிபர் டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் தயாரிக்க கூடாது. அமெரிக்காவிலே உற்பத்தி செய்ய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் நான் நீண்ட காலத்திற்கு முன்பே தெரிவித்திருந்தேன். அப்படி இல்லையென்றால், ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 25% வரியை செலுத்த வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
மே 24, 2025 16:41

முதல்ல சைனாவில் தயாரிக்க உட்டதே தப்பு. அப்பறம் சைனா ப்ள்ஸ் 1 ந்னு இந்தியாவில் தயாரிச்சாங்க. அங்ஜே அமெரிக்கணுக்கு கல்தா குடுத்துட்டு இந்தியர்களை வேலைக்கு வெச்சாங்க. ஏன்னா கூலி.குறைச்சலாம். அமெரிக்காவில் இப்போ ஐபோன் வாங்குறவன் எல்லாம் பெரும்பாலும் இந்தியர்கள்தான். ட்ரம்ப் அமெரிக்காவுக்கு எது நன்மையோ அதை செய்கிறார். அவர் போன பின்னாலும்.மத்தவர்கள் செய்வார்கள்.


Saai Sundharamurthy AVK
மே 24, 2025 12:24

சமீபத்தில் இந்தியப் படைகள் பாகிஸ்தானை தாக்கி அங்குள்ள அணு ஆயத கிடங்கை தாக்கி அழித்தது. அது பாகிஸ்தானுடையது அல்ல . அது அமெரிக்காவின் ரகசிய கிடங்கு என்று தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் ஏவிய அமெரிக்காவின் இரண்டு F16 விமானங்களையும் இந்தியப் படைகள் சுட்டு வீழ்த்தின. ஆகவே, டிரம்ப்புக்கு இந்தியா மீது ஒருவித பயம் ஏற்பட்டுள்ளது. காண்டும் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் எப்படி இவ்வளவு அபார தொழில்நுட்பத்துடன் இந்தியா வலிமையான வல்லரசாகி விட்டிருக்கிறது என்று டிரம்ப் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார். பொறாமைப் படுகிறார். ஆகவே, நேரடியாக இந்தியாவை சந்திக்க முடியாது என்றும் இந்த மாதிரியான மறைமுக செயலில் தமது காண்டை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறார். ஒன்றுமில்லை ! நமது வெளியுறவு அமைச்சரை அமெரிக்காவுக்கு அனுப்பி டிரம்ப்புக்கு சிக்கிலிக்கா மூட்டி சிரிக்க வைத்து விட்டால் போதும் !! சிரித்துக் கொண்டே அமைதியாகி விடுவார்.


Karthik
மே 23, 2025 22:28

ஆப்பிள் போன்களை அமெரிக்காவிற்க்குள் விற்பனைக்கு கொண்டு வந்தால் தானே 25 சதவீத வரி..? அமெரிக்காவிற்கு ஐபோன் ஏற்றுமதி செய்யப்படாது அல்லது விற்பனை செய்யப்பட மாட்டாது என ஐபோன் நிறுவனம் அறிவித்தால் அந்த வரியை யாருக்கு விதிப்பீர் ட்ரம்மு..?? அப்படி நடந்தால் அமெரிக்கர்கள் இனி சீனக்காரனிடமோ கொரியா காரனிடமோ தான் கையேந்தி நிற்க வேண்டி வரும் மொபைல் போனுக்காக. இன்றைய காலத்தில் மொபைல் இல்லையெனில் அமெரிக்காவும் இயங்காது என்பது எப்போது புரியுமோ??


SP
மே 23, 2025 22:19

ட்ரம்பரின் முதல்ஆட்சி காலம் சிறப்பாக இருந்தது இரண்டாவது ஆட்சி காலம் கேவலமாக நடந்து கொண்டு வருகிறார் உலகத்தையும் பகைத்துக் கொண்டு உள்ளூர் நிறுவனத்தையும் தவிர்த்து கொண்டு என்ன சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை


மீனவ நண்பன்
மே 23, 2025 20:49

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. MS படிக்க வருபவர்கள் 50 % குறைந்துவிட்டது .பிரமச்சாரி ஓடம் கவிழ்த்த கதை மாதிரி இவர் ஆட்சி


சுரேஷ் பாபு
மே 23, 2025 20:23

இதற்குப் பெயர்தான் துக்ளக் தர்பார்!!


ஆரூர் ரங்
மே 23, 2025 20:16

அமெரிக்காவில்தான் 90 சதவீதம் ஆப்பிள் பயன்பாடு. ஆசிய நாடுகளில் மிகக் குறைவு. ஆக பாதிப்பு அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கே. ஓட்டுப்போட்ட பாவத்திற்கு அனுபவிக்கவும்.


Ramesh Sargam
மே 23, 2025 19:34

டிரம்புக்கு வந்திருக்கும் ஒரு வியாதி இதுவரை உலகில் எங்கும் கண்டறியப்படவில்லை. அதற்கு TRTAX-2025 என்கிற பெயர் மருத்துவத்துறை வைக்கலாம்.


Ganesh
மே 23, 2025 19:29

சார், அந்த நாட்டுல பண்ணாத... இந்த நாட்டுல பண்ணாதேன்னு சொல்லாதீங்க.... உங்க நாட்டுல அவுங்க கேக்குற மனித வளத்தை நீங்க குடுத்தீந்தீங்கன்னா அவுங்க நீங்க சொல்லமேயே அமெரிக்கா வுல தயாரிக்க ஆரம்பிச்சிடுவாங்க.. இதை தான் எங்க ஊர்ல சொல்லுவாங்க.. தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான் ன்னு... கடைசில அமெரிக்க மக்கள் தலை மேல தான் இந்த வரி எல்லாம் விளப்போகுது..... எல்லா நாட்டையும் பகைச்சுகிட்டு, எல்லா கம்பெனி யையும் பகைச்சிக்கிட்டு கடைசியில தன்னமாதனியா நிக்க பொறீங்க