உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 975 பேரை துாக்கிலிட்ட ஈரான்

975 பேரை துாக்கிலிட்ட ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: ஈரான் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, 975 பேருக்கு கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேற்காசிய நாடான ஈரானில் உலகிலேயே அதிகளவு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதுகுறித்து ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், அதன் துணை கமிஷனர் நட அல்நாஸிப் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஈரானில் கடந்த 2024ல் மொத்தம் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துாக்கிலிடுவதன் வாயிலாக அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.போதைப்பொருள் கடத்தலுக்காக 507 பேர்; கொலை குற்றங்களுக்காக 419 பேர்; பாலியல் குற்றங்களுக்காக 20 பேர்; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குற்றங்களுக்காக 29 பேர் துாக்கிலிடப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் பெண்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Chandra
ஜூன் 25, 2025 18:17

மரண தண்டனைக்கு பதிலாக கண் இரண்டையும் குருடாக்கி விடலாம். மற்ற குற்றங்களுக்கு இரண்டு கை பெருவிரல் + இரண்டு கால்களை எடுத்து விடலாம்.


என்றும் இந்தியன்
ஜூன் 21, 2025 15:57

குற்றம் செய்தவன் ஒருக்காலும் திருந்தப்போவதில்லை அவனை சிறையில் அடைத்து சிலவருடங்கள் வைத்திருந்தால். வெளியே வருவான் பணம் வேண்டும் என்பதற்காக மறுபடியும் அதே குற்றத்தில் மிக சாதுரியமாக ஈடுபடுவான் அவ்வளவே, அவனிடம் உள்ள குற்றம் செய்யும் உணர்வு மாறவே மாறாது. அப்படியென்றால் குற்றம் செய்தவனுக்கு தண்டனை இப்படி இருக்கலாம். அப்போது அவன் பயத்தில் மாற வாய்ப்புண்டு. 1 கொலை செய்தால் மரண தண்டனை 2 கை கால் வெட்டினால் அவன் கை கால் வெட்டப்படவேண்டும் 3 கற்பழித்தால் அவன் ஆணுறுப்பு வெட்டப்படவேண்டும் 4 பண மோசடி செய்தால் அவன் பணம் பூராவும் அரசு எடுத்துக்கொண்டு அவனை பிச்சைக்காரனாக வீதியில் அலையவிடவேண்டும்


என்றும் இந்தியன்
ஜூன் 21, 2025 15:48

மிக மிக சரியான செயல் முறை ஈரான் செய்கின்றது. தவறு கண்டேன் சுட்டேன் இந்த மாதிரி தண்டனை வந்தால் தான் குற்றம் செய்வது நிற்கும் இந்திய நாட்டில். மேலே சொன்ன தண்டனை கொடுத்தால் ஒரு வருடத்தில் நிச்சயம் 1 கோடி குற்றவாளிகள் குறைவார்கள் இரண்டாவது வருடத்தில் அது வெறும் 100 ஆகா மாறும், தாம் இறப்போம் என்ற பயம் வந்து.


ashok kumar R
ஜூன் 20, 2025 16:24

இந்தியர்கள் எல்லாக்குற்றும்கு பெயில் தந்துவிடுவார்கள் . அதனால் அதிகரிக்கது குற்றம். ராக்க்ஷர்கலை கொன்றால் பாவம் இல்லை. முப்பது நாப்பது வருடம் முன் இப்புது இருப்பது போலெ அப்போது குற்றங்கள் இல்லை. நம் நாட்டு நீதிதுறை மாற்றி அமைக்க வேண்டும் . எல்லாம் திருட்டு அரசாங்கம் . யார் செய்வார்கள் ????


Chandrasekaran Balasubramaniam
ஜூன் 23, 2025 05:33

ஆம் நீதி செத்துவிட்டது இந்தியாவில். எல்லாம் அரசியல் வியாதிகளால். மாமேதையின் சட்டம் லாயகாற்றது ௧௯௫௦லிருந்தே. ஆங்கிலேயே சட்டங்களின் நகல் காப்பியடித்தது.


Raj S
ஜூன் 26, 2025 00:15

எல்லாரும் தூக்கி வெச்சு கொண்டாடற அம்பேத்கார் அமைச்ச சட்டத்தினால் நீதி செத்துவிட்டதோ??


Sugumar S
ஜூன் 20, 2025 11:30

கடுமையான குற்றங்களுக்கு இந்த மாதிரி தண்டனை தேவை. எல்லா நாடுகளும் பின்பற்றவும்


Loganathan S
ஜூன் 20, 2025 10:15

மிகவும் சரியான தண்டனை. பாலியல் குற்றம், கொலை மற்றும் போதை பொருட்கள் கடத்தலுக்கு மிகவும் அவசியம்.


suresh Sridharan
ஜூன் 20, 2025 10:15

நம் நாட்டில் இப்படிப்பட்ட சட்டம் இருந்தால் இந்தியாவில் தினமும் ஆயிரம் பேரை தூக்கிலிட வேண்டும் அச்சட்டம் எதிர்பார்க்கிறோம்


sankaranarayanan
ஜூன் 20, 2025 09:58

நமது நாட்டில் இது போன்று தண்டனை கொடுத்தால் அதில் முழுக்க முழுக்க பாதிக்கப்படுபவர்கள் அரசியல்வாதிகளாக தான் இருக்கும்


Abdul Ajeez
ஜூன் 20, 2025 09:51

மரண தண்டனை தீர்வல்ல. தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் ஆனால் அது மரண தண்டனையாக இருக்க கூடாது. கொலை குற்றம் செய்தவனுக்கு வேண்டுமானால் மரண தண்டனை கொடுக்கலாம். கொலைக்கு கொலை. இழப்புக்கு இழப்பு. ஆனால் மற்ற குற்றங்களுக்கு மரண தண்டனை எப்படி தீர்வாகும். கஞ்சா கடத்தல் மற்ற குற்றங்கள் அனைத்தும் பணத்தை முன்னிறுத்தியே நடந்திருக்கும். பணம் இல்லாமல் பணத்தை தேடி ஒருவன் குற்றம் செய்திருந்தால் தண்டனைகள் கொடுத்து அவனை திருத்தி அவன் வாழ வழி செய்து கொடுக்கலாம். இது அரசாங்கத்தின் கடமையே.


gameplay tamizhan
ஜூன் 20, 2025 11:39

உண்மையான பதிவு


Indian
ஜூன் 20, 2025 09:34

இப்படி பட்ட சட்டங்கள் நம் நாட்டில் இல்லை . இதனால் தான் வருபவன் போகிறவன் எல்லாம் அரிவாள் எடுக்கிறான் ..


புதிய வீடியோ