உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கும் ஈரான்: ஐ.ஏ.இ.ஏ., குற்றச்சாட்டு

யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கும் ஈரான்: ஐ.ஏ.இ.ஏ., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐ.நா: யுரேனியம் செறிவூட்டலை ஈரான் மேலும் அதிகரித்து வருவதாக சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் ஜெனரல் ரபேல் குரோஸி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் ரகசியமாக அதிகரித்து வருவதாகவும் இது சர்வதேச விதிகளுக்கு எதிரான செயல் எனவும் ஈரான் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில் யுரேனியம் செறிவூட்டலை கண்காணித்து வரும் அமைப்பான ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணுசக்தி முகமை என்ற அமைப்பு ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ளது. இந்த அமைப்பின் இயக்குனர் ஜெனரல் ரபேல் குரோஸி அறிக்கை வாயிலாக கூறியுள்ளதாவது, ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை கடந்த பிப்ரவரியில் 20.06 கி.கி., இருந்த நிலையில் தற்போது 142.1கி.கி அளவுக்கு அதிகரித்துள்ளது. இது 60 சதவீத வரை உயர்ந்துள்ளது. ஈரானின் இந்த செயல் அணு ஆயுதம் தயாரிப்புக்கு நிகரானது . இவ்வாறு ஐ.ஏ.இ.ஏ. தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
மே 28, 2024 21:33

ஈரான் செயல் அணு ஆயுத தயாரிப்பு நிகர். சர்வதேச சட்டத்திற்கு எதிர். தாக்கி அழியுங்கள். அல்லது அழிவை எதிர் கொள்ள வேண்டும். மத சுதந்திர போர்வையில் தவறான போதனை போதிக்கப்படுகிறது.


Senthil K
மே 28, 2024 21:08

தனக்குத் தானே.. பில்லி.. சூன்யம் வைப்பதில்.. மூர்க்கனை.. அடித்துக் கொள்ள ஆளே.. இந்த உலகில் கிடையாது.. விட்டு.. விடுங்கள்... ஈரான்.. மொத்தமாக.. காலி ஆகட்டும்... உலகின் மற்ற உயிரினங்களாவது.. நிம்மதியாக.. வாழ்ந்து.. சாகும்...


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ