உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போரில் இஸ்ரேல் என்னை கொல்ல முயற்சித்தது; ஈரான் அதிபர் பகீர் குற்றச்சாட்டு

போரில் இஸ்ரேல் என்னை கொல்ல முயற்சித்தது; ஈரான் அதிபர் பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: 12 நாட்கள் போரின் போது இஸ்ரேல் ராணுவம் தம்மை கொல்ல முயற்சித்ததாக ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.கடந்த மாதம், ஈரான் மீது இஸ்ரேல் வான்வழியாக தாக்குதலை நடத்தியது. 12 நாட்கள் நிகழ்ந்த இந்த போரின் போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி, ஈரானில் உள்ள 3 அணுசக்தி மையங்கள் மீது தாக்குதலை நடத்தியது. அதன் பின்னர், ஈரான், இஸ்ரேல் நாடுகள் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ள 12 நாட்கள் போர் முடிவுக்கு வந்தது. இந் நிலையில் போர் சூழலின் போது இஸ்ரேல் ராணுவம் தம்மை கொல்ல முயற்சித்ததாக ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் அதிரடியாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பிரபல அமெரிக்க ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சன், மசூத் பெசெஸ்கியானை பேட்டி கண்டார். அப்போது இந்த குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது; அவர்கள்(இஸ்ரேல்) முயற்சித்தனர். அதை நோக்கியே அவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. ஆனால் அதில் தோல்வியே கிடைத்தது. என் உயிருக்கு குறி வைத்தது அமெரிக்கா இல்லை, இஸ்ரேல் தான். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
ஜூலை 08, 2025 07:52

சண்டை என்று வந்தால் சட்டை கிழியத் தானே செய்யும்...... இதை போய் பள்ளி குழந்தைகள் போல் குறை கூறிக் கொண்டு இருக்கலாமா ???


Natarajan Ramanathan
ஜூலை 08, 2025 00:53

இதில் அதிர்ச்சி அடைய ஒன்றுமே இல்லை. இவனை கொல்ல இவன் நாட்டிலேயே ஏராளமான மனிதர்கள் அலைவது தெரிந்த விஷயம்.


SUBBU,MADURAI
ஜூலை 07, 2025 23:46

இதில் என்ன பகீர் குற்றச்சாட்டு வேண்டிக் கெடக்கு உங்கள் அனைவரையும் பொளக்க போடுவதுதானே இஸ்ரேலின் குறிக்கோள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை