உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு

முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: இஸ்ரேல் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 4வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரே இரவில் 80 நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ கமென்டர்கள் உயிரிழந்தனர். மேலும், ஈரானின் முக்கிய தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரையில் ஈரானில் 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் பொதுமக்கள் என்று ஈரான் கூறியுள்ளது.அதேபோல, இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல், ஈரான் இடையே ஒப்பந்தம் செய்து போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும், மத்தியஸ்த நாடுகளான கத்தார் மற்றும் ஓமனும், பேச்சுவார்த்தை நடத்துமாறு ஈரானை அறிவுறுத்தின. ஆனால், இதனை ஏற்க ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழுமையான பதிலடி கொடுத்த பிறகே, பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இருநாடுகளுக்கு இடையிலான போர் நீடித்தால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Thravisham
ஜூன் 17, 2025 15:09

இந்த வாரிசு காமேனி இருக்கும் வரை உலகத்துக்கே நிம்மதியில்லை.


Rani M
ஜூன் 16, 2025 19:36

ஏன் இந்த இனவெறி நீ மட்டும் நல்லா இருக்கணுமா


hasan kuthoos
ஜூன் 16, 2025 14:23

இந்த கேடு கேட்ட அரபுநாடுகள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சுக போக வாழ்க்கையில் மூழ்கி கிடைக்கும் வரை இதான் கதி


Sridhar
ஜூன் 16, 2025 14:03

கொமேனி இறந்தபிறகு ஈரான் யார் கைக்கு போகும்? அமெரிக்கா ஏற்கனவே பட்ட அனுபவத்தால், பக்கத்துல வர பயப்படுவாங்க. சீனாக்காரனுக்கு எண்ணெய் தேவையிருப்பதால் அவன் மூக்கை நுழைக்கலாம். உள்ளூர் மக்கள் இரண்டாக பிளவுபட்டு உள்நாட்டு கலவரம் வெடிக்க வாய்ப்புகளும் அதிகம் இருக்கு. அணு உலைகள் அரைகுறை நிலையில் இருப்பதால், அபாயகரமான சூழ்நிலைதான். இன்னும் சிலநாட்களில் நடக்கப்போகும் திருப்பங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கப்போவுது.


மூர்க்கன்
ஜூன் 16, 2025 16:45

இந்த முறை ?? வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்கிறார்கள் . இரான் மக்கள் இந்த அரை குறை முட்டாள்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து ?? கோழைகளை துவம்சம் செய்வார்கள்?? காகித புலிகளை கொழுத்துவார்கள்?? நிஜமான காட்டு சிங்கம் யார்னும் அது எப்படி வேட்டையாடும்னும் காட்டுவாங்கா?? துரோகிகளே தூரம் நில்லுங்கள்??


Sundaran
ஜூன் 16, 2025 13:51

விரைவில் நீயும் காலியாகி விடுவாய். இஸ்ரேலை அசைக்க உன்னால் முடியாது. எண்ணெய் வளம் இருக்கும் வரை தான் உன் ஆட்டம் தீர்ந்து விட்டால் பழையபடி பிச்சை எடுக்க வேண்டியது தான்


Kulandai kannan
ஜூன் 16, 2025 12:59

விரைவில் இந்த கொமேனி பற்றியும் breaking news வந்தாலும் வரும். ஈரான் மக்களே ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக செய்திகள் வருகின்றன. ஏழாம் நூற்றாண்டில் வெறும் 12 ஆண்டுகளில் இழந்த கலாசாரத்தைப் பாரசீகர்கள் மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.


Ramesh Sargam
ஜூன் 16, 2025 12:26

ஈரான் அழியவேண்டும். பாக்கிஸ்தான் ஒழியவேண்டும். பங்களாதேஷ் கடலில் மூழ்கவேண்டும். உலகில் அமைதி நிலவவேண்டும்.


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 12:40

கெடுவான் கேடு நினைப்பான். அவர்கள் திருந்த வேண்டும் என்று சொல்வது தான் சரி. அழிய வேண்டும் என்று நினைப்பது நல்லவர்களுக்கு அழகல்ல.


Anand
ஜூன் 16, 2025 13:01

அவர்கள் திருந்துவதற்கு நிறைய சந்தர்ப்பம் இருந்தும் / கொடுத்தும் திருந்தவில்லை, திருந்தவும் மாட்டார்கள், திருந்தவும் வாய்ப்பில்லை..


மூர்க்கன்
ஜூன் 16, 2025 12:13

விபரீத புத்தி.. விநாச காலத்தை உருவாக்கியதோ?? பாரதத்தில்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 16, 2025 13:49

ஆமாம் பாரதத்தில் தமிழகம் மாநிலத்தில் மக்களின் விநாசகால விபரீத புத்தி காரணமாக 2021ல் திமுகவிற்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்து விட்டார்கள். 2026ல் அதே விநாசகால விபரீத புத்தி தொடராமல் முற்றுப்புள்ளி வைத்தால் பரவாயில்லை.


மீனவ நண்பன்
ஜூன் 16, 2025 11:54

விநாச காலே விபரீத புத்தி …


Karthik Madeshwaran
ஜூன் 16, 2025 11:26

ஈரான் இழந்தது அதிகம். அதனால் அவர்கள் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள், உணர்ச்சி மிக்க கோபம் அறிவை மறைக்கிறது. அது மட்டுமில்லாமல் தன்னை விட சிறிய நாட்டிடம் தோற்று விட கூடாது என்றும், தன் நாட்டு மக்களிடம் அவ பெயர் பெற்று விட கூடாது என்ற காரணத்தினால் ஈரான் ஆட்சியாளர்கள் போரை நிறுத்த விரும்பவில்லை. இது மேலும் அழிவை நோக்கி தான் செல்லும். ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் வரை ஈரானால் வெல்ல முடியாது. ரஷ்யாவும், சீனாவும் வெறும் கண்டன அறிக்கைகள் கொடுப்பார்கள் தவிர மறைமுக உதவிகள் கூட செய்ய மாட்டார்கள். அல்லது தடாலடியாக ஈரானுக்கு உதவ வர மாட்டார்கள். மற்ற அரபு நாடுகளும், அமெரிக்காவிடம் கொண்டுள்ள வர்த்தகத்தை யோசித்து ஈரானுக்கு போரில் உதவ வர மாட்டார்கள். ரஷ்ய - உக்ரைன் போல அமெரிக்கா, இஸ்ரேல் தோற்க விடாமல் பின் வாசல் வழியாக உதவி செய்யும். இதை ஈரானும் கணித்திருக்கும். ஆனால் ஈரானுக்கு உதவ யாரும் வர மாட்டார்கள். அது தான் சோகம். ஈரான்க்கு வேறு வழி இல்லை. ஈரான் பணிந்து போக வில்லை என்றால் இழப்பது அதிகமாக இருக்கும்.


சமீபத்திய செய்தி