உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் போரில் வெற்றி பெறாது: ஜி7 மாநாட்டில் இஸ்ரேலை ஆதரிக்கிறார் டிரம்ப்!

ஈரான் போரில் வெற்றி பெறாது: ஜி7 மாநாட்டில் இஸ்ரேலை ஆதரிக்கிறார் டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றி பெறாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு. நடப்பாண்டிற்கான, 'ஜி - 7' நாடுகளின் உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றி பெறாது. மிகவும் தாமதமாகிவிட்டது. இனியும் தாமதிக்காமல், ஈரான் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். பதற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரானால் எந்த வகையிலும் நாங்கள் தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் பதிலடி கொடுக்கும். அமெரிக்க நலன்கள் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜி7 மாநாட்டில் இஸ்ரேலுக்கு ஆதரவாக டிரம்ப் பேசியுள்ளார். இஸ்ரேலில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இன்று ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுப்பு

இஸ்ரேல் -ஈரான் மோதலைத் தணிக்க ஜி7 தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் டொனால்டு டிரம்ப் அது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramaraj P
ஜூன் 17, 2025 07:12

ஈரான் ஜெயிப்பதை மற்ற துலுக்கன் நாடுகளே விரும்பாது. ஏனெனில் அதற்கு பிறகு ஈரான் துலுக்கன் நாடுகளின் தலைவன் ஆகி விடுவான் என்பதால். இங்கு மதம் எல்லாம் ஒன்றும் இல்லை அதிகாரம் மட்டுமே.


Kasimani Baskaran
ஜூன் 17, 2025 04:05

அவ்வளவு பெரிய நிலப்பரப்பு உள்ள நாட்டில் பல தலைவர்கள் சவுதியில் போய் ஒளிந்து கொண்டார்கள் என்பதை வைத்துப்பார்த்தால் ஈரான் ஜெயிக்காது என்று கண்டிப்பாக சொல்லலாம். தவிரவும் மொத்த நாடே இராணுவமாக செயல்படுவதால் இஸ்ரேல் தோற்கடிக்கப்படக்கூடிய நாடு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


Haja Kuthubdeen
ஜூன் 17, 2025 09:46

தவறு...இஸ்ரேல் ஒன்றும் அப்பாடக்கர் அல்ல..அமெரிக்காவின் நேரடி குழந்தை என்பதாலேயே அதற்கு இத்தனை பலம்.வல்லரசு அமெரிக்காவை தற்காலம் வெல்ல உலகில் எந்த நாடுமே இல்லை அப்படி இருக்க இரான் எப்படி அமெரிக்காவை வெல்ல முடியும்


Mani . V
ஜூன் 17, 2025 03:59

ஒவ்வொரு நாட்டுக்கும் இடையில் சிண்டு முடிந்து பிரச்சினையை உண்டு பண்ணுவதே வேலையாய் வைத்துள்ளது - நம்ம கருணா மாதிரி.


Nada Rajan
ஜூன் 16, 2025 23:05

இஸ்ரேல்.. ஈரான் மோதல் முற்றுகிறது..


புதிய வீடியோ