உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்!

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் காயம் அடைந்தாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், இதனால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறி கடந்த மாதம் அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ட்ரோன், ஏவுகணைகள் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் தலையீட்டால், இரு தரப்புக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான், ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகேர், நீதித்துறை தலைவர் மோசெனி எஜெய் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஈரான் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. இக்கூட்டம் நடந்த கட்டடத்தை குறிவைத்து, ஆறு ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது. உடனடியாக ஆபத்து கால வழியாக அங்கிருந்த அனைவரும் வெளியேறினர். இருப்பினும், அதிபர் மசூத் ஜெஜஸ்கியான் உட்பட சிலர் காயமடைந்தனர் என ஈரான் புரட்சிகரப்படையுடன் தொடர்புடைய அமைப்பு தற்போது செய்தி வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இஸ்ரேல் தன்னை கொல்ல சதி செய்வதாக மசூத் பெஜஸ்கியான் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SUBBU,MADURAI
ஜூலை 13, 2025 17:37

50,000 out of Irans 75,000 mosques have been closed due to a sharp decline in attendance. The collapse of the Islamic regime is only a matter of time!


SUBBU,MADURAI
ஜூலை 13, 2025 17:33

Last month alone, 133 people were hanged to death in Iran for opposing the Islamic regime. An all time high. But the International Criminal Court doesnot issue arrest warrants to Islamic regime leaders.


R Dhasarathan
ஜூலை 13, 2025 17:04

இந்த ரத்த வெறி எப்பொழுது தணியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை