உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி

இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து, 'ஆப்பரேஷன் ட்ரூ பிராமிஸ் 3' என்ற பெயரில், 250க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. ஈரான் தாக்குதலை இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தியது. டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் ராணுவ அமைச்சக தலைமையக கட்டடம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh
ஜூன் 21, 2025 07:34

தமிழக ஊடகங்கள் ஈரான் தாக்குதலை ஆகா ஓகோ என்று சொல்லி பொழைப்பு நடத்தி வருகின்றனர். உண்மையில் ஈரான் பெருத்த அழிவை சந்தித்து வருகிறது. யாராவது ஒரு இஸ்ரேல் நாட்டில் இருந்து வெளியேறுவதாக தகவல் உண்டா? ஆனால் ஈரானியர்கள் ஆயிரக்கணக்கில் பக்கத்து நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் மூட்டை கட்டி வருவதாக பல ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் இஸ்ரேல் படை தளபதிகள், விஞ்ஞானிகள் அல்லது ஆட்சியாளர்கள் யாராவது ஒருவர் போரில் பலியாகினரா? இல்லை. மாறாக ஈரானின் ஆட்சியில் முக்கிய பொறுப்பிலிருப்பவர்கள் இராணுவ மேலதிகாரிகள் விஞ்ஞானிகள் என்று தினம் தினம் பரலோகத்திற்கு அனுப்பப்பட்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் கொமேனியே ரஷ்யாவிற்குள் அடைக்கலம் புகுந்துவிட்டதாக செய்தி வருகிறது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் சுதந்திரமாக எல்லா இடமும் சுற்றி வருவதாக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. தமிழக ஊடகங்கள் ஈரானுக்கு முட்டு கொடுப்பதில் வல்லவர்கள்.


hasan kuthoos
ஜூன் 14, 2025 08:51

இஸ்ரேலிஇல் செத்தவர்களை சரியாக கணக்கு சொல்ல மாட்டார்கள், உண்மையை சொன்னால் உலக அளவில் அவர்களின் பில்டப் காலியாகி விடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை