உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாதுகாப்பு படையினருடன் மோதல்: ஈராக்கில் ஐ.எஸ்., பயங்கரவாத தலைவன் பலி

பாதுகாப்பு படையினருடன் மோதல்: ஈராக்கில் ஐ.எஸ்., பயங்கரவாத தலைவன் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாக்தாத்: அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவத்தினருடன் நடந்த மோதலில், சிரியா மற்றும் ஈராக்கிற்கான ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் கொல்லப்பட்டான். இதனை ஈராக் பிரதமர் உறுதி செய்துள்ளார்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு உலகத்தின் பல நாடுகளை அச்சுறுத்தி வந்தது. சிரியாவை அந்த அமைப்பினர் கட்டுப்படுத்தி வைத்து இருந்தனர். பிறகு, அமெரிக்காவின் தாக்குதலில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவர்களின் ஆதிக்கம் குறைந்தது. இருப்பினும், அந்த அமைப்பினர் பல நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.ஈராக் மற்றும் சிரியாவிற்கான தலைவனாக அபு கதிஜா என்றழைக்கப்படும் அப்துல்லா மகி முஸ்லே அல் ரிபியா என்ற பயங்கரவாதி செயல்பட்டு வந்தான். அந்த அமைப்பின் முக்கிய தலைவனாக கருதப்பட்டான். அந்த அமைப்பின் சர்வதேச தலைவராகக்கூடும் எனக் கூறப்பட்டு வந்தது.இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் அவன் கொல்லப்பட்டான். இதனை ஈராக் பிரதமர் முகமது ஷியா உறுதி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Swami Nathan
மார் 15, 2025 23:43

அது இராக் பிரதமர் னு போட்டோவிற்கு கீழே போட்டுருக்கே சரியாக பார்க்கவும்.


Annamalai Sadiyappan
மார் 15, 2025 22:20

மு க இருந்தால் நடத்தியிருப்பார்.


ராமகிருஷ்ணன்
மார் 15, 2025 13:16

பயலை பார்த்தா ஏதோ நாட்டுக்கு அதிபர் கணக்கா இருக்கான், கம்பிளியை போத்திகிட்டு, குல்லாஸ்களின் டிரஸ் போட்டு கிட்டு துப்பாக்கியை தூக்கி பிடிச்ச மாதிரி இருந்தால் தான் நம்புவோம்.


Appa V
மார் 15, 2025 02:35

இங்கே இரங்கல் கூட்டம் நடத்தாம இருக்கணும்