உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலை மீண்டும் மீண்டும் சீண்டும் ஹமாஸ்... பதிலடி நிச்சயம் என்கிறார் நெதன்யாகு

இஸ்ரேலை மீண்டும் மீண்டும் சீண்டும் ஹமாஸ்... பதிலடி நிச்சயம் என்கிறார் நெதன்யாகு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு, நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் நிலைகுலைந்து போன காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி ரயிட் சயித் உயிரிழந்தார். இந்த சூழலில் ராபாவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஹமாஸூக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்; அக்டோபர் மாதம் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். காசாவில் இருந்து போராட்டக்குழுவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதும், பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தை உருவாக்குவது தான் அதன் நோக்கம். போர் ஒப்பந்தத்தை மீறும் ஹமாஸூக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம், எனக் குறிப்பிட்டிருந்தது.இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒரு குழந்தை உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Rathna
டிச 25, 2025 17:56

இஸ்ரேல் காசாவை ஏற்கனவே பாலைவனமாக மாற்றி விட்டார்கள். தேவை இல்லாமல் ஹமாஸ் அப்பாவி பாலஸ்தீனிய குழந்தைகளை, முதியவர்களை தனது பொருளாதார வளர்ச்சிக்காக பலி கொடுக்க செய்கிறது. இன்னும் செய்யும்.


cpv s
டிச 25, 2025 17:23

this evil people must be eliminated from earth


தத்வமசி
டிச 25, 2025 12:37

இப்படி பேசியே மக்களை காவு கொடுக்க வேண்டியது. பிறகு இஸ்ரேல் ஒழிக என்று கத்த வேண்டியது.


திகழ்ஓவியன்
டிச 25, 2025 11:39

கொமேனி என்று சொல்லி பாருங்கள் தலை நெதன்யாகு எப்படி ஓட்டம் பிடிக்கிறார் என்று இனி அவர் சில்லறை விஷத்தை ஈரான் UAE குயித் கிட்ட காட்ட மாட்டார் , வாலை நறுக்கி விடுவார்கள்


ரஹ்மத், கீழக்கரை
டிச 25, 2025 12:47

உன் கதறல் அருமை. பத்தல..இன்னும்...


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 25, 2025 10:54

அமெரிக்காவின் பேச்சைக்கேட்டு பாம்பிற்கு இரக்கம் காட்டலாமா


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 25, 2025 10:51

இந்தியா மாதிரி மென்மையா இருந்தீங்கன்னா மூர்க்கம் இஸ்ரேலை விழுங்கிவிடும் ......


D Natarajan
டிச 25, 2025 10:37

70000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள். காரணம் ஹமாஸ். இது தொடர்ந்தால், ஹமாஸ் மட்டுமல்ல அனைவரும் மேலுலகம் போய்விடுவார்கள். பாலஸ்தீனியர்கள் ஒன்றுபட்டு, ஹமாஸை அழித்தால் மட்டும் அமைதி திரும்பும்.


Anand
டிச 25, 2025 10:28

இஸ்ரேல் ஹமாஸை அழித்தொழிக்காமல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தது மிகப்பெரிய தவறு.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 25, 2025 10:52

அமெரிக்காவின் அழுத்தமே காரணம் .......


சமீபத்திய செய்தி