உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 60 நாள் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

60 நாள் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ''60 நாள் காசா போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது'' என டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து, சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காசா விவகாரத்தில் இஸ்ரேலியர்களுடன் எனது பிரதிநிதிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.அதேநேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம். அமைதியைக் கொண்டுவர வேண்டும். மத்திய கிழக்கின் நன்மைக்காக, ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ALWAR
ஜூலை 06, 2025 08:05

அப்ப பணயக்கைதிகளின் விடுதலை இல்லாமலா ...நியாயம் அற்ற முடிவு


Kulandai kannan
ஜூலை 02, 2025 11:18

இனிமேல் போர் நிறுத்தம் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன?


Subburamu Krishnasamy
ஜூலை 02, 2025 09:56

Trump is the international Police Chief cum Chief Judge. He will deliver the judgements and all other countries must follow, other wise he will perform somersault.


ஆரூர் ரங்
ஜூலை 02, 2025 09:27

டிரம்ப் உம்மை நம்ப இன்னுமா ஆள் இருக்கிறாங்க?


Barakat Ali
ஜூலை 02, 2025 09:19

இஸ்ரேலுக்கு இது தெரியுமா ????


SUBBU,MADURAI
ஜூலை 02, 2025 08:23

Israel is sending Gaza back to Stone Age As usual


A viswanathan
ஜூலை 02, 2025 07:34

60 நாட்கள் அல்ல. நிரந்தரமாக போர் நிறுத்தம் வேண்டும்.இல்லை என்றால் உலகில் உள்ள அனைவருக்கும் நல்லதல்ல.