உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்; 13 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி

காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்; 13 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: காசாவில் மக்கள் தங்கியிருந்த பள்ளியின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 13 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.கடந்த ஆண்டு காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, இருதரப்பினரிடையே தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போர் காரணமாக தெற்கு காசாவில் உள்ள பள்ளி ஒன்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 13 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரு பழைய பள்ளிக்கூட வளாகத்திற்குள் செயல்பட்ட வரும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு மையத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பெண்களும், அவர்களின் குழந்தைகளும் மைதானத்தில் அமர்ந்திருந்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென 2 ராக்கெட் குண்டுகள் வந்து வெடித்தது,' என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். முன்னதாக, ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழ்வேள்
செப் 21, 2024 22:09

குல்லா முல்லா கும்பல் இன்னும் நிறைய இம்சை அனுபவிக்கும்.. ஹிந்து ஜனங்களை அந்த பன்றிகள் படுத்திய பாடு அப்படி


AMLA ASOKAN
செப் 22, 2024 09:15

மனித நேயமே வற்றிப்போய் , முஸ்லிம்கள் என்றாலே அழிக்கப்படவேண்டும் என்ற வக்கிர எண்ணம் எப்படி சில இந்துக்களுக்கு ஏற்பட்டது என்பது புரியாத புதிர் . பழைய சரித்திரத்தை மக்களுக்கு புகட்டுவதா அல்லது எதிர்கால இந்திய ஒற்றுமையை வலியுறுத்துவதா என்பதை அரசுகள் தீர்மானிக்க வேண்டும்


Bahurudeen Ali Ahamed
அக் 07, 2024 12:21

தமிழ்வேள், எவ்வளவு கேவலமான கருத்து உங்களுடையது. ஏன் உங்களுக்கு இவ்வளவு வன்மம்,


அப்புசாமி
செப் 21, 2024 21:57

யார் கோழை? பள்ளியில் ஒளிஞ்சிக்கிட்டா தாக்கமாட்டாங்கங்கற ஹிஸ்புல்லாக்களா? பள்ளிக்கூடத்தை தாக்கினா சின்ன குழந்தைகள் எதிர்த்து தாக்க மாட்டாங்கங்ற இஸ்ரேலா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை