உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவின் மிகப்பெரிய பகுதிகளை கைப்பற்றியது இஸ்ரேல்; வான்வழி தாக்குதலில் 23 பேர் பலி

காசாவின் மிகப்பெரிய பகுதிகளை கைப்பற்றியது இஸ்ரேல்; வான்வழி தாக்குதலில் 23 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: பாலஸ்தீனத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவில் மிகப்பெரிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அந்நாட்டிற்குள் புகுந்து தொடர் தாக்குதல் நடத்தியதுடன், 200க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஒன்றரை ஆண்டுகளாக இந்த போர் நீடித்து வரும் நிலையில், கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. ஹமாஸ் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், காசாவில் மிகப்பெரிய பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பாலஸ்தீனம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளது. மேலும், காசாவில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் கூறுகையில், 'காசாவில் உள்ள மிகப்பெரிய பகுதிகள் கைப்பற்றப்பட்டது. அந்தப் பகுதிகள் எங்களின் ராணுவம் கட்டுப்பாட்டில் உள்ளது. பாலஸ்தீனம் சிறுமைப்படுத்தப்பட்டு, தனித்து விடப்பட்டுள்ளது. பிணையக் கைதிகளை விடுவிக்கும் வரையிலோ அல்லது ஹமாஸ் பயங்கரவாதிகளை வீழ்த்தும் வரையிலோ இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும்,' எனக் கூறினார். இதனிடையே, விரைவில் பாலஸ்தீனத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Narayanan
ஏப் 10, 2025 14:01

வளமாக இருந்த பகுதிகளை அழித்து சுடுகாடாக்கி அதை கைப்பற்றி இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது ? அழிப்பது எளிது ஆக்குவது கடினம் .


மதுரை வாசு
ஏப் 10, 2025 19:45

தீவிரவாதம் வளமையாக இருக்கும் இடத்தை அழித்தால் மட்டுமே அமைதியான வாழ்க்கை வாழமுடியும். அதைதானே இஸ்ரேல் செய்கிறது.


sethu
ஏப் 10, 2025 12:17

முற்றிலும் உண்மைதான்


Rajah
ஏப் 10, 2025 11:41

அடிமைத்தனம், ஒற்றுமையின்மை, காட்டிக் கொடுப்பது என்பன தமிழர்களின் பிரதான குணங்கள் ஆகும். ஆகவேதான் தமிழர்களை தமிழர்கள் ஆள்வதில்லை. மலையாளிகளின் சூழ்ச்சியினால், தெலுங்கர்களின் வஞ்சகத்தால், ஆளுமை அற்ற தலைமையினால் இலங்கைத் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள்.


Sampath
ஏப் 10, 2025 11:22

இஸ்ரேல் திருப்பி கொடுப்பது ட்ரைலர். மெயின் பிகிடுறே இனிமே தான் இருக்கு.


Sampath Kumar
ஏப் 10, 2025 09:20

3 உலக போருக்கு உலகம் தயாராகி விட்டது மக்கள் தான் பாவம்


Sakthi,sivagangai
ஏப் 10, 2025 09:52

திமிரெடுத்துப் போய் சும்மா இருந்த இஸ்ரேலை தாக்கி இப்போது அவன் தூக்கிப் போட்டு மிதிக்கும் போது மட்டும் மக்கள் பாவமா


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 10, 2025 10:29

தேவையில்லாமல் போரை ஆரம்பித்து இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்தவுடன் ஏதோ போரில் வெற்றி பெற்றது போல் கொக்கறித்து இது இத்துடன் நிற்காது இஸ்ரேல் அழிக்கப்படும் என்று கூறியதன் விளைவு தான் இது. காசா மக்கள் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தை விட்டொழித்தால் மட்டுமே இந்த பிராந்தியத்தில் உயிர் பலி நிற்கும். போர் ஆயுதம் ஏந்தி தாக்குவது என்றைக்குமே ஒரு தீர்வு தராது. விடுதலை புலிகள் என்னும் தீவிர வாதிகளை இலங்கை தமிழர்கள் விட்டொழித்தால் தான் அங்கு தற்போது மக்கள் வாழ முடிகிறது.


Kumar Kumzi
ஏப் 10, 2025 12:47

அடச்சே மூர்க்கனின் கதறல் புரியுது பேரு இந்துவா இருக்கே


mindum vasantham
ஏப் 10, 2025 09:17

பூர்வ குடி ஹிந்துக்களை தான் இவர்கள் வம்பிழுப்பர்


hasan kuthoos
ஏப் 10, 2025 09:13

இஸ்ரேலோ அமெரிக்காவோ , வீரமான நாட்டிடம் போரிடமாட்டார்கள் , சோத்துக்கு வழியில்லாத ஆயுதம் இல்லாத அப்பாவிகளிடம் வீரத்தை காட்டுவார்கள் ,


ராஜாராம்,நத்தம்
ஏப் 10, 2025 09:55

உன்னை போன்ற மூர்க்கன்களை முற்றிலும் அழித்து ஒழிக்க வேண்டும். அப்போதுதான் அங்கு அமைதி நிலவும்.


Raman
ஏப் 10, 2025 09:59

Your comments reflect your poor mindset


jaya
ஏப் 10, 2025 10:15

அடேங்கப்பா, என்ன கண்டுபிடிப்பு


Rizwan
ஏப் 10, 2025 08:46

Isrelukku azhivu vegu tholaivil illai


Rizwan
ஏப் 10, 2025 08:45

Isreliya vanderigal Adaikalam thanda palastine


raja
ஏப் 10, 2025 08:14

சூப்பர் .. பாலஸ்தீனம் முழுவதையும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தால் தான் உலகில் அமைதி நிலவும் இஸ்ரேல் மக்களும் நிம்மதியாக வாழ முடியும்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை