உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா சரமாரி ராக்கெட் தாக்குதல்: அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா சரமாரி ராக்கெட் தாக்குதல்: அவசர நிலை பிரகடனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருவதால், அடுத்து 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் ராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்' அமைப்பினர் போரிட்டு வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தாக்குதல்

இந்நிலையில், ஹமாஸ் தலைவர் ஈரானில் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹில்புல்லா படையினர், 70 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவசர நிலை

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் போர் ராணுவ அமைச்சரவை கூட்டம் நடந்தது. அடுத்து 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. லெபனான் நாட்டில் இஸ்ரேலை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட வேண்டும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன் மூலம் காசாவில் நடத்தியதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி விட்டது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

பேசும் தமிழன்
ஆக 25, 2024 18:24

ஏமன் நாட்டில் இருந்து தாக்குதல் நடத்தினால்.... அது ஹிஸ்புல்லா தாக்குதல் என்று கூற முடியாது... ஏமன் நாடு நடத்திய தாக்குதலாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.... அதனால் அந்த நாட்டின் மீது தாராளமாக தாக்குதல் நடத்தலாம்.


M Ramachandran
ஆக 25, 2024 15:51

ஒரு கூட்டம் பூமி பாரம் குறைய தங்கள் ஜனத்தொகய்யய் குறைத்து கொண்டிருக்கு.


subramanian
ஆக 25, 2024 14:59

பாரத நாட்டு மக்கள் அனைவரும் இஸ்ரேல் மக்களுக்கு எப்போதும் ஆதரவு அளிப்பது உறுதி. தீவிரவாதிகள் அழிக்கப்பட்டு உலகம் நிம்மதி அடைய வேண்டும்.


Kasimani Baskaran
ஆக 25, 2024 13:35

தோண்டத்தோண்ட எண்ணெய் கிடைத்தால் விடுவார்களா. அனைத்தையும் தீவிரவாதம் மூலமே சாதித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். எண்ணெய் அரபிகளிடம் வாங்காமல் இருந்தால் போதுமானது.


நசி
ஆக 25, 2024 13:29

அண்ணாமலை சீமான் போன்ற தலைவர்கள் உருவாகுவது ரசினி பார்வைக்கு தெரியவில்லை ...தமிழருவி மணியன் ரசினி யை நம்பி மாற்றம் கொன்டு வர மோசம் போனது தமிழருவி வாயாலே கேட்டோம்... .அக்டோபர் 10 படம் ரீலீஸ் தியேட்டர் வேணடும்.. படத்துககு காசு ஓடிடி காசு விநியோகத்தில் ரெட் ஜயண்ட்கிட்ட காசுக்கு ..இந்த ஓப்பாரி...


Kumar Kumzi
ஆக 25, 2024 13:00

கற்கால காட்டேரிகள் அழிவை நோக்கி செல்கிறது உலக அமைதிக்கு தேவை காட்டேரிகளின் அழிவு


Gopalakrishnan
ஆக 25, 2024 12:41

ஆமாம்....இஸ்ரேல் ஒழிக்கவேண்டும்....கராணம் அது மக்களை சுட்டு கொன்று அழிக்கிறது மற்ற அமைதிமார்க நாடுகள் போண்டா வடை சுட்டுக்கொன்று இருக்கின்றனர்.....


Gopalakrishnan
ஆக 25, 2024 12:37

மக்களை அழிக்கும் தீவிரவாதி நாடுகள் அழிக்கபடவேன்டும்.... அதற்கு இஸ்ரேல் போன்ற ஆன்மைதனம் கொன்ட நாடுகள் ஒன்றினைய வேன்டும்....ஒரு குடும்பம் நன்றாயிருக்க ஒருவரை இழக்கலாம், ஒரு ஊர் நன்றாக இருக்க ஒரு குடம்பத்தை இழக்கலாம், ஒரு நாடு நன்றாக இருக்க ஒரு ஊரை இழக்கலாம், உலகம் அமைதியாக இருக்க தீவிரவாதி நாடுகளை இழக்கலாம்....தவறில்லை


Mohamed Sharif
ஆக 25, 2024 12:12

இஸ்ரேல் அழிய வேண்டும்


Kumar Kumzi
ஆக 25, 2024 14:20

உலகம் அமைதி பெற கற்கால காட்டேரிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்


பேசும் தமிழன்
ஆக 25, 2024 18:28

தேவையில்லை..... நீங்கள் அழிந்தால் போதும்.... உலகம் அமைதியாக இருக்கும்


NAGARAJAN
ஆக 25, 2024 12:10

இஸ்ரேல் ஒழிக்கப்பட வேண்டும். . அமெரிக்காவின் தயவில் அட்டூழியங்களை செய்யும் இஸ்ரேல் உலகிற்கு தேவையில்லை. .


பெரிய குத்தூசி
ஆக 25, 2024 14:20

ஓகே பாய்


Kumar Kumzi
ஆக 25, 2024 14:24

என்னடா காட்டேரிக்கு பெரு வித்தியாசமா இருக்கு ஹீஹீஹீ


பேசும் தமிழன்
ஆக 25, 2024 18:30

சரி பாய்..... தலையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்து விட்டீர்கள்


புதிய வீடியோ