உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ‛‛அவர்கள் கதையை முடித்துவிடுங்க : சர்ச்சையை ஏற்படுத்திய நிக்கி ஹாலே

‛‛அவர்கள் கதையை முடித்துவிடுங்க : சர்ச்சையை ஏற்படுத்திய நிக்கி ஹாலே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே, அந்நாட்டு ராணுவ ஏவுகணை ஒன்றில் ‛‛ அவர்கள் கதையை முடித்துவிடுங்க '' என கையெழுத்திடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் படையினர் இடையே கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் காசா பகுதியில் போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாலஸ்தீனியர்கள் மீது தொடர் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல் ராணுவம். இதுவரை 36 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சியைச் சேர்ந்த நிக்கிஹாலே 53 போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் இஸ்ரேல் சென்றார். அங்கு ராணுவ தளவாடங்களை பார்வையிட்டு அங்குள்ள ஏவுகணை ஒன்றில் ‛‛ அவர்கள் கதையை முடித்துவிடுங்கள்'' என இஸ்ரேலுக்கு ஆதரவாக குறிப்பு எழுதி கையெழுத்திட்டார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

GMM
மே 29, 2024 22:45

பிற மதத்தினர் மீது லவ் ஜிகாத், நில ஜிகாத். இந்த இலக்கு அடைய பிற மத மக்களை மத மாற்றம் செய்ய, அழிக்க போதிக்க கூடாது. அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் பலத்துடன் இல்லாவிட்டால், பிற மத மக்கள் அமைதியாக வாழ்வது கடினம். பிறரை அழிக்க மத ஒற்றுமை. அழித்த பின் எப்போதும் உள்நாட்டு போர்.


சாம்
மே 29, 2024 21:54

நல்ல விஷயம் தானே.. செஞ்சு விடுங்கப்பு...


Gokul Krishnan
மே 29, 2024 20:52

இங்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்வபவர்கள் அதன் உண்மை முகம் தெரியாமல் பதிவு செய்கிறார்கள் அமெரிக்கா என்றைக்கும் நம்ப தகுந்த நாடு கிடையாது நேரில் எதிர்ப்பதை விட புற முதுகில் குறுக்கு வழியில் குத்துவது அதிகம் நிக்கி ஹாலே போன்றோர் வெற்றி பெற கூடாது


Senthil K
மே 29, 2024 21:11

அடுத்தவன் ஏமாந்த போது... திடீர் தாக்குதல் நடத்தி.. பல பேர்களை கடத்திப் போனது.. பயங்கரமான வீரம்... அதானே..மூர்க்கப் பதரே??


பேசும் தமிழன்
மே 29, 2024 20:49

சண்டையை ஆரம்பித்த ....இன்னும் பணயகைதிகளை விடுவிக்காமல் இருக்கும் .....ஹமாஸ் பயங்கரவாதிகளை பற்றி எவரும் பேச மாட்டேங்கிறார்கள்.


தமிழ்வேள்
மே 29, 2024 19:54

நிக்கி ஹாலே யின் கருத்து மிகச்சரியான ஒன்றே...அவர் மட்டும் அல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் மற்றும் மக்களின் கருத்தும் அதுவே...கேரி ஆன் டியர் இஸ்ரேல்.பெஸ்ட் ஆஃப் லக்...


N Sasikumar Yadhav
மே 29, 2024 19:44

பயங்கரவாத கும்பல்களை அழித்து உலகம் அமைதியாக இருக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ